படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியவில்லையா? அப்ப இந்த செக்ஸ் டயட்டை ஃபாலோ பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியாமல் போவது. அதோடு இந்த பிரச்சனையை வெளிப்படையாக சொல்லவும் முடியாது. பாலியல் பிரச்சனையை சந்திப்பதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் தான்.

Sexual Diet For Better Performance

கீழே கொடுக்கப்பட்டுள்ள டயட்டை ஒருவர் பின்பற்றி வந்தால், படுக்கையில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தடுக்கலாம். மேலும் ஆசனங்கள் செய்வதன் மூலமும் செக்ஸ் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் அகலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும். மேலும், ஸ்ட்ராபெர்ரி இதயத்திற்கு மிகவும் நல்லதும் கூட.

பசலைக் கீரை

பசலைக் கீரை

பசலைக் கீரையில் அதிகப்படியான வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் கனிமச்சத்துகள் உள்ளன. எனவே, இவை உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவும்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ் பாலுணர்வை தூண்டுவதில் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். இதனை வேக வைத்து சீஸ் சேர்த்து சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலில் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு அதிகரிக்கும். இதனால் படுக்கையில் சிறப்பாக செயல்பட முடியும்.

கடல் சிப்பிகள்

கடல் சிப்பிகள்

கடல் சிப்பிகளில் ஜிங்க் சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இதனை உட்கொண்டால், அது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரித்து, படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவி புரியும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

செக்ஸ் வாழ்க்கை இன்னும் காரசாரமாக இருக்க வேண்டுமானால், டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் உள்ள பீனைல்எத்திலமைன், உடலில் எண்டோர்பின்களின் அளவை அதிகரிக்கும்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

ரெட் ஒயின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே சமயம் ரெட் ஒயின் பாலுணர்ச்சியைத் தூண்டி, செக்ஸ் வாழ்க்கையை மேம்படுத்தவும் செய்யும். ஆகவே காதல் வாழ்க்கை சிறப்பாக அமைய ரெட் ஒயினை அளவாக குடியுங்கள்.

பத்மாசனம்

பத்மாசனம்

வெறும் உணவுகள் மட்டும் படுக்கையில் சிறந்து செயல்பட உதவாது. அவ்வப்போது ஆசனங்களையும் செய்ய வேண்டும். அதிலும் பத்மாசனம் செய்தால், அது ஆண்களின் விந்தணுவை வலிமைப்படுத்தும். பெண்கள் இந்த ஆசனத்தை செய்தால், மாதவிடாய் கோளாறுகள் நீங்குவதோடு, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும்.

பஸ்சிமோத்தாசனம்

பஸ்சிமோத்தாசனம்

உடலுறவு கொள்வதில் பிரச்சனையை சந்திப்பவர்கள், இந்த யோகாசனத்தை செய்து வந்தால், இனப்பெருக்க உறுப்புக்களின் செயல்பாடு மேம்பட்டு, படுக்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Sexual Diet For Better Performance

In sex diet, you can include some healthy aphrodisiacs and some yoga asanas to improve sex.
Story first published: Wednesday, April 26, 2017, 17:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter