For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதம் ஒருமுறை இந்த டயட்டை ஃபாலோ பண்ணுனா, குடல் எப்பவும் சுத்தமா இருக்கும் தெரியுமா?

|

ஒருவருக்கு குடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். இத்தகைய குடல் ஒட்டுண்ணிகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடியது. அதில் குடல் சுவர் பகுதிளில் தான் ஒட்டுண்ணிகள் வாழ்ந்து கொண்டிருக்கும். இந்த ஒட்டுண்ணிகள் சருமத்தின் வழியே எளிதில் உடலினுள் நுழைந்து, உள்ளுறுப்புக்களை பாதிப்படையச் செய்கிறது. மேலும் இந்த ஒட்டுண்ணிகள் இருவேறு வழிகளின் மூலமும் உடலினுள் நுழைகிறது. அவையாவன:

* அசுத்தமான குடிநீர்

* சரியாக வேக வைக்கப்படாத இறைச்சி

ஒருவரது வயிற்றிள் ஒட்டுண்ணிகள் இருக்கும் வரை, அவர்கள் ஆரோக்கியமானவராக இருக்க முடியாது. எனவே சிறுகுடல், பெருங்குடல் போன்ற அனைத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். செரிமான மண்டலத்தின் ஒரு பகுதி தான் பெருங்குடல். இது உணவில் உள்ள நீர், வைட்டமின்கள், உப்பு மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதன் பின் செரிமானமாகாத உணவை சிறுகுடலில் செரிக்கச் செய்து, திடக்கழிவை வெளியேற்றும்.

ஆனால் நம் உடலில் பல நேரங்களில் குடல் சரியாக செயல்படுவதில்லை. எப்போது பெருங்குடல் சரியாக செயல்படுவதில்லையோ, அப்போது அது அனைத்து டாக்ஸின்களையும் வெளியேற்றுவதற்கு பதிலாக உறிஞ்ச செய்கிறது. இதன் விளைவாக சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் மலச்சிக்கல், வயிற்று உப்புசம், தலைவலி, உடல் பருமன், வாய்வுத் தொல்லை, சோர்வு, குறைவான உடல் ஆற்றல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

இந்த பிரச்சனைகள் அனைத்து செரிமானமாகாமல் உணவுகள் வயிற்றில் இருக்கும் போது ஏற்படக்கூடியவையாகும். அதாவது எப்போது ஒருவர் பதப்படுத்தப்பட்ட உணவுகள், கெமிக்கல் கலந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறோமோ, அப்போது அந்த உணவுகள் செரிமானமாகாமல் இருக்கும்.

இத்தகைய உணவுகள் பெருங்குடலில் சளியை உருவாக்கி, அதிகளவிலான டாக்ஸின்களையும் உற்பத்தி செய்யும். அதன் விளைவாக உடலின் இதர உறுப்புக்களிலும் டாக்ஸின்கள் தேங்கி, அந்த உறுப்புக்களின் செயல்பாடும் பாதிக்கப்பட்டு, பல்வேறு தீவிர பிரச்சனைகளால் அவஸ்தைப்படக்கூடும்.

எனவே இத்தகைய பிரச்சனைகளை எதுவும் வராமல் இருப்பதற்கு ஒருவர் மாதத்திற்கு ஒருமுறையாவது குடலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 7 நாள் டயட் திட்டத்தை ஒருவர் மாதத்திற்கு ஒருமுறை மேற்கொண்டால், குடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட்டு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Day Natural Colon Cleanse Diet Plan

Detoxing is a great way to improve the way your internal organs perform. To enhance your body’s vitality here is a safe and 100% natural diet plan for you to follow for 7 days.
Story first published: Monday, February 12, 2018, 12:14 [IST]
Desktop Bottom Promotion