For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'பின்னாடி'.. எப்படிக் குறைக்கலாம்?- கொஞ்சம் முன்னாடி வாங்க வழி சொல்றோம்...!

By Boopathi Lakshmanan
|

உங்களுடைய பின் பகுதி மிகவும் பெரிதாக உள்ளது என்று கவலைபடுகின்றீர்களா? நீங்கள் விரும்பிய உடையை போட்டால் அது உங்களுக்கு பொருந்துவதில்லையா? பிடித்ததை சாப்பிட்டால் உடல் எடை ஏறிவிடும் என்ற பயத்தில் உண்ணும் உணவை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கின்றீர்களா?

இதற்கு ஏன் இவ்வளவு கவலை? இந்த பகுதியை குறைப்பதற்காவே பல வழிகள் உள்ளன. அதை தினந்தோறும் செய்யும் போது நிச்சயம் குறையும். கீழ் இடுப்பை குறைக்கும் உடற்பயிற்சிகளை நாம் தினமும் செய்ய வேண்டியது அவசியம். இதை செய்வதால் தசைகள் வலுவடைந்து நம்மை நல்ல வடிவத்திற்கும் கொண்டு வருகின்றன. அதிகமாக உள்ள சதைகளையும் கொழுப்புகளை குறைக்கவும், கரைக்கவும் இந்த செயல் வல்லதாய் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்டெப்-அப்ஸ் (Step-ups)

ஸ்டெப்-அப்ஸ் (Step-ups)

படியில் ஏறி இறங்குவது தான் இந்த வகை பயிற்சியாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சற்றே உயரமாக இருக்கும ஒரு தளத்தைக் கண்டுபிடிப்பது தான். படியை நாம் முதலில் தேர்ந்தெடுத்து மற்றும் ஏறி ஏறி இறங்கும் போது அங்குள்ள தசைகள் குறைய துவங்குகின்றது. இதை ஒரு முறை செய்து மேஜிக்கை பாருங்கள்.

ஸ்குவார்ட்ஸ் (Squats)

ஸ்குவார்ட்ஸ் (Squats)

பின்பகுதியை குறைப்பதில் ஸ்டெப்-அப்பிற்கு அடுத்து வரும் மிகச்சிறந்த பயிற்சி செயல்பாடு ஸ்குவாட் செய்யும் வேலையாகும். இதனால் உடம்பில் உள்ள ஒவ்வொரு தசையின் பகுதியையும் வேலை செய்ய வைக்கிறோம். இது ஒரு சிறந்த அழகை உங்களுக்கு கொண்டு வரும். இப்படிப்பட்ட அழகை தினசரி இரண்டு அல்லது மூன்று முறையாவது பயிற்சி செய்து தான் பெற முடியும்.

ஓடுதல் (Running)

ஓடுதல் (Running)

மிக கடினமாக உடற்பயிற்சிகளை செய்ய விரும்பாதவர்கள் ஓடும் பயிற்சியை செய்ய முயற்சிக்கலாம். ஓடுவது கீழ் இடுப்பிற்கு ஒரு நல்ல பயிற்சியாகும் அது மட்டுமில்லாமல் மிக சிறந்த வகையில் உடலை டோனிங் செய்யவும் முடிகின்றது. மற்ற பயிற்சிகளை காட்டிலும் ஓடும் போது நிறைய கலோரிகள் குறைக்கப்படுகின்றன. இது கீழ் இடுப்பு மட்டுமில்லாமல் தொடைகளையும் குறைக்க உதவுகிறது. ஸ்டேடியம் அல்லது பார்க் ஆகிய இடங்களுக்கு சென்று ஓடும் பயிற்சியை செய்து வரலாம். அல்லது வீட்டில் டிரெட் மில் வாங்கி பயன்படுத்தலாம். அரை மணி நேர பயிற்சி 'பின்னால்' பெரும் மாற்றங்களை கொண்டு வரும்.

லாஞ்சஸ் (Lunges)

லாஞ்சஸ் (Lunges)

இந்த பயிற்சியும் மிக சிறந்த பயிற்சி முறையாகும். இதை கால்களை விரித்து நடப்பதை போல் வைத்து எவ்வளவு விரித்து வைக்க முடியுமோ அவ்வளவு தூரம் விரித்து பின்னர் உட்காருவதை போல் ஒரு நிலைக்கு வர வேண்டும். இதை திரும்பத் திரும்ப ஒவ்வொரு காலுக்கும் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை செய்யும் போது பின் பகுதி குறைய நீங்கள் எடுக்கும் முயற்சி பலன் தருவதை நீங்களே உணருவீர்கள். இதை திரும்பத் திரும்ப பல செட்டுகளாக செய்தால் உங்களுக்கு வித்தியாசம் தெரிய வரும். எந்த ஒரு பயிற்சியாக இருந்தாலும் உடனடியாக பெரும் மாற்றங்களை பார்க்க முடியாது. சிறிது காலமாவது பொறுமையுடன் இதை செய்து இடைவிடாத முயற்சி செய்து தான் நாம் நினைக்கும் அழகை நமக்கு கொண்டு வர முடியும்.

பட் ஸ்குவீசஸ் (Butt squeezes)

பட் ஸ்குவீசஸ் (Butt squeezes)

இதுவும் ஒரு சிறந்த பயிற்சி தான். பட் ஸ்குவீசர் பந்தை எடுத்து தினமும் அதில் பயிற்சி செய்வது அங்குள்ள கலோரிகளை குறைக்க உதவும். இது உடம்பின் கீழ் பகுதியை பயிற்சி செய்ய வைத்து குறைக்கும். தினமும் சிறிது நேரம் இப்பயிற்சியை மேற்கொண்டு வந்தால் மிகுந்த பலனை தரும். அது மட்டுமில்லாமல் சில நாட்களில் நீங்கள் நினைத்த அழகையும் பெற முடியும். மேல் கூறிய முறைகளைத் தவிர ஹைக்கிங், சைட் ஸ்டெப் ஸ்குவாட், ரிவர்ஸ் லாஞ்சஸ், ஒன்-லெக்டு டெட்லிப்ஃட்ஸ் என பல்வேறு வகை முறைகளும் உண்டு. இவற்றில் ஏதேனும் ஒன்றையோ அல்லது பல வழிமுறைகளையோ பின்பற்றி உங்களுக்கேற்ற அமைப்பை பெற்றுக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Butt Reducing Exercises

There are a number of butt reducing exercises that you can do to tone up your bottoms. And all you need to make sure is that you do them on a regular basis. Here are a few exercises for buttocks reduction that you can try at home.
Desktop Bottom Promotion