ஆண்களின் மார்பக சதைகளைக் குறைக்க உதவும் 8 உடற்பயிற்சிகள்!!!

By: Boopathi Lakshmanan
Subscribe to Boldsky

நீங்கள் ஆணா? உங்களுடைய மார்பக சதைகள் தளர்ந்து தொங்குகின்றனவா? உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்கும் போது வெட்கமாக உள்ளதா? மற்றவர்கள் இதனால் உங்களை கேலி செய்கிறார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ஆம் என்று பதில் சொன்னால், இந்த கட்டுரை கேள்விகளை தவிடு பொடியாக்க உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

ஏனெனில், ஆண்களுக்கு இருக்கும் இந்த பிரச்சனைகளை சரி செய்யக் கூடிய உடற்பயிற்சிகளைப் பற்றியே இங்கு நாங்கள் தகவல்கள் தரப் போகிறோம். இவ்வாறு ஆண்களின் மார்புகள் தொங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. அது மருந்துகளின் பக்க விளைவுகளாகவோ, அதீதமான உணவுக் கட்டுப்பாடுகளால் வந்ததாகவோ அல்லது மரபு சார்ந்த பிரச்சனையாகவோ இருக்கலாம்.

முதன்முறையாக ஜிம்முக்கு போறீங்களா? இதெல்லாம் ஞாபகத்துல வெச்சுக்கோங்க...

இந்த கட்டுரையின் மூலமாக தொங்கி விழும் மார்பகங்களை சரி செய்து உங்களை கவர்ச்சியாகவும், ஃபிட்டாகவும் மற்றும் முறுக்குள்ள ஆணாகவும் காட்ட உதவும் உடற்பயிற்சிகளை அறிய முடியும். ஆனால், எண்ணெய் நிரம்பிய உணவுகளையும், தேவைக்கு அதிகமாகவும் சாப்பிடாமலும் மற்றும் தினமும் முறையாக உடற்பயிற்சிகளை செய்து வந்தாலும் தான் இந்த பிரச்சனை தீரும் என்பதை மனதில் கொள்ளுங்கள். மேற்கண்ட கட்டுப்பாடுகளில் எதை நீங்கள் தவறவிட்டாலும், கிடைக்கும் பலன்களில் 60 முதல் 40 சதவிகிதம் குறைந்துவிடும். இதோ அந்த உடற்பயிற்சிகள் உங்களுக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓடுதல்

ஓடுதல்

உங்களுடைய மார்புகள் தொங்கிக் கொண்டிருக்கும் பிரச்சனையை சரி செய்ய விரும்பினால் ஓடத் துவங்குங்கள். இந்த பயிற்சியின் மூலம் உடலில் அதிகமாக உள்ள கொழுப்புகள் எரிக்கப்படும் - மார்பில் உள்ள கொழுப்புகள் மட்டுமல்லாமல் வயிறு, அடி வயிறு போன்ற இடங்களின் கொழுப்புகளும் கரையும். ஓடுவதன் மூலம் உங்களுடைய உடலின் தலை முடி முதல் கால் பாதம் வரையிலான பகுதிகள் அனைத்தும் அதிர்வடைகின்றன. இதன் மூலம் 70 முதல் 80 சதவிகித அளவிற்கு கொழுப்புகளை கரைக்க முடியும். உங்களுடைய மார்பக கொழுப்புகளை நீங்கள் கரைக்க விரும்பினால் ஒரு நாளுக்கு 2 கிமீ தூரம் ஓட வேண்டும். இதில் உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு ஓடத் துவங்கும் போது கடினமாக இருந்தால், மெதுவாக ஜாகிங் செய்வது போல ஓடுங்கள். ஆனால் நடந்து செல்ல வேண்டாம்.

ஸ்கிப்பிங் விளையாடுங்கள்

ஸ்கிப்பிங் விளையாடுங்கள்

உங்களுடைய மார்பகத்தின் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் மற்றுமொரு பயனுள்ள உடற்பயிற்சி இதுவாகும். இந்த பயிற்சி உங்களுடைய மார்பு மற்றும் பிற உடல் பகுதிகளிலிருந்து 100% கொழுப்பை கரைக்கும் பயிற்சி ஆகும். நீங்கள் இந்த பயிற்சியை தினமும் உங்களுக்கு உண்மையாக செய்து வந்தால் ஒரே மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். இந்த உடற்பயிற்சியை ஓடும் போதோ அல்லது ஓடாமலோ கூட செய்யலாம். ஆனால், ஓடி முடித்த பின்னரும், உங்களுடைய ஓய்வு வேளையிலும் இந்த பயிற்சியை செய்ய மறக்க வேண்டாம். கயிறு கொண்டு ஸ்கிப்பிங் செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால், மெதுவாக குதித்து இந்த பயிற்சியை தொடங்குங்கள். ஆரம்பத்தில் 90 முதல் 150 முறை ஸ்கிப்பிங் செய்யத் தொடங்கி, போகப்போக அளவை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த எண்கள் அதிகமாக இருப்பதை எண்ணி பயப்படாமல் மூன்று தடவைகளாக இந்த பயிற்சியை செய்ய தொடங்குங்கள், எண்களும் எடையும் படிப்படியாக குறையும்.

புஷ்-அப்ஸ்

புஷ்-அப்ஸ்

மார்பகங்களை ஆண்மைத் தன்மையுடன் காட்டுவதற்கு புஷ்-அப் பயிற்சி மிகவும் உதவும். இது சற்றே கடினமான பயிற்சியாக இருந்தாலும், செய்ய முடியாத பயிற்சி கிடையாது. புஷ்-அப் பயிற்சிகள் மார்பகங்களை முறைப்படுத்துவதற்கான ஸ்பெஷல் உடற்பயிற்சியாக இருப்பதால் அது மார்பகத்தில் உள்ள கொழுப்புகளை நேரடியாக குறைக்கிறது. இந்த பயிற்சியை தொடங்கும் போது உங்களுடைய பாதங்களில் முழுமையான அழுத்தம் தராமல் முழங்கால்களை பயன்படுத்துங்கள். ஆனால், சிறிது காலத்தில் உங்கள் கைகள் பலப்பட்ட பின்னர் முறையாக இந்த பயிற்சியை செய்யத் தொடங்க வேண்டும். ஓட்டம் மற்றும் ஸ்கிப்பிங் பயிற்சிகளுக்குப் பின்னர் இந்த உடற்பயிற்சியை நீங்கள் செய்யலாம். புஷ்-அப் பயிற்சியை செய்யத் தொடங்கும் முன்னர் உங்களை நீங்கள் சிறு சிறு பயிற்சிகள் செய்து தயார்படுத்த வேண்டியது அவசியம்.

சின்-அப்ஸ்

சின்-அப்ஸ்

சற்றே உயர்-நிலை உடற்பயிற்சிகளில் ஒன்றான சின்-அப் பயிற்சியை செய்வது கனமான உடல்வாகு கொண்ட மனிதர்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால், இது உடலுக்கு மிகுந்த வலிமை தருவதுடன், கட்டுக்கோப்பாகவும் வைக்கும். இந்த பயிற்சியை செய்யும் போது மற்றவர்களின் உதவியை நீங்கள் நாடலாம். ஒரு உதவியாளர் இருந்தால் அவர் உங்களுடைய முழங்காலை தூக்கிக் கொள்ளச் செய்யலாம். உங்களுடைய கைகள் உடல் எடையைத் தாங்கிக் கொள்ளும் என்றளவிற்கு வலிமை பெற்ற பின்னர், இந்த பயிற்சியை நீங்கள் பிறர் உதவியின் செய்யலாம்.

டம்பெல் ப்ளைஸ்

டம்பெல் ப்ளைஸ்

உங்களுடைய மார்புகளுக்கு ஆண்மைத்தனமான வடிவத்தை அளிக்கும் மற்றுமொரு உடற்பயிற்சியாக டம்பெல் உள்ளது. இந்த பயிற்சி உங்களுடைய மார்பின் அகலத்தை அதிகப்படுத்தி, அதை கவர்ச்சியான அம்சமாக்கி விடும். ஒரு டேபிள் மற்றும் டம்பெல்-ஐ வைத்து இந்த பயிற்சியை செய்யலாம் அல்லது உங்களுடைய பேலன்ஸ் தவறாமல் எடையுள்ள பொருள்களை தூக்கலாம். இந்த பயிற்சியை எங்ஙனம் சரிவர செய்வது என்பதை அறிய யூ-டியூப்-ல் வரும் காட்சிகளை பாருங்கள். அதில் எண்ணற்ற செயல் காட்சிகள் படமாக விடப்பட்டுள்ளன.

பெஞ்ச் பிரஸ்

பெஞ்ச் பிரஸ்

இது மார்பை அழகுபடுத்தும் மற்றுமொரு பயிற்சியாகும். இந்த பயிற்சியை சாய்வாகவும், சரிவாகவும் மற்றும் நேரான நிலையிலும் செய்யக்கூடிய பயிற்சியாகும். இந்த பயிற்சி மார்பு பகுதிக்கு சரியான வடிவத்தை கொடுக்க உதவியாக இருக்கும். இவற்றில் ஏதாவது ஒரு பயிற்சியை செய்து உங்களுடைய மார்பக பகுதிகள் தொய்வாக உள்ளதை சரி செய்ய முடியும்.

டக் ஜம்ப்ஸ்

டக் ஜம்ப்ஸ்

டக் ஜம்ப்ஸ் பயிற்சியில் குதித்துக் கொண்டே உங்களுடைய முழங்காலைக் கொண்டு நெஞ்சைத் தொடுமாறு செய்ய வேண்டும். இது தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு மிகவும் கடினமான பயிற்சியாக இருக்கும். ஆனால் நீங்கள் குதிப்பதையோ அல்லது ஸ்கிப்பிங்கையோ தினமும் செய்து வந்தால் இந்த பயிற்சியையும் எளிதாக செய்ய முடியும். இந்த உடற்பயிற்சி கடினமானது என்று நாங்கள் குறிப்பிட்டிருந்தாலும், அதே அளவு பயன் மிக்கது என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று வேளை என 30 டக் ஜம்ப்களை செய்தால் குறைந்தது 20% கொழுப்பை கரைக்க இயலும். நீங்கள் மேலும் மேலும் இந்த எண்ணிக்கையை கூட்டினால் பலனும் அதிகரிக்கும்.

ஆண்களுக்கான பிரா

ஆண்களுக்கான பிரா

மிகவும் தளர்வான மார்புகளை கொண்டிருக்கும் ஆண்கள் பயன்படுத்த இதனை பயன்படுத்தலாம். தங்களுடைய மார்பு பகுதி மிகவும் தொய்வாக மற்றும் அசௌகரியமாக இருக்கிறது என்று கருதுபவர்கள் ஆண்களுக்கான பிராவை அணியலாம். இந்த யோசனை இயற்கைக்கு மாறானதாக உங்களுக்குத் தோன்றினாலும், உடற்பயிற்சி செய்ய முடியாத தேகம் கொண்டவர்களுக்கு மிகவும் பயன் தரும் அம்சமாக இருக்கும். எனவே, தொடக்கத்தில் இந்த யோசனையை பயன்படுத்துங்கள். 2 அல்லது 3 மாதங்களுக்குப் பிறகு உங்களுடைய தளர்வான மார்பக சதைகள் குறைந்துவிடும்.

குறிப்பு

குறிப்பு

முதல் மூன்று உடற்பயிற்சிகளும் மிகவும் முக்கியமானவை மற்றும் அவை ஆண்களின் மார்பக சதைகளை வெகுவாக குறைக்கக் கூடியவையாகும். எனவே, நீங்கள் உண்மையிலேயே பலனடைய வேண்டும் என்று விரும்பினால், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் இந்த பயிற்சியை தினசரி செய்து வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 Effective Exercises To Reduce Man Boobs

In this article we will tell you about the exercises that help you in getting rid of saggy chest and makes you attractive, fit and muscular. But keep one thing in mind that these exercises are effective if and only if you never eat oily foods like junk foods, never eats over, never eat more sweets and do these exercises daily in proper manner.
Story first published: Wednesday, February 5, 2014, 8:58 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter