For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! உங்க சர்க்கரை அளவு அதிகரிக்க நீங்க இப்படி சாப்பிடுறது தான் காரணமாம் தெரியுமா?

நார்ச்சத்து ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது உங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற பல வாழ்க்கை முறை நோய்கள

|

நாம் உட்கொள்ளும் உணவுதான் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கம் ஆகியவை பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதை சரியாக நிர்வகிப்பது நம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம். ஆதலால், நாம் உட்கொள்ளும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஒருவரால் எடுக்கப்பட்ட போதிலும், சில சமயங்களில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவுகள் விவரிக்க முடியாத அளவிற்கு உயர்கிறது. சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும்.

Simple Eating Habits That Secretly Spike Blood Sugar in tamil

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதற்குப் பின்னால் உங்கள் உணவுப் பழக்கம் இருக்கலாம். இரத்த சர்க்கரையை எதிர்மறையாக பாதிக்கும் சில உணவு தேர்வுகள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவில் கார்போஹைட்ரேட் தனியாக சாப்பிடுவது

உணவில் கார்போஹைட்ரேட் தனியாக சாப்பிடுவது

இது நாம் அனைவரும் வழக்கமாக செய்யும் பொதுவான தவறு. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக உயராமல் இருக்க, புரதம், நார்ச்சத்து மற்றும் கொழுப்புகள் போன்ற சில ஊட்டச்சத்துக்களுடன் கார்போஹைட்ரேட்டுகளை இணைப்பது அவசியம். வெறும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை மட்டும் உட்கொள்வதால் உங்கள் இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை வெளியிடும் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எதுவும் கிடைக்காது. இருப்பினும், இது புரதம் மற்றும் நார்ச்சத்து மற்றும் கொழுப்புகளுடன் இணைந்தால், இந்த ஊட்டச்சத்துக்களை ஜீரணிக்க உடல் நேரம் எடுக்கும் என்பதால், இரத்த ஓட்டத்தில் சர்க்கரையை வெளியிடும் செயல்முறையை இது குறைக்கிறது.

நார்ச்சத்து உணவு

நார்ச்சத்து உணவு

தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவை விட குறைவான நார்ச்சத்து உட்கொள்ளும் போது, ​​அது உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறையும். மயோ கிளினிக்கின் படி, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினசரி நார்ச்சத்து பரிந்துரைக்கும் அளவு மாறுபடும். சராசரியாக வயது வந்த ஆணுக்கு, நார்ச்சத்து உட்கொள்ளல் 30-38 கிராம் வரை இருக்க வேண்டும், அதே சமயம் ஒரு வயது வந்த பெண் 21-25 கிராம் உணவு நார்ச்சத்தை உட்கொள்ள வேண்டும்.

இதய நோய் அபாயத்தை குறைக்கிறது

இதய நோய் அபாயத்தை குறைக்கிறது

நார்ச்சத்து ஒரு ஊட்டச்சத்து ஆகும். இது உங்கள் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் நீரிழிவு மற்றும் இதய நோய்கள் போன்ற பல வாழ்க்கை முறை நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

சர்க்கரை நுகர்வு

சர்க்கரை நுகர்வு

இப்போது, ​​இந்த உணவுப் பழக்கம் நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று! சர்க்கரையை மறைத்து வைத்திருக்கும் பல உணவுகள் உள்ளன. பழங்கள் முதல் காய்கறிகள் மற்றும் தானியங்கள், பழச்சாறுகள், ரொட்டி மற்றும் குறைந்த கொழுப்புள்ள தயிர் போன்றவற்றில் கூட சர்க்கரை மறைந்துள்ளது. மறைக்கப்பட்ட சர்க்கரையின் பல ஆதாரங்களை ஒன்றாக உட்கொள்ளும் போது அது உடலில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழி வகுக்கிறது.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உணவு கட்டுப்பாடு மிக அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரை உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவுகளை வாங்கும் போதெல்லாம், ஊட்டச்சத்து லேபிள் மற்றும் பொருட்களின் பட்டியலை சரி பாருங்கள். எந்த உணவில் சர்க்கரை மறைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், அதை தவிர்ப்பதற்கும் உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Eating Habits That Secretly Spike Blood Sugar in tamil

Here we are talking about the Simple Eating Habits That Secretly Spike Blood Sugar in tamil.
Story first published: Thursday, July 14, 2022, 11:23 [IST]
Desktop Bottom Promotion