For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஜூஸ் கசப்பா இருந்தாலும், உடல் எடையை சீக்கிரம் குறைச்சிடும் தெரியுமா?

|

நீங்கள் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை வெளியேற்றி, ஸ்லிம்மான உடலமைப்பைப் பெற நினைக்கிறீர்களா? அப்படியானால் அன்றாடம் ஜிம் அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யுங்கள். ஒருவேளை உங்களுக்கு ஜிம் செல்வதற்கு நேரம் இல்லாவிட்டால், உடல் எடையைக் குறைக்க உதவும் வேறு பல வழிகளை முயற்சித்துப் பாருங்கள். அதுவும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், அதே சமயம் உடல் எடையைக் குறைக்க உதவும் வழிகளைத் தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள்.

அதில் சிறப்பான ஓர் எளிய வழி தான் பாகற்காய் ஜூஸ். இதனால் உடல் ஆரோக்கியம் நினைத்திராத அளவில் மேம்படுவதோடு, எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் எடையை இயற்கை வழியில் குறைக்க உதவியாக இருக்கும். பாகற்காய் கசப்பாகத் தான் இருக்கும். ஆனால் எவ்வளவு தான் கசப்பாக இருந்தாலும், அந்த கசப்புத்தன்மைக்கு ஏற்ப அதில் நன்மைகளும் அடங்கியுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாகற்காய் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?

பாகற்காய் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது?

பாகற்காயில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள், இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க உதவுகிறது. மேலும் பாகற்காய் இரத்தத்தில் அதிகளவு சர்க்கரையை உறிஞ்சாமல் தடுக்கும். மேலும் பாகற்காய் கணையத்தில் உற்ற பீட்டா செல்களின் அளவை அதிகரிப்பதற்கு நல்லது. இந்த செல்கள் இன்சுலினை சுரப்பதற்கு மிகவும் அவசியமானதாகும். எப்போது உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறதோ, அப்போது இரத்த சர்க்கரை அளவு குறையும். இதன் விளைவாக உடல் எடை குறைய உதவி, ஸ்லிம்மான உடலைப் பெறச் செய்யும்.

பாகற்காய் ஜூஸை காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டும் தயாரிக்கலாம் அல்லது வெறும் பாகற்காய் கொண்டும் தயாரித்துக் குடிக்கலாம். இப்போது அந்த பாகற்காய் ஜூஸ் தயாரிக்கும் இரண்டு வழிகளையும் காண்போம்.

வழி #1

வழி #1

தேவையான பொருட்கள்:

* பாகற்காய் - 1

* செலரி - 2 குச்சி

* ஆப்பிள் - 2-3

* வெள்ளரிக்காய் - 1

* எலுமிச்சை - 1

செய்முறை:

* முதலில் பாகற்காயின் விதைகளை நீக்கிவிட்டு, நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.

* பின் இதர பழங்கள் மற்றம் காய்கறிகளை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

* ஒருவேளை ஜூஸ் மிகவும் கசப்பாக இருப்பது போன்று தெரிந்தால், அத்துடன் வேறு ஏதேனும் பழங்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

வழி #2

வழி #2

ஜூஸ் தயாரிக்கும் முறை:

* பாகற்காயின் தோலை கத்திப் பயன்படுத்தி நீக்கிவிட்டு, நீரில் சில நிமிடங்கள் வைத்து கழுவுங்கள். பின் அதை வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கிவிடுங்கள்.

* பின்பு சிறு துண்டுகளாக்கி, ஒரு பௌல் நீரில் போட்டு 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.

* பின் அதில் 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளுங்கள்.

* பிறகு அதை ஜூஸரில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். பின் அதில் சிறிது எலுமிச்சை அல்லது ஆப்பிள் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* வேண்டுமானால், சுலைக்கு சிறிது மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பாகற்காய் ஜூஸை தயாரித்த உடனேயே குடிப்பதே நல்லது. இந்த ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், உடல் எடையை விரைவில் குறைக்கலாம். இப்போது பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காண்போம்.

மெட்டபாலிசத்திற்கு உதவும்

மெட்டபாலிசத்திற்கு உதவும்

பாகற்காய் கல்லீரலில் பித்த நீரின் உற்பத்தியைத் தூண்ட உதவும். இது கொழுப்புக்களை வளர்சிதை மாற்றம் செய்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

கொழுப்புக்களை உடைத்தெறியும்

கொழுப்புக்களை உடைத்தெறியும்

உடலில் உள்ள கொழுப்புக்களானது கொழுப்பு அமிலங்களின் சங்கிலியால் ஆனது. பாகற்காயில் உள்ள நொதிகள், கொழுப்புக்களை உடைத்தெறிந்து, ப்ரீ ஃபேட்டி அமிலங்களாக்கும். இந்த வழியில் உடல் எடையைக் குறைக்க பாகற்காய் உதவும்.

நீர்ச்சத்து நிறைந்தது

நீர்ச்சத்து நிறைந்தது

பாகற்காயில் 90% நீர்ச்சத்து உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்துவதில் உதவி புரியும். மேலும் பாகற்காயை உடலில் நீர்ச்சத்தின் அளவை அதிகரித்து, உடல் வறட்சி அடையாமல் தடுக்கும் மற்றும் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற உதவும். இந்த வகையில் உடல் எடை குறைவதில் உதவி புரியும்.

கலோரிகள் குறைவு

கலோரிகள் குறைவு

100 கிராம் பாகற்காயில் 34 கலோரிகள் தான் உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், பாகற்காயை உணவில் அதிகம் சேர்ததுக் கொள்வதன் மூலம், உடல் எடையை சற்று வேகமாக குறைக்கலாம்.

இன்சுலின் அளவை நடுநிலையாக்கும்

இன்சுலின் அளவை நடுநிலையாக்கும்

கணைய பீட்டா செல்களின் உற்பத்திக்கு பாகற்காயை உதவி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். இன்சுலின் என்னும் ஹார்மோன், இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள அவசியமானது. அதே சமயம் இன்சுலின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் பாகற்காய் உதவுகிறது. ஒருவரது உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது, இது பசியை அதிகரித்து, உணவின் அளவையும் அதிகரிக்கும்.

குறிப்பு

குறிப்பு

பாகற்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதே நல்லது. இப்படி குடித்தால், அதன் முழு நன்மைகளையும் பெற முடியும். ஒருவேளை உங்களுக்கு பாகற்காய் ஜூஸ் மிகவும் கசப்பாக இருப்பது போல் இருந்தால், அத்துடன் தேன், கேரட் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ் போன்ற எதையாவது சேர்த்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், பாகற்காய் ஜூஸ் உடன் பச்சை ஆப்பிள் ஜூஸ் சேர்த்துக் கொள்ளலாம். பாகற்காய் ஜூஸை குடித்து, 1 மணிநேரம் வரை, எந்த ஒரு உணவுப் பொருளையும் உட்கொள்ளக்கூடாது. பாகற்காய் ஜூஸின் முழு நன்மைகளையும் பெற நினைத்தால், தினமும் 30 நிமிட உடற்பயிற்சியை தவறாமல் மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bitter Gourd Juice for Weight Loss: How Does it Work?

Are you looking for some means to get rid of a few calories from your body and get a slim and fit figure? Drinking bitter gourd juice is an excellent option. It is healthy for your body and helps in losing weight naturally without causing any side effects.
Story first published: Monday, April 16, 2018, 13:18 [IST]
Desktop Bottom Promotion