For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுல நீங்க எந்த வகைன்னு சொல்லுங்க... எப்படி குறைப்பது-ன்னு நாங்க சொல்றோம்...

இங்கு 6 வகையான உடல் கொழுப்புக்களும், அவற்றைக் குறைக்கும் எளிய வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

|

தற்போது உடல் பருமன் பலரும் சந்திக்கும் முதன்மையான பிரச்சனைகளுள் ஒன்று. ஒருவருக்கு உடல் பருமனடைய பல காரணங்கள் உள்ளன. உடல் பருமனைக் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன. அந்த வழிகளால் சிலருக்கு தீர்வு கிடைக்கலாம் மற்றும் சிலருக்கு தீர்வு கிடைக்காமலும் போகலாம்.

இதற்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் சோதித்தனர். அந்த சோதனையில் உடல் பருமன் கொண்ட சுமார் 4,000 இளைஞர்/இளைஞிகள் கலந்து கொண்டனர். அவர்களை 6 வகைகளாக ஆராய்ச்சியாளர்களால் பிரிக்க முடிந்தது. அதில்,

See Where You’re Getting Fat and We’ll Tell You How to Fix It

Image Courtesy: davidwolfe

* ஆரோக்கியமான இளம் பெண்கள் - இந்த வகையில் உடல் பருமனுடைய பெண்களுள் சிலர் டைப்-2 சர்க்கரை நோயைக் கொண்டிருந்தனர்.

* அதிகம் குடிக்கும் ஆண்கள் - முன்பு கூறியது போன்றே, ஆனால் அதிகளவு மது அருந்தும் பழக்கம் கொண்டிருந்தனர்.

* மகிழ்ச்சியற்ற நடுத்தர வயதினர் - இந்த வகையில் பெரும்பாலும் பெண்கள் தான் உள்ளனர். அதுவும் மோசமான மனநல ஆரோக்கியத்தைக் கொண்டிருந்தனர்.

* செழிப்பான மற்றும் ஆரோக்கியமான முதியவர்கள் - இந்த வகையில் உள்ளோரின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் நன்றாக இருந்தது. ஆனால் இவர்களிடம் மதுப்பழக்கம் இருந்ததுடன், உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தது.

* உடலளவில் பாதிக்கப்பட்டிருந்தாலும், மனதளவில் சந்தோஷமாக இருக்கும் முதியவர்கள் - இந்த வகையினர் நாள்பட்ட நோய்களான ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் நோயைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் மனநிலை நன்றாக இருந்தது.

* மோசமான ஆரோக்கியம் - இந்த வகையினர் ஏராளமான நாள்பட்ட நோயால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஆகவே ஒருவர் தங்களது உடல் பருமனைக் குறைக்க முயற்சிக்கும் முன், அதற்கான காரணத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதை நன்கு தெரிந்து கொண்டாலே, சரியான சிகிச்சையின் மூலம் உடல் பருமனை எளிதில் குறைக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பு விநியோக முறை

கொழுப்பு விநியோக முறை

உடலில் உள்ள கொழுப்பு விநியோகத்தை 2 வகைகளாக பிரிக்கலாம். அவை ஆன்ராய்டு மற்றும் கைனாய்டு

* ஆன்ராய்டு வகை கொழுப்பு விநியோக முறை பெண்களை விட ஆண்களிடம் அதிகம் வெளிப்படும். அதாவது இந்த வகையினர் ஆப்பிள் வடிவ உடலமைப்பைக் கொண்டிருப்பர்.

* கைனாய்டு வகை கொழுப்பு விநியோக முறை பெண்களிடமே பொதுவாக வெளிப்படும். இந்த வகையினர் பேரிக்காய் வடிவ உடலமைப்பைக் கொண்டிருப்பர்.

கீழே 6 வகையான உடல் கொழுப்புக்களும், அவற்றைக் குறைக்கும் எளிய வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

மேல் உடல் (ஆன்ராய்டு)

மேல் உடல் (ஆன்ராய்டு)

இத்தகையவர்கள் அளவுக்கு அதிகமாக உண்பதோடு, குறைவாக உடற்பயிற்சியை செய்பவர்களாக இருப்பவர். இவர்கள் இனிப்புக்களை முற்றிலும் தவிர்ப்பதோடு, தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை உடல் எடை குறையாமலேயே இருந்தால், உடனே ஃபிட்னஸ் நிபுணரை அணுகுங்கள்.

வயிற்றின் மையப் பகுதி (ஆன்ராய்டு)

வயிற்றின் மையப் பகுதி (ஆன்ராய்டு)

வயிற்றின் மையப் பகுதியில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகம் இருந்தால், அவர்கள் மன அழுத்தம், மன இறுக்கம் மற்றும் பதற்றம் கொண்டவர்களாக இருப்பர். இத்தகையவர்கள் தங்களது வயிற்றுக் கொழுப்பை குறைப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் ரிலாக்ஷேசன் டெக்னிக்குகளை முயற்சிக்க வேண்டும்.

கீழ் உடல் (கைனாய்டு)

கீழ் உடல் (கைனாய்டு)

பெரும்பாலான பெண்கள் தான் இம்மாதிரியான உடலமைப்பைக் கொண்டிருப்பார்கள். உடலின் கீழ் பகுதியில் சேரும் கொழுப்புக்களைக் குறைப்பது என்பது மிகவும் கடினம். எனவே இத்தகையவர்கள் கால் பயிற்சிகளையும், கார்டியோவாஸ்குலர் பயிற்சிகளையும் மேற்கொள்வது நல்லது. இதனால் உடலின் கீழ் பகுதியில் உள்ள கொழுப்புக்கள் நன்கு கரையும். ஒருவேளை எந்த மாற்றமும் தெரியாவிட்டால், ஃபிட்னஸ் நிபுணரை அணுகுங்கள்.

தொப்பை (ஆன்ராய்டு)

தொப்பை (ஆன்ராய்டு)

இந்த வகையினருக்கு அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருப்பதோடு, சுவாச பிரச்சனையும் இருக்கும். இத்தகையவர்கள் மது அருந்துவதை தவிர்ப்பதோடு, மூச்சு பயிற்சிகளை தவறாமல் அன்றாடம் செய்ய வேண்டும்.

கீழ் உடல் மற்றும் கால் பகுதி (கைனாய்டு)

கீழ் உடல் மற்றும் கால் பகுதி (கைனாய்டு)

கர்ப்பிணிப் பெண்களுக்கு தான் இந்த உடலமைப்பு இருக்கும். இவர்களுக்கு கால்கள் வீக்கமடையும். எனவே இத்தகையவர்கள் வாட்டர் ஏரோபிக்ஸ் மேற்கொள்வது மிகவும் நல்லது. இதனால் கால் மற்றும் பாதங்களில் உள்ள அழுத்தம் குறையும்.

பெரிய தொப்பையுடன் வீங்கிய முதுகுப் பகுதி (ஆன்ராய்டு)

பெரிய தொப்பையுடன் வீங்கிய முதுகுப் பகுதி (ஆன்ராய்டு)

இம்மாதிரியான கொழுப்புத் தேக்கம் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்களுக்கு தான் வரும். இத்தகையவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. அதோடு இவர்கள் இரத்த சர்க்கரை அளவை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியது அவசியம். முக்கியமாக இவர்கள் நீண்ட நேரம் பட்டினி இருக்கக்கூடாது. அவ்வப்போது சிறு அளவில் உணவை உண்ண வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

See Where You’re Getting Fat and We’ll Tell You How to Fix It

Here are the 6 major types of body fat and the best way to get rid of it.
Desktop Bottom Promotion