பெண்களே! உங்களது மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள எளிதான வழிகள்!

By: Viswa
Subscribe to Boldsky

மேனியை பராமரிப்பதில் ஆண்களை விட பெண்கள் மிக கருத்தாக இருப்பார்கள். உணவு கட்டுப்பாட்டில் இருந்து உடற்பயிற்சி வரை சரியாக பின்தொடர்பவர்கள் பெண்கள். அப்படி இருந்தும் பல பெண்கள் மார்பகங்களை சரியான அளவில் வைத்துக் கொள்வதை தங்களது உடல் பாராமரிப்பில் சிரமமாக கருதுகின்றனர். மார்பகங்கள் பெரியதாக உள்ளவர்களுக்கு தோள்பட்டை வலி ஏற்படுகின்றன. அதையும் தாண்டி, மார்பகங்கள் பெரியதாய் இருப்பதால் பெண்கள் எதிர்க்கொள்ளும் பெரிய அவஸ்த்தையே அவர்களது வெளித்தோற்றம் தான். எவ்வளவு அழகாக இருந்தாலும், அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சி பெண்களுடைய அழகினை சீர்கெடுத்து விடுகிறது.

இந்த அளவுக்கு மீறிய மார்பக வளர்ச்சியில் இருந்து விடுபட்டு, உங்களுடைய மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த கட்டுரை உங்களுக்கானதே ஆகும். சுலபமாக இயற்கையான வழிமுறைகளை கையாண்டாலே போதும், உங்களுடைய மார்பகங்களை சரியான அளவில் பேணிக்காக்க முடியும். சரி, இனி உங்களது மார்பகங்களை சிக்கென வைத்துக் கொள்ள எளிதான வழிகளைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கார்டியோ பயிற்சி

கார்டியோ பயிற்சி

கார்டியோ பயிற்சி மேற்கொண்டு வந்தால் நீங்கள் எளிதாக உங்கள் மார்பக பகுதிகளில் உள்ள கொழுப்புகளை குறைக்க இயலும். தொடர்ந்து ஒரு வாரம் கார்டியோ பயிற்சிகளை செய்தாலே இதன் பலனை நீங்கள் கண்கூடப் பார்க்கலாம்.

ஏரோபிக்ஸ்

ஏரோபிக்ஸ்

உங்களது மார்பக அளவை இயற்கையான முறையில் குறைக்க, ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி மிக எளிதான வழியில் நல்ல பயன் தரும். நல்ல நடைப்பயிற்சி, சைக்கிளிங் போன்றவைகளில் இருந்து நீங்கள் பயிற்சியை தொடங்குவது நல்லது.

நடனம்

நடனம்

நடனம் ஆடும் போது நமது உடலில் உள்ள அனைத்து தசைகளும் அசைந்துக் கொடுப்பதால், நன்கு நடனம் ஆடுவது உங்களது உடம்பில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவும்.

மசாஜ்

மசாஜ்

இயற்கையான எண்ணெய்களை கொண்டு உங்களது மார்பக பகுதிகளில் மசாஜ் செய்வதும், உங்களது மார்பக அளவை குறைக்க நல்ல பயன் தருவதாய் உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியை சுடுதண்ணீரில் தேனுடன் கலந்து பருகினால் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும். இயற்கையிலேயே இஞ்சிக்கு கொழுப்பை எரிக்கும் தன்மைக் கொண்டதென்பதுக் குறிப்பிடத்தக்கது.

கிரீன் டீ

கிரீன் டீ

ஒரு நாளுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை கிரீன் டீ பருகி வந்தால், உங்களது மார்பக அளவை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். அதுமட்டுமல்லாது தினமும் கிரீன் டீ பருகுவது உடல்நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்.

ஆளிவிதை

ஆளிவிதை

ஆளிவிதையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து உங்கள் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்க உதவுகிறது. ஆளிவிதைகளை தண்ணீரில் ஊற வைத்து பருகுவதனால் ஒரு சில நாட்களிலேயே உடல் எடை குறைவில் நீங்கள் நல்ல மாற்றங்களை பார்க்க இயலும்.

வெள்ளை கரு

வெள்ளை கரு

முட்டையின் வெள்ளை கருவினை ஒரு டீஸ்பூன் வெங்காயத்தின் சாறோடு கலந்து உங்களது மார்பகங்களில் மாஸ்க் செய்து வந்தால் உங்கள் மார்பகங்கள் இறுக்கமடையும். இதனால் உங்களது மார்பகம் சிறியதாக சரியான அளவில் தோற்றமளிக்க உதவும். வாரத்தில் இரண்டு முறை நீங்கள் இந்த மாஸ்க்கை உபயோகப்படுத்தி வந்தால் நல்ல பயன் தரும்.

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையின் நற்குணங்கள் உங்களது மார்பகங்களில் அளவை குறைக்கவும் உதவுகிறது. உங்கள் கை நிறைய வேப்ப இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை நன்கு தண்ணீரில் கொதிக்க வைக்கவும். பின் அதோடு கொஞ்சம் மஞ்சள் மற்றும் தேனை கலந்து பருகி வந்தால் உங்களது மார்பகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்க உதவும். இதை தொடர்ந்து இரண்டு வாரம் செய்து வந்தாலே நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெய்

நீங்கள் இதுவரை உங்களது மார்பக அளவை குறைக்க மீன் எண்ணெய்யை பயன்படித்தி இருகிறீர்களா? இல்லை என்றால் பயன்படுத்தி பாருங்கள். இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தின் சத்து உங்களது மார்பகத்தில் இருக்கும் கொழுப்பை குறைத்து மார்பக அளவை குறைக்க உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Ways To Naturally Decrease Breast Size

Naturally reduce your breast size with the help of these simple tips and remedies. Exercise plays an important role in reducing your breast size too.
Subscribe Newsletter