For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

By Maha
|

உணவில் போதிய கட்டுப்பாடு இல்லாமல், அளவுக்கு அதிகமான உணவை கண்ட நேரத்தில் சாப்பிட்டு, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோர் அதிகம். அதுமட்டுமின்றி, உடல் பருமனை தவிர, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், செரிமான பிரச்சனை போன்றவை ஏற்படுகிறது. ஆகவே இத்தகைய பிரச்சனைக்கு பெரும் காரணம் உணவுகளே. அத்தகைய உணவுகளில் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு தான், தற்போது பெரும்பாலானோர் டயட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிலும் உணவு உண்பது தவறில்லை. அதற்கேற்றாற் போல் நன்கு ஓடியாடி வேலை செய்ய வேண்டும். ஆனால் இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகம். அதனால் உடலில் கொழுப்புக்கள் சேர்ந்து, உடல் பருமனை அதிகரித்துவிடுகிறது. சிலர் உடல் பருமனைக் குறைப்பதற்கு டயட் மேற்கொள்கிறோம் என்று சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதில்லை. அவ்வாறு சாப்பிடாததால், உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், அதுவே மிகப் பெரிய பிரச்சனையாகிவிடுகிறது.

மேலும் டயட் மேற்கொள்ளும் போது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்ணும் உணவுகளில் மாற்றம் இருக்கும். உணவுகளை அனைவரும் சாப்பிடலாம் தான். ஆனால் டயட்டில் இருக்கும் போது உணவின் அளவு குறைவாக இருப்பதால், அந்த குறைவான உணவில் பாலினத்திற்கு தகுந்தவாறான உணவைத் தேர்ந்தெடுத்து உண்டால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். இப்போது டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

தக்காளியில் ஆண்களுக்கான சத்துக்கள் அதிகம் உள்ளன. அதிலும் இதில் உள்ள லைகோபைன், கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, பெங்குடல் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் ஆய்வுகள் பலவற்றிலும் லைகோபைன் அதிகம் உள்ள உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று சொல்கிறது.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸ்

ஸ்நாக்ஸாக சாப்பிடும் உணவுகளில் நட்ஸ் ஒன்று. அத்தகைய நட்ஸ் இதயத்திற்கும், சருமத்திற்கும் மிகவும் நல்லது. குறிப்பாக நட்ஸில் பிரேசில் நட்ஸ் ஆண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் அதில் உள்ள செலினியம், ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் வைக்கும்.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

முட்டைகோஸ், ப்ராக்கோலி மற்றும் புருசெல்ஸ் போன்ற காய்கறிகளை ஆண்கள் டயட்டில் நிச்சயம் சேர்க்க வேண்டும். இந்த காய்கறிகளில் ஆண்களுக்கு ஏற்படும் பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் கெமிக்கல் அதிகம் இருக்கிறது. எனவே இதனை குறைந்த அளவு உணவில் சேர்க்க வேண்டும்.

முட்டை

முட்டை

முட்டையில் புரோட்டீன் மற்றும் பயோடின் அதாவது வைட்டமின் பி7 அதிகம் இருப்பதால், இதனை ஆண்கள் சாப்பிட, கூந்தல் உதிர்தலை தடுப்பதோடு, வழுக்கை ஏற்படுவதையும் தடுக்கும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி புரோஸ்டேட் புற்றுநோயை தடுப்பதில் ஒரு சிறந்த உணவுப் பொருள். மேலும் ஆய்வுகளிலும் ப்ளூபெர்ரி பழத்தை அதிகம் சாப்பிட்டால், இதய நோய், வயதாவதால் ஏற்படும் ஞாபக மறதி மற்றும் டைப்-2 நீரிழிவு போன்றவற்றைத் தடுக்கலாம். அதிலும் இந்த பழம் பெண்களை விட ஆண்களுக்கு தான் நல்ல பலனை காண்பிக்கும்.

மாதுளை

மாதுளை

ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக உள்ள மாதுளையை தினமும் டயட்டில் ஆண்கள் சேர்த்தால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறைவு என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பூண்டு

பூண்டு

இதய ஆரோக்கியத்திற்கு பூண்டு மிகவும் சிறந்த உணவுப் பொருள். பெரும்பாலும் இதய நோய்க்கு ஆண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதனை தினமும் சாப்பிட்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் கரைவதோடு, இதய குழாய்களில் ஏற்படும் அடைப்பு தடுக்கப்படும். ஆகவே இன்றிலிருந்து பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

சால்மன்

சால்மன்

மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், பொதுவாக உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரிசெய்வதில் சிறந்தது. குறிப்பாக ஆண்களுக்கு மிகவும் சிறந்தது. எனவே மீன்களில் சால்மன் மீனை உணவில் அதிகம் சேர்த்து, உடலை ஆரோக்கியமாக நோயின்றி வைத்துக் கொள்ளுங்கள்.

தானியங்கள்

தானியங்கள்

வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்களின் இருப்பிடம் என்றால் அது தானியங்கள் தான். இந்த உணவுகள் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே மிகவும் சிறப்பானது. குறிப்பாக இதில் உள்ள வைட்டமின் பி ஆண்களுக்கு நிறைய நன்மைகளைத் தரும். அதாவது ஸ்பெர்ம்களை ஆரோக்கியமாக வைப்பது, கூந்தல் உதிர்தலை தடுப்பது போன்றவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Men’s diet: The must eats | டயட்டில் இருக்கும் ஆண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்!!!

Healthy eating can sometimes be different depending on your gender. Here’s a list of foods that men must include in their diet.
Desktop Bottom Promotion