For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையை குறைக்கும் கோதுமைப் புல் ஜூஸ் !! அற்புத வைத்தியம்

கோதுமைப் புல் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள், உடல் எடையை எப்படி கோதுமை புல் ஜூஸ் மூலம் குறைக்கலாம்,

By R. Suganthi Rajalingam
|

நீங்கள் நிறைய பூங்காவில் ஜாக்கிங் போகும் போது பார்த்து இருப்பீர்கள். அங்கே நிறைய பேர் கோதுமைப் புல் ஜூஸை விற்பனை செய்து கொண்டு இருப்பர். அதை கொஞ்சம் ஆராய்ந்து உற்று நோக்கினால் அந்த கோதுமைப் புல் ஜூஸில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் இருப்பது தெரிய வரும்.

இதில் உள்ள நன்மைகளில் முக்கியமானது உடல் எடை குறைத்தல். ஒரு கிளாஸ் கோதுமைப் புல் ஜூஸை குடித்தால் போதும் உங்கள் உடல் எடையில் எதிர்பார்க்காத மாற்றத்தை காண முடியும்.

இந்த கோதுமைப் புல் ஜூஸில் குளோரோபைல், விட்டமின் ஏ, சி மற்றும் ஈ, கால்சியம், இரும்புச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

How Wheatgrass Juice Helps You To Lose Weight; Know The Preparation Method

இந்த எண்ணிலடங்காத நன்மைகளை கொண்டுள்ள கோதுமைப் புல் மார்க்கெட்டில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருளும் கூட. அதே நேரத்தில் இதை எளிதாக வீட்டில் கூட வளர்த்து பயனடையலாம்.

உங்கள் உடல் எடையை குறைக்க கஷ்டப்படுபவர்களுக்கு கண்டிப்பாக இந்த ஜூஸ் நல்ல பலனை கொடுக்கும். முதலில் குடிக்கும் போது பிடிக்காமல் இருந்தாலும் பழகின பிறகு இந்த ஜூஸின் டேஸ்ட் பிடித்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோதுமைப் புல் ஜூஸ் எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறது:

கோதுமைப் புல் ஜூஸ் எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறது:

கோதுமைப் புல்லில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் இதிலுள்ள செலினியம் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இவை நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. இந்த தைராய்டு சுரப்பி தான் நமது உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

எனவே ஒரு கிளாஸ் கோதுமைப் புல் ஜூஸை குடித்தால் நமது உடலில் உள்ள தைராய்டு சுரப்பியின் செயல்பாடு மேம்பட்டு அதன் மூலம் நமது உடல் எடையும் கட்டுக்குள் வந்து விடும்.

பசியை குறைக்கிறது

பசியை குறைக்கிறது

நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அனைத்து ஊட்டச்சத்துகளும் கோதுமைப் புல்லில் அடங்கியுள்ளது. எனவே நமது உடல் தேவையற்ற ஜங்க் ஃபுட்களை நாடிச் செல்லாது. நமது உடல் எடை அதிகரிக்க இவை தான் முக்கியமான காரணங்களாக உள்ளது.

உங்கள் உடலில் மக்னீசியம், இரும்புச் சத்து, ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்று கிடைத்த சத்துக்கள் உங்கள் உடலில் நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்கிறது. இவை கெட்ட கொழுப்புகளை கரைத்து விடுகிறது.

எனவே தினமும் வெறும் வயிற்றில் கோதுமை புல் ஜூஸை குடித்தால் உங்கள் அதிகமான பசியை போக்கி உடல் எடையையும் குறைக்கும்.

சரி வாங்க இந்த அற்புதமான கோதுமைப் புல் ஜூஸை எப்படி தயாரிப்பது என்பதை இப்போது காண்போம்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

ஒரு கொத்து கோதுமை புல் - 4-6 அங்குலம் நீளம்

1/2 கிளாஸ் தண்ணீர்

சில துளிகள் லெமன் ஜூஸ் (விருப்பப்பட்டால்)

 செய்முறை

செய்முறை

ஒரு கொத்து கோதுமை புல்லை எடுத்து அதை 2-3 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்

நறுக்கிய கோதுமைப் புல்லை மிக்ஸி சாரில் போடவும்.

இப்பொழுது அதனுடன் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.

அதை நன்றாக அரைத்து கொள்ளவும்

பிறகு ஜூலை மட்டும் வடிகட்டி கொள்ளவும்

இந்த டேஸ்ட் பிடிக்கவில்லை என்றால் அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸை சேர்த்து கொள்ளவும்

கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

கோதுமைப் புல் ஜூஸை கண்டிப்பாக காலையில் வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு குடித்தால் குமட்டல் ஏற்பட வாய்ப்புள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Wheatgrass Juice Helps You To Lose Weight; Know The Preparation Method

How Wheatgrass Juice Helps You To Lose Weight; Know The Preparation Method
Story first published: Friday, December 29, 2017, 12:37 [IST]
Desktop Bottom Promotion