For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எச்சரிக்கை! சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை ஒருபோதும் உண்ணவே கூடாதாம்…!

நீரிழிவு நோயாளிகளின் விஷயத்தில், வெவ்வேறு பழங்கள் உடலில் இரத்த சர்க்கரையின் அளவில் வேறுபட்ட மாற்றத்தை ஏற்படுத்தும்.

|

ஒரு சீரான உணவு உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கலாம். காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் சில உணவுகளை தவிர்ப்பது, அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கிறது. உங்கள் உணவில் பழங்களைச் சேர்ப்பது உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் தாதுக்கள் போன்ற தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன. ஆனால், அதேநேரம், நீரிழிவு நோயாளிகள் பழங்களை சாப்பிடும்போது கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.பழங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், சில பழங்கள் நீரிழிவு நோயாளிக்கு தீங்கு விளைவிக்கும்.

fruits-to-avoid-for-diabetes

ஒவ்வொரு பழமும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கையில் வேறுபடுகின்றன. ஒரு நபரின் உடல் தேவைகளைப் பொறுத்து பயனடையக்கூடும். நீரிழிவு நோயாளிகளின் விஷயத்தில், வெவ்வேறு பழங்கள் உடலில் இரத்த சர்க்கரையின் அளவில் வேறுபட்ட மாற்றத்தை ஏற்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் பாதுகாப்பாக இருக்க, இரத்த சர்க்கரை அளவை உயர்த்தக்கூடிய சில பழங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த கட்டுரையில், நீரிழிவு நோயாளிகளால் தவிர்க்கப்பட வேண்டிய சில பொதுவான பழங்களை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாம்பழம்

மாம்பழம்

ஒவ்வொரு 100 கிராம் மாம்பழத்திலும் சுமார் 14 கிராம் சர்க்கரை உள்ளடக்கம் உள்ளது. இது இரத்த சர்க்கரை சமநிலையை மோசமாக்கும். 'பழங்களின் கிங்' மற்றும் முக்கனியில் முதன்மை பழமாக இருக்கக்கூடிய உலகின் மிக சுவையான பழங்களில் ஒன்று மாம்பழம் என்றாலும், சர்க்கரை அதிகம் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும். இரத்த சர்க்கரையின் அளவை இது அதிகரிப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

MOST READ:கார், ரோலர் கோஸ்ட் போன்ற பொருட்களுடன் செக்ஸ் வைத்திருக்கும் உலகின் ஆச்சிரியமான மனிதர்கள்...!

சப்போட்டா

சப்போட்டா

சப்போட்டா பழத்தில் அதிகளவு சர்க்கரை நிறைந்துள்ளது. மிகவும் இனிப்பான பழம் இது. ஒவ்வொரு 100 கிராம் கொண்ட ஒரு சப்போட்டா பழத்தில் 7 கிராம் சர்க்கரை உள்ளது. பழத்தின் கிளைசெமிக் குறியீட்டு மதிப்பு (ஜி.ஐ) அதிகமாக உள்ளது. அத்துடன் அதிக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் ஆகியவை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு சப்போட்டா பழம் மிகவும் தீங்கு விளைவிக்கும்.

திராட்சை

திராட்சை

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் திராட்சை பழத்தில் நிறைந்திருக்கிறது. ஊட்டச்சத்துகள் பல நிறைந்திருந்தாலும், திராட்சையில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது. 85 கிராம் திராட்சையில் 15 கிராம் வரை கார்போஹைட்ரேட்டுகள் இருக்கக்கூடும் என்பதால் திராட்சைகளை ஒருபோதும் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

உலர் ஆப்ரிகாட்

உலர் ஆப்ரிகாட்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலர் ஆப்ரிகாட் பழத்தை போன்று பதப்படுத்தப்பட்ட பழங்களை ஒருபோதும் உட்கொள்ளக்கூடாது. ஒரு கப் புதிய உலர் ஆப்ரிகாட் பழத்தில் 74 கலோரிகளும், 14.5 கிராம் இயற்கையாகவே சர்க்கரையும் உள்ளன. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் பழங்களை உட்கொள்ளும்போது, கவனமாக இருக்க வேண்டும்.

MOST READ:மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படுவதற்கு இந்த "சத்து" உடலில் அதிகமாக இருப்பதுதான் காரணமாம்...!

உலர்ந்த கொடிமுந்திரி

உலர்ந்த கொடிமுந்திரி

நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய முதன்மை பழங்களில் உலர்ந்த கொடிமுந்தரியும் ஒன்றாகும். 103 இன் ஜி.ஐ மதிப்புடன், நான்கில் ஒரு கப் பரிமாறலில் உலர்ந்த கொடிமுந்தரியில் 24 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இது சர்க்கரை நோயாளிக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகையில் அன்னாசிப்பழத்தை உட்கொள்வது ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது என்றாலும், அதிகப்படியாக நீங்கள் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆதலால், அன்னாசிப்பழம் சாப்பிடுவதை கட்டுப்படுத்தவும் மற்றும் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

சீத்தாப்பழம்

சீத்தாப்பழம்

வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாக இருக்கிறது சீத்தாப்பழம். இருப்பினும், நீரிழிவு நோயாளிக்கு சீத்தாப்பழம் நல்லதல்ல. சுமார் 100 கிராம் கொண்ட ஒரு சிறிய பழத்தில் 23 கிராம் வரை கார்போஹைட்ரேட்டுகள் இருக்கிறது. சில ஆய்வு முடிவுகள் நீரிழிவு நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாம், ஆனால், அதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

MOST READ:ஓம் நம சிவாய! பக்தி பரவசமூட்டும் இந்துக்களின் திருவிழாவான மகா சிவராத்திரிக்கு இத பண்ணுங்க...!

தர்பூசணி

தர்பூசணி

நார்ச்சத்து மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள தர்பூசணி ஜி.ஐ. மதிப்பை 72 ஆகக் கொண்டுள்ளது. அரை கப் தர்பூசணியில் சுமார் 5 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் இருக்கலாம். இந்த பழத்தை மிகக்குறைவாக உண்ணலாம் எனக் கூறப்படுகிறது.

பப்பாளி

பப்பாளி

59இன் ஜி.ஐ மதிப்பு கொண்ட பப்பாளியில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. ஆதலால், பப்பாளி பழத்தை சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்தால், அது இரத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். ஆதலால், சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை தவிர்க்க வேண்டும். இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு மிகக் குறைந்த அளவில் பப்பாளி பழம் உண்ணலாம்.

MOST READ:கர்ப்பிணிப் பெண்கள் பருப்பு வகை உணவுகளை சாப்பிடுவது பாதுகாப்பானதா? இல்லையா? தெரிஞ்சிக்கோங்க...!

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

நூறு சதவிகிதம் பழச்சாறுகள், எல்லா பழங்களாலும் தயாரிக்கப்படுகின்றன. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் பழச்சாறுகளை தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது குளுக்கோஸ் கூர்முனைகளை ஏற்படுத்தும். இந்த பழச்சாறுகளில் எந்த நார்ச்சத்தும் இல்லாததால், சாறு விரைவாக வளர்சிதை மாற்றப்பட்டு சில நிமிடங்களில் இரத்த சர்க்கரையின் அளவை அதிகமாக்குகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கான பழங்கள்

நீரிழிவு நோயாளிகளுக்கான பழங்கள்

இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கையாளுவதற்கான செயல்திறனின் அடிப்படையில் பெரும்பாலான பழங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகளைத் தவிர்ப்பதற்கான பழங்களில் பழத்தின் ஜி.ஐ குறியீட்டு மதிப்பை உணவில் சேர்ப்பதற்கு முன்பு கருத்தில் கொள்ள வேண்டும். பொதுவாக, நீரிழிவு நோயாளியின் நுகர்வுக்கு பாதுகாப்பாக இருக்க ஜி.ஐ 55 அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும். ஸ்ட்ராபெர்ரி, பேரிக்காய் மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகளின் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

fruits to avoid for diabetes

Here we are talking about the list of fruits to avoid for diabetes.
Desktop Bottom Promotion