For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குண்டா இருக்கமேனு சாப்பிடாம இருக்காதீங்க! இந்த உணவுகளை நல்லா சாப்பிடுங்க!

உடல் பருமனை குறைக்க சில எளிய வழிகள்

By Lakshmi
|

நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகளில் இருந்து நல்ல கொழுப்புகளும் கிடைக்கின்றன. கெட்ட கொழுப்புகளும் கிடைக்கின்றன. உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகம் இருப்பது உடல் ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிப்பதோடு உடல் எடையை அதிகரித்து தோற்றத்தையும் கெடுக்கும்.

How to Reduce Weight Using These Foods

உடல் எடையை நீங்கள் குறைக்க நினைத்தால், சாப்பிடாமல் இருப்பது சிறந்த தீர்வாக அமையாது. ஆரோக்கியமான உணவுகளை உண்பதன் மூலம் உடல் எடையை குறைப்பதே சிறந்த தீர்வாக அமையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. அவோகேடா

1. அவோகேடா

அவோகேடாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. இது கொழுப்புகளை கரைப்பதன் மூலம் உடல் எடையையும் குறைக்கிறது. அவோகேடாக்கள் உடலில் அதிகளவு சக்கரை சேர்வதை தடுப்பதன் மூலம் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கிறது.

2. சால்மன் மீன்

2. சால்மன் மீன்

சால்மன் மீன் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஒமேகா 3 கொழுப்பு உள்ளது இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் புரோட்டினும் அதிகளவில் உள்ளது. இந்த புரோட்டின் பசியை குறைக்கும் ஹார்மோன்களை தூண்டிவிடுகிறது.

மேலும் இதில் உள்ள புரோட்டின் தேவையில்லாத சதைகளை குறைத்து உங்களை அளவான உடலுடன் காட்ட உதவுகிறது.

3. நட்ஸ்

3. நட்ஸ்

நட்ஸ் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்க தானே செய்யும் என கேட்கிறீர்களா? ஆர்கானிக் நட்ஸ்களை சாப்பிடுவதன் மூலம் பசி கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் நீங்கள் குறைவாக சாப்பிட முடிவதால் உடல் எடை குறைக்கப்படுகிறது.

ஆர்கானிக் அல்லாத மற்றும் உப்பு, காரம் சேர்த்து சுவையூட்டப்பட்ட நட்ஸ்களை சாப்பிட்டால் பலன் கிடைக்காது.

4. க்ரீன் டீ

4. க்ரீன் டீ

க்ரீன் டீ உங்களது எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. க்ரீன் டீயில் அதிகளவு ஆண்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. இதனை தினமும் 3-4 முறை குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும்.

க்ரீன் டீ குடிப்பதால் உடலில் உள்ள பசியை தூண்டு ஹார்மோன்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் இதனை சக்கரை, பால் சேர்க்காமல் குடித்தால் தான் நல்ல பலன் கிடைக்கும்.

5. ஆலிவ் ஆயில்

5. ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் உங்களது மளிகை லிஸ்டில் முக்கியமாக இருக்க வேண்டும். அதற்கான காரணம் என்னவென்றால் இது மற்ற எண்ணெய்களை காட்டிலும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

இது மூளைக்கு செல்லும் பசி உணர்வை தூண்டும் சமிக்கைகளை கட்டுப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு போதிய அளவு மட்டுமே பசி எடுக்கும். இதனால் அளவாக சாப்பிட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Reduce Weight Using These Foods

How to Reduce Weight Using These Foods
Story first published: Wednesday, July 26, 2017, 16:27 [IST]
Desktop Bottom Promotion