For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களே உஷார்... கொரோனா சர்க்கரை நோயை உண்டாக்குமாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகளவில் ஏராளமானார் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை தான் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய். தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் வருவதாக கருதப்படுகிறது.

|

உலகளவில் ஏராளமானார் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை தான் நீரிழிவு என்னும் சர்க்கரை நோய். தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் வருவதாக கருதப்படுகிறது. ஏனெனில் சில கொரோனா நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Can A COVID Infection Trigger Diabetes?

கடந்த சில மாதங்களாக சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கொரோனா வரலாற்றைக் கொண்டவர்களிடம் இது பொதுவாக காணப்படுகிறது. ஆகவே இது பல ஆய்வுகளின் மையமாக மாறியுள்ளது. இப்போது கொரோனா வைரஸ் மனித உடலில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு வழி என்று பலர் சந்தேகிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆய்வுகள் கூறுவது என்ன?

ஆய்வுகள் கூறுவது என்ன?

இதுவரை வெளிவந்த சான்றுகளில் இருந்து, பெரும்பாலான நோயாளிகள் நோய்த்தொற்றின் போது அல்லது குணமடைந்த பின் சர்க்கரை நோய் பிரச்சனையை சந்திப்பதாக கூறப்படுகிறது.

8-க்கும் மேற்பட்ட ஆய்வுகள், 3700-க்கும் அதிகமான கொரோனாவில் இருந்து மீண்டவர்களை உள்ளடக்கியது. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த ஆய்வுகளில் 14% நோயாளிகள் நீரிழிவு நோயை உருவாக்கியுள்ளனர். இதேப்போன்ற கண்டுபிடிப்புகள் இங்கிலாந்து மற்றும் சீனாவிலும் காணப்பட்டன. அங்கு 40,0000-க்கும் மேற்பட்டவர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டன.

அந்த ஆய்வுகள் ஒரு திடுக்கிடும் வளர்ச்சியைக் கண்டன. அது என்னவெனில், கோவிட்-19-க்கு பிறகு சர்க்கரை நோயை உருவாக்கிய பெரும்பாலானோருக்கு இந்த நோயின் வரலாறு இல்லை. மேலும் இது உலகளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

ஆனால் கோவிட்-19 சர்க்கரை நோயை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனாலும், நம் உடலில் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பது உள்ளிட்ட தடயங்களை சுட்டிக்காட்டும் சில கோட்பாடுகள் உள்ளன.

கோவிட்- 19 உடலின் முக்கிய உறுப்புக்களில் சிக்கல்களை ஏற்படுத்துமா?

கோவிட்- 19 உடலின் முக்கிய உறுப்புக்களில் சிக்கல்களை ஏற்படுத்துமா?

கொரோனாவில் இருந்து முழுமையாக மீள்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. சிலருக்கு இது நீண்ட கோவிட் மற்றும் உடலின் முக்கிய செயல்பாட்டை பாதிக்கும் பல முக்கிய பக்க விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் சர்க்கரை நோய் நீண்ட கோவிட்-இன் அறிகுறியா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், இதுவரை கவனிக்கப்பட்டதில் இருந்து, விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் கோவிட்-19-ஐ உண்டாக்கும் வைரஸ் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாட்டை ஏற்படுத்தும் திறன் கொண்டது என்பதால் இது சர்க்கரை நோயை ஏற்படுத்தும் என்று நினைக்க வைக்கிறது.

பிந்தைய கோவிட்-சர்க்கரை நோய்

பிந்தைய கோவிட்-சர்க்கரை நோய்

தற்போது கோவிட்-19-க்கு பிறகு சர்க்கரை நோய் ஒரு பெரிய ஆபத்து காரணி. தீவிரத்தன்மையில் இருந்து இறப்பு வரை, சர்க்கரை நோயாளிகள் வைரஸின் விளைவாக ஏற்படும் சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். சர்க்கரை நோயை உருவாக்கும் நபர்கள் இதேப்போன்ற ஆபத்தை எதிர்கொள்கிறார்களா இல்லையா என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. ஆயினும் கூட, வல்லுநர்கள் கருதுவது என்னவென்றால், 'பிந்தைய கோவிட்-சர்க்கரை நோய்' வழக்குகள் மிகவும் ஆழமானதாக இருக்கக்கூடும். மேலும் பிற சிக்கல்களையும் உருவாக்கும் அபாயத்தை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடும்.

இது எப்படி நடக்கிறது?

இது எப்படி நடக்கிறது?

கொரோனா வைரஸ் உடலைப் பாதிக்கும் ஒரு வழி தான் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைப்பது. ஆனால் அந்த வைரஸ் கணையத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது ACE2 ஏற்பிகளுடன் வைரஸ் தொடர்பு கொள்ளும் முறையைப் பொறுத்தது. அதில் வைரஸ் ACE2 ஏற்பிகளுடன் தொடர்பு கொண்டு கணையம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளுக்குள் ஊடுருவி தாக்கும் போது, இன்சுலினில் தொந்தரவு ஏற்படுகிறது.

புதிய சர்க்கரை நோய் வழக்குகள் அதிகரிக்கும் என்று பலர் நம்புவதற்கான மற்றொரு வழி சைட்டோகைன் புயல் வைரஸ் தொற்றால் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தானே இயக்கும்படி கட்டாயப்படுத்துகிறது. இதனால் முக்கிய திசுக்கள் மற்றும் உறுப்புக்களைத் தாக்கும் அபாயகரமான சைட்டோகைன்களை உருவாக்குகிறது. இதன் விளைவாக உறுப்புக்களின் முக்கிய செயல்பாட்டைத் தக்க வைப்பது அல்லது இரத்த க்ளுக்கோஸ் அளவை உருவாக்குவது கடினமாகிறது.

இன்சுலின் கட்டுப்பாடு சேதமடையும்

இன்சுலின் கட்டுப்பாடு சேதமடையும்

மற்றொரு கோட்பாடு, கொரோனா வைரஸ் குடல்கள் உட்பட செல் லைனிங்கை பாதித்து, குளுக்கோஸை ஒழுங்குபடுத்தும் மற்றும் உடைக்கும் உறுப்புகளின் திறனைக் குறைக்கக்கூடும்.

கோவிட் மற்றும் புதிய நீரிழிவு நோயாளிகளுக்கிடையேயான தொடர்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இன்னும் பல மருத்துவ சான்றுகள் தேவைப்படும் போது, கொரோனாவில் இருந்து மீட்கப்பட்ட நோயாளிகள் மோசமடைவதற்கான அறிகுறிகளைப் புறக்கணிக்காத படி கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கோவிட்-19-க்கான சிகிச்சை மருந்துகள் காரணமாக இருக்க முடியுமா?

கோவிட்-19-க்கான சிகிச்சை மருந்துகள் காரணமாக இருக்க முடியுமா?

கோவிட்-19 க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் நிறைய சோதனை முறையில் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவை இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய்

டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய்

கோவிட்-19 குணமடைந்த நோயாளிகளுக்கு டைப்-1 மற்றும் டைப்-2 சர்க்கரை நோய் இரண்டுமே தூண்டக்கூடும். சர்க்கரை நோய் மிகப்பெரிய ஆபத்து காரணியாக இருப்பதால், இது உடல் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளை கவனித்து சரியான நேரத்தில் மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம். அதிலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் பிற நோய்க்கான ஆபத்தில் உள்ளவர்கள் இருமடங்கு கவனமாக இருக்க வேண்டும்.

எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?

எச்சரிக்கை அறிகுறிகள் என்ன?

கீழே ஒருவரது இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் சந்திக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை:

* சோர்வு

* தீவிரமான பசி

* அதிக தாகம்

* மங்கலான பார்வை

* காயங்கள் தாமதமாக குணமாவது

* அடிக்கடி சிறுநீர் கழிப்பது

* கூச்சம் அல்லது உணர்வின்மை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can A COVID Infection Trigger Diabetes?

There's been an increase in diabetes cases since the last few months, especially common in those who have a history of COVID-19.
Story first published: Friday, April 2, 2021, 12:59 [IST]
Desktop Bottom Promotion