For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புஷ்டி உடம்பும் ஆரோக்கியமே ! ஆய்வில் தகவல்

By Mayura Akilan
|

Health Tips
ஒல்லியாக இருப்பவர்களை விட லேசான சதைப்பற்றுடன் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே டயட் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் சிறிதளவு எடை அதிகரிப்பது நன்மையளிக்கும், அவர்களின் ஆயுளையும் நீட்டிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

உடல் எடைக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்ப்பு பற்றி அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 3லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர். ஆய்வின் முடிவில் அதிக ஒல்லியாகவும் இல்லாமல் உடல் பருமனாகவும் இல்லாமல் நடுத்தரமாக சிறிது பூசினார் போல் உள்ளவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆய்வு குழு தலைவர் லிண்டா பேகன்,"டயட்' என்ற பெயரில் இன்றைய சமூகத்தினர் மேற்கொள்ளும் உடற்பயிற்சிகள் அனைத்தும் பலன் தருவதில்லை. உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பலர், கவனக்குறைவு காரணமாக, பல்வேறு உணவு வகைளையும் உட்கொள்கின்றனர். இதனால், உடல் பருமன் குறையாமல், மேலும் அதிகரித்து நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்றார்.

குண்டானால் நல்லது

அதேசமயம், சமச்சீர் உணவு வகைகளுடன், போதுமான அளவு உடற்பயிற்சி செய்தால், உடல் எடை சமமான அளவில் பாதுகாக்கப்படுகிறது. அப்படி செய்யும் போது சிறிது குண்டானாலும், கவலைப்பட தேவையில்லை. கொழுப்பின் அளவு இயல்பாக இல்லாமல், அதிகமாகும் போது உடல் ஆரோக்கியத்தில் ஆபத்து ஏற்படுவதும், மிதமான அளவில் இருந்தால், ஆயுள் அதிகரிப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆயுள் அதிகரிக்கும்

ஒல்லியாக இருப்பவர்களை காட்டிலும், அதிக எடையுள்ள மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர்.இதற்கு, முறையான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி தான் காரணம். உடல் பருமனாக இருந்தும், தகுந்த உடற்பயிற்சிகளில் ஈடுபட தவறினால், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. அனைவரும் தங்கள் உண்மையான உடல் அமைப்பை ஏற்றுக்கொண்டு, முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், நோய் பாதிப்புகள் குறைந்து விடும் என்று ஆய்வுக்குழு தலைவர் லிண்டா பேகன் கூறியுள்ளார்.

கவலை வேண்டாம்

இனிமேல் யாராவது உங்களை, "பம்ப்ளிமாஸ்' என கிண்டல் செய்தால், இனி கவலைப்பட வேண்டாம்; நீங்கள் தான் ஆரோக்கியமானவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்."டயட் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் கொஞ்சம் சதை போடுவது, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது' எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary

Weight gain is good for health new study | புஷ்டி உடம்பும் ஆரோக்கியமே!

Dieting and other weight-loss efforts may unintentionally lead to weight gain and diminished health status, according to two researchers, including a UC Davis nutritionist, whose new study appears in the Jan. 24 issue of the Nutrition Journal, an online scientific journal.
Story first published: Tuesday, February 21, 2012, 13:08 [IST]
Desktop Bottom Promotion