For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரத்தசோகையை குணமாக்கும் உலர்திராட்சை!

By Mayura Akilan
|

Dried grapes as good as energy bars
ஓட்டப்பந்தையம் போன்ற தடகளப்போட்டியில் பங்கேற்பவர்கள் உலர் திராட்சையை சாப்பிட்டுவிட்டு ஓடினால் அவர்களால் விரைவில் இலக்கினை எட்டமுடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் வைட்டமின்கள், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. தடகளப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்குத் தேவையான உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. எனவே விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியின் போது சாப்பிடக்கூடிய ஊக்கமளிக்க கூடிய உணவாக இது வழங்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வளர்ச்சிக்கு உதவும்

உலர் திராட்சையில் உள்ள கால்சியத் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைக்கு பால் காய்ச்சும் போது அதில் இரண்டு பழத்தை போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் உடல் பலம் உண்டாகும். குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள்.

ரத்தசோகையை போக்கும்

உலர் திராட்சை பழத்தில் 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.

மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம். உலர் திராட்சையில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். எனவே இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும்.

English summary

Dried grapes as good as energy bars | ரத்தசோகையை குணமாக்கும் உலர்திராட்சை!

The dried grapes give athletes all they need during vigorous exercise, the Daily Mail reported quoting a study by researchers at the University of California-Davis. The research team studied people running three miles, giving them either raisins, supplement bars or simply water.
Story first published: Tuesday, August 14, 2012, 16:48 [IST]
Desktop Bottom Promotion