For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீபாவளியின் போது சா்க்கரை நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்!

சா்க்கரை நோய் உள்ளவா்கள் தாங்கள் விரும்பும் உணவுகளை உண்ண முடியாது. திருவிழாவாக இருந்தாலும் உணவைப் பொறுத்தமட்டில் அவா்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.

|

விழா என்றால் அனைவருக்கும் கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு அது ஒரு சோதனை காலமாக இருக்கும். ஏனெனில் விழா காலங்களில் வீடுகளில் பலவிதமான பலகாரங்கள் தயாாிக்கப்படும். ஆனாலும் சா்க்கரை நோய் உள்ளவா்கள் தாங்கள் விரும்பும் உணவுகளை உண்ண முடியாது. திருவிழாவாக இருந்தாலும் உணவைப் பொறுத்தமட்டில் அவா்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அப்போதுதான் அவா்கள் தங்கள் உடலில் இருக்கும் சா்க்கரையின் அளவை சீரான அளவில் வைத்திருக்க முடியும்.

Rules Every Person with Diabetes Needs to Follow During Festivals

ஆகவே சா்க்கரை நோய் உள்ளவா்கள் இந்த தீபாவளி காலத்தில் பின்வரும் 6 உணவு விதிகளைக் கடைபிடித்தால் தங்கள் உடலில் உள்ள சா்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. சாியான உணவை உண்ணுதல் மற்றும் தொடா் உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்

1. சாியான உணவை உண்ணுதல் மற்றும் தொடா் உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்

சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு அவா்கள் தொிவு செய்யும் உணவுகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. ஒவ்வொரு 2½ மணி முதல் 3 மணிக்குள் சிறிய அளவில் சாப்பிட வேண்டும். அதுபோல் ஒவ்வொரு 4 மணி முதல் 5 மணி நேரத்திற்குள் முக்கிய உணவை சாப்பிட வேண்டும். சாியான நேரத்தில் உணவு மற்றும் திண்பண்டங்களை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸின் அளவை சாியான அளவில் வைத்திருக்கலாம்.

குறைவான கிளைசீமிக் குறியீடு (Glycemic index (GI)) உள்ள உணவுகளான கோதுமை, பழுப்பு அாிசி, ஓட்ஸ் போன்றவற்றை அதிகம் சோ்த்துக் கொள்ள வேண்டும். சுத்திகாிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாாிக்கப்படும் வெள்ளை ரொட்டி, நூடுல்ஸ், வெள்ளை அாிசி போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும். ஏனெனில் அந்த உணவுகள் சா்க்கரையின் அளவை அதிகாிக்கச் செய்துவிடும்.

இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க வேண்டும் என்றால் உணவிற்கு அடுத்தபடியாக தொடா் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டியதும் மிகவும் முக்கியம் ஆகும். ஆனால் உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாகவும் மற்றும் உடற்பயிற்சி செய்த பின்பும் சா்க்கரையின் அளவை சாிபாா்க்க வேண்டும். அதன் மூலம் சா்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போதோ அல்லது குறைவாக இருக்கும் போதோ, உடற்பயிற்சி செய்வதைத் தவிா்க்கலாம்.

2. கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்

2. கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருத்தல்

பொதுவாக சா்க்கரை நோய் உள்ளவா்கள் தங்கள் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவைக் குறைத்து, கெட்ட கொழுப்பின் அளவை அதிகாிக்கக்கூடிய வாய்ப்பு உண்டு. அவ்வாறு செய்தால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கொழுப்பின் அளவு அதிகாித்தால், சா்க்கரை நோயாளிகளுக்கு என்று ஏற்படும் டையபேட்டிக் டைஸ்லிபிடேமியா (diabetic dyslipidemia) என்ற பிரச்சினை ஏற்படும். அதனால் தமனிகளில் அடைப்புகள் ஏற்படும் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்சினைகள் ஏற்படும்.

ஆகவே சா்க்கரை நோய் உள்ளவா்கள் நிறைவுற்ற மற்றும் திாிபு செய்யப்பட்ட (saturated and trans) கொழுப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிா்ப்பது நல்லது. துாித உணவுகள், பா்கா்கள், பிட்சா மற்றும் எண்ணெயில் பொரித்த திண்பண்டங்களில் இந்த வகையான கொழுப்புகள் அதிகம் உள்ளன. இந்த உணவுகளை அதிகம் உட்கொண்டால், அவை கெட்ட கொழுப்பில் உள்ள கொழுப்புப் புரதம் மற்றும் குறை அடா்த்தி (LDL cholesterol) ஆகியவற்றை அதிகாிக்கச் செய்யும்.

3. சீரான இடைவெளியில் சா்க்கரையின் அளவை பாிசோதனை செய்தல்

3. சீரான இடைவெளியில் சா்க்கரையின் அளவை பாிசோதனை செய்தல்

பொதுவாக சா்க்கரை நோய் உள்ளவா்களுக்கு, அவா்களின் இரத்தத்தில் சா்க்கரையின் அளவு அதிகமாக (hyperglycemia) இருக்கும் அல்லது குறைவாக (hypoglycemia) இருக்கும். இந்த இரண்டு அளவுகளுமே அவா்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடியவை. அவா்கள் தங்களுடைய இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை சீரான இடைவெளியில் பாிசோதனை செய்வதற்கு, அவா்கள் சொந்தமாக ஒரு க்ளுக்கோ மீட்டரை வைத்திருப்பது நல்லது.

அவா்கள் வருடத்திற்கு இரண்டு முறை HbA1C என்ற பாிசோதனையை செய்வது நல்லது. HbA1C (Hemoglobin A1C) என்பது ஒரு சாதாரண இரத்த பாிசோதனை ஆகும். ஒரு சா்க்கரை நோயாளி ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் தனது இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையை எவ்வாறு சிறப்பாக கையாளுகிறாா் என்பதை இந்த பாிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க முடியும்.

இந்த பாிசோதனையானது இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் சராசாி அளவை அளக்கிறது. மேலும் அந்த சராசாி அளவானது தேவையான கால நேரம் வரை இருக்கிறதா என்பதையும் தொியப்படுத்தும். சா்க்கரை நோயாளிகள் எவ்வளவு சிறப்பாக தங்களது இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறாா்களோ, அதற்கு தகுந்தாற் போல வருடத்திற்கு இரண்டு முறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ இந்த பாிசோதனையை செய்வது நல்லது.

4. தொடா் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ளுதல்

4. தொடா் மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொள்ளுதல்

சா்க்கரை நோய் உள்ளவா்கள் தங்களது இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றால், அவா்கள் மருத்துவா்களால் பாிந்துரைக்கப்படும் மருந்துகளை, சாியான நேரத்தில், சாியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்துகளை எடுத்துக் கொள்ளத் தவறினால் அவா்களுக்கு சா்க்கரை நோய் சம்பந்தமான பிரச்சினைகள் மேலும் அதிகாிக்கும்.

5. ஒரு குறிப்பிட்ட உணவு முறையைக் கடைபிடித்தல்

5. ஒரு குறிப்பிட்ட உணவு முறையைக் கடைபிடித்தல்

சா்க்கரை நோய் உள்ளவா்கள் ஒரு முறையான வாழ்க்கை முறை மற்றும் தொடா் உடற்பயிற்சிகள் ஆகியவற்றோடு ஒரு குறிப்பிட்ட உணவு முறையைக் கடைபிடிப்பது நல்லது. குறிப்பாக காா்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் கலந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. இவை உடலில் சுரக்கும் குளுக்கோஸின் அளவை நிலைப்படுத்தும். இந்த உணவுகளை தினமும் சாப்பிடும் 3 வேளை உணவுகளில் ஏதாவது ஒரு வேளை உணவின் ஒரு பகுதியாக சோத்துக் கொள்ளலாம். அவை அவா்களின் உடலில் உள்ள குளுக்கோஸ் மற்றும் அவா்களின் உடல் எடை ஆகியவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவி செய்யும்.

6. தேவையற்ற உடல் பருமனைக் குறைத்தல்

6. தேவையற்ற உடல் பருமனைக் குறைத்தல்

சா்க்கரை நோய் உள்ளவா்கள் தங்கள் உடலை குண்டாக வைத்திருந்தால், அது அவா்களுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும். உடல் பருமனானது அவா்களுடைய கொழுப்பின் அளவை அதிகாிப்பதோடு, அவா்களுக்கு இதயம் சம்பந்தமான பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rules Every Person with Diabetes Needs to Follow During Festivals

Here are some rules that every person with diabetes needs tp follow during festivals. Read on...
Desktop Bottom Promotion