For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் 50% இரத்த சர்க்கரை அளவு குறையுமாம் - ஆய்வில் தகவல்!

வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்ல, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது. இது எப்படி என்பதை விரிவாக காண்போம் வாருங்கள்.

|

சர்க்கரை நோய் என்பது இரத்த சர்க்கரை அளவு குறைபாடுகளால் வகைப்படுத்தப்படும் கோளாறுகளின் குழுவாகும். இது உடலில் இரத்த குளுக்கோஸை எடுத்துக் கொள்ளும் ஹார்மோனான இன்சுலின் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாத போது அல்லது அந்த ஹார்மோனின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்படும் போது நிகழ்கிறது. இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இரத்த சர்க்கரை அதிகமானால் அது நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும். ஆகவே மீளமுடியாத நரம்பு சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க அதிக குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது.

Onions Reduce Blood Sugar Levels By 50 Percent, Study Reveals

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் உணவுகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் உணவுகளுடன், உடல் எடை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள், புரோட்டீன், குறைவான கொழுப்பு, கலோரிகள் போன்றவை சர்க்கரை நோயுடன் தொடர்புடைய ஆரோக்கிய பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுவதாக உடல்நல நிபுணர்கள் நம்புகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம்

வெங்காயம்

ஒருவர் தங்களின் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். இந்த வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பதற்கு மட்டுமல்ல, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது. இது எப்படி என்பதை விரிவாக காண்போம் வாருங்கள்.

வெங்காயம் எப்படி சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறது?

வெங்காயம் எப்படி சர்க்கரை நோயை சரிசெய்ய உதவுகிறது?

அன்றாட சமையலில் தவறாமல் சேர்க்கும் ஒரு காய்கறி தான் வெங்காயம். வெங்காயத்தில் கலோரிகள் குறைவு. ஆனால் இதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக வெங்காயத்தில் உள்ள இரண்டு முக்கிய கெமிக்கல்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

க்யூயர்சிடின்

க்யூயர்சிடின்

க்யூயர்சிடின் என்னும் ஃப்ளேவோனாய்டு ஆன்டி-ஆக்ஸிடன்ட் வெங்காயத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. இது சர்க்கரை நோயின் அறிகுறிகளைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இது சிறுகுடல், கணையம், எலும்பு தசை, கொழுப்பு திசு மற்றும் கல்லீரலில் உள்ள செல்களுடன் முழு உடல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.

சல்பர்

சல்பர்

வெங்காயத்தில் உள்ள சல்பர் என்னும் சேர்மம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெங்காயமானது மருத்துவ பயன்பாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. வெங்காயத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் பிற நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன. இலை பல வழிகளில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

ஒருவர் எவ்வளவு வெங்காயத்தை சாப்பிட வேண்டும்?

ஒருவர் எவ்வளவு வெங்காயத்தை சாப்பிட வேண்டும்?

அமெரிக்க நீரிழிவு சங்கம் (ADA) சர்க்கரை நோயாளிகளை ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளை சாப்பிட பரிந்துரைக்கிறது. ஏனெனில் இதில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளன. அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் படி, வெங்காயம் போன்ற ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளை ஒரு நாளைக்கு 1 1/2 கப் சமைத்த வெங்காயம் அல்லது 1 கப் பச்சையான வெங்காயத்தை சாப்பிடுவது நல்லது. ஆனால் இதற்கு மேல் சாப்பிட்டால், அது கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்று அச்சங்கம் கூறுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Onions Reduce Blood Sugar Levels By 50 Percent, Study Reveals

A new study that has revealed that onion could be a miracle superfood that can lower blood sugar levels by 50 percent.
Story first published: Monday, September 12, 2022, 14:40 [IST]
Desktop Bottom Promotion