Just In
- 20 min ago
இந்த ராசிக்காரங்க முதல் பார்வையிலேயே காதலில் விழுந்துவிடுவார்களாம்…நீங்க எந்த ராசி?
- 3 hrs ago
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை தரிசிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
- 3 hrs ago
மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டம் பெற்ற தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்..
- 5 hrs ago
திருவண்ணாமலை அஷ்ட லிங்கங்கள் - எந்த ராசிக்காரர்கள் எந்த லிங்கத்தை கும்பிடணும் தெரியுமா?
Don't Miss
- Sports
நான் தலைவராக தொடர மாட்டேன் .. பிடிவாதம் பிடிக்கும் ஐசிசி தலைவர்.. ஷாக்கிங் காரணம்!
- Movies
சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய சோனாக்ஷி.. இந்த ஆண்டு ட்விட்டரை கலக்கிய டாப் 10 பெண்கள் இவங்கதான்!
- Automobiles
போதையில் டிரிபிள் ரைடு சென்ற இளைஞர்கள்... திடீரென மாயமாகிய அதிர்ச்சி.. வைரல் வீடியோ..!
- News
தாய்ப்பால் ஊட்டும் வாலிபால் வீராங்கணை.. வைரலாகும் போட்டோ.. சல்யூட் அடித்த அமைச்சர்
- Finance
பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளரா நீங்க.. உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்..!
- Education
பி.இ பட்டதாரிகளும் ஆசிரியர் ஆகலாம்! தமிழக அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பொறியாளர்கள்!
- Technology
அட்டகாசமான ரெட்மி கே30 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரோக்கியமான தீபாவளியாக இருக்க சர்க்கரை நோயாளிகள் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!
தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரது வீடுகளிலும் தீபாவளி பலகாரங்களை செய்ய ஆரம்பித்திருப்போம். இந்து பண்டிகைகளிலேயே கோலாகலமாக கொண்டாடப்படும் ஓர் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த தீபாவளி பண்டிகையன்று பட்டாசுக்களை மட்டும் நாம் வெடிப்பதில்லை, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பலகாரங்களையும் பகிர்ந்து கொள்வோம்.
பொதுவாக பண்டிகை காலங்கள் வந்தாலே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சற்று அச்சம் கொள்வார்கள். ஏனெனில் இந்த காலங்களில் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்த சந்தோஷத்தில், நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதைக் கவனிக்க மறந்துவிடுவோம். அதன்பின் பல மோசமான விளைவுகளை சந்தித்து அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்.
தினமும் இத ஒரு டம்ளர் குடிங்க.. உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு 'குட்-பை' சொல்லுங்க...
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் எப்போதுமே உஷாராக இருக்க வேண்டும். என்ன பண்டிகையாக இருந்தாலும், தங்களது டயட்டில் மட்டும் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது. இல்லாவிட்டால், அது உயிருக்கே உலை வைத்துவிடும். வெறும் இனிப்பு பலகாரங்கள் மட்டுமின்றி, குடிக்கும் பானங்கள் கூட ஆரோக்கியத்திற்கு தீங்கை உண்டாக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் எப்போதுமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது முக்கியம் என ஊட்டச்சத்து மருத்துவ நிபுணர் டாக்டர் ரூபாலி தத்தா கூறுகிறார்.
திடீர்னு மூச்சு விடவே சிரமமா இருக்கா? அப்ப நிச்சயம் இதுல ஒன்னு தான் காரணமா இருக்கும்...
மேலும் அவர் சர்க்கரை நோயாளிகள் அவசியம் மனதில் கொள்ள வேண்டிய சில உபயோகமான டயட் டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார். அதைப் பார்ப்போமா...!

ஸ்நாக்ஸ்
பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது மக்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு பயணிப்பார்கள். இதனால் ஆங்காங்கு டிராபிக்கில் சிக்கிக் கொள்ள நேரிடும். ஆகவே சர்க்கரை நோயாளிகள் வெளியே பயணத்தை மேற்கொள்வதாக இருந்தால், தங்களுடன் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் நேராநேரத்திற்கு உணவை அவசியம் உட்கொள்ள வேண்டும். அதற்கு ப்ளைன் பாப்-கார்ன், எண்ணெயில் பொரிக்காத பலகாரங்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லலாம் என டாக்டர் தத்தா கூறுகிறார்.
நீங்கள் சர்க்கரை நோயாளியா? அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...

புரோட்டீன் உணவுகள் அவசியம்
பண்டிகைக் காலங்களில் தற்போது பார்ட்டிகள் என்ற பெயரில் பலர் ஒயின் அல்லது சில மது பானங்களைப் பருகுவார்கள். நீங்கள் சர்க்கரை நோயாளி என்றால், மது அருந்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் குறைவான அளவில் தான் ஒயின் குடிக்க வேண்டும். அப்படி குடித்தாலும், அத்துடன் புரோட்டீன் நிறைந்த நட்ஸ், வறுத்த கொண்டைக்கடலை அல்லது சிறிது காட்டேஜ் சீஸ் போன்றவற்றை அவசியம் உட்கொள்ள வேண்டும் என டாக்டர் தத்தா கூறுகிறார்.

சர்க்கரை இல்லாத பலகாரங்கள்
தீபாவளி பலகாரங்களைத் தவிர்ப்பது என்பது மிகவும் கடினம் தான். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல பிராண்டுகள் மற்றும் ஸ்வீட் கடைகளில் சுகர்-ப்ரீ ஸ்வீட்டுகள் விற்கப்படுகின்றன. இந்த பலகாரங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. வேண்டுமானால், இந்த சுகர்-ப்ரீ பலகாரங்களை வாங்கி சாப்பிடலாம் என டாக்டர் தத்தா அறிவுறுத்துகிறார்.
சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிடுவது நல்லது தெரியுமா?

ஆரோக்கியமான பழக்கங்களை கைவிடாதீர்கள்
சர்க்கரை நோயாளிகள் காலந்தவறாமை மிகவும் முக்கியம். அதாவது சரியான நேரத்தில் தவறாமல் உணவை உண்ண வேண்டும். எனவே முடிந்தளவு தீபாவளி பண்டிகை அன்றும் இப்பழக்கத்தைக் கைவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவேளை எப்போதும் சாப்பிடும் நேரத்தில் உணவை உட்கொள்ள முடியாவிட்டால், அவ்வப்போது ஸ்நாக்ஸ் போன்று ஏதேனும் சிறு உணவை உட்கொள்ளுங்கள் என டாக்டர் தத்தா கூறுகிறார். முக்கியமாக கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டுமென சொல்கிறார். மேலும் தீபாவளியாக இருந்தாலும், அன்றாட உடற்பயிற்சி செய்வதை சர்க்கரை நோயாளிகள் தவறக்கூடாது. ஆகவே நேரம் கிடைக்கும் போது உடற்பயிற்சியைச் செய்யுங்கள் என டாக்டர் தத்தா கூறுகிறார்.

ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும்
இன்சுலின் எடுக்கும் சர்க்கரை நோயாளிகள் தீபாவளி காலங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என டாக்டர் ரூபாலி கூறுகிறார். மேலும் இந்த வகை சர்க்கரை நோயாளிகள் சற்று அதிகமாக கூட இனிப்புக்களை எடுக்கக்கூடாது என எச்சரிக்கிறார் டாக்டர் ரூபாலி. அதேப் போல் இன்சுலின் எடுக்காத சர்க்கரை நோயாளிகள் மிதமான அளவில் வேண்டுமானால் இனிப்புக்களை எடுக்கலாம் என்று கூறுகிறார்.
இருப்பினும், சர்க்கரை நோய் இருந்தாலே எப்போதும் ஆரோக்கியமான உணவுகளையே தேர்ந்தெடுத்து சாப்பிட முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, சோலா பூரியை வாங்கி சாப்பிடுதற்கு பதிலாக, பிரட்டுடன் ஒரு பௌல் சோலா மசாலா வாங்கி சாப்பிடுங்கள்.