For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரத்தத்தில் சர்க்கரையை குறைக்க ஆயுர்வேதம் கூறும் எளிய வழிகள்...இனி சர்க்கரை நோயை பாத்து பயப்படாதீங்க!

உலகளவில் இறப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நீரிழிவு நோயாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த நிலை 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த அளவு 100 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

|

உலகளவில் இறப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நீரிழிவு நோயாகும். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த நிலை 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த அளவு 100 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பினும், சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலமும் சில எளிய வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலமும் இந்த நிலையை நிர்வகிக்க முடியும்.

Ayurvedic Home Remedies To Control Your Blood Sugar Levels in Tamil

உண்மைதான், ஆயுர்வேதத்தின் படி சில உணவுமுறை மாற்றங்கள், சமைக்கும் பாத்திரங்கள் மற்றும் சேர்க்கும் மசாலா பொருட்கள் கூட இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். இந்த பதிவில் என்னென்ன மாற்றங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாத்திர மாற்றங்கள்

பாத்திர மாற்றங்கள்

மஞ்சளை ஒவ்வொரு உணவுப் பொருளிலும் சிறிது கூடுதலாகச் சேர்ப்பதன் மூலம் உங்கள் மஞ்சள் உட்கொள்ளலை அதிகரிக்கவும். மஞ்சள் சர்க்கரையை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. தாமிர பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பது பல காலமாக அறிவுறுத்தப்படுகிறது. இது உடலின் நல்வாழ்வை மீட்டெடுக்கவும், சர்க்கரை அளவுகளில் ஏற்ற இறக்கங்களைத் தடுக்கவும் உதவும். ஒரு செப்பு பாத்திரத்தில் சேமிக்கப்படும் தண்ணீர் தம்ரா ஜல் என்று அழைக்கப்படுகிறது, இது மூன்று தோஷங்களிலும் சமநிலையை அடைய உதவும் என்று கூறப்படுகிறது. தண்ணீரை இரவு முழுவதும் தாமிர பாத்திரத்தில் வைத்து மறுநாள் காலையில் குடிக்கவும்.

வெந்தயத்தை பயன்படுத்துங்கள்

வெந்தயத்தை பயன்படுத்துங்கள்

ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும். அவர்கள் காலையில் வெறும் வயிற்றில் முளைத்த வெந்தயத்தை சாப்பிடலாம் அல்லது வெந்தய தண்ணீரை குடிக்கலாம்.

கசப்பான உணவுகள்

கசப்பான உணவுகள்

பாகற்காய், நெல்லிக்காய், சணல் விதைகள் மற்றும் கற்றாழை போன்ற கசப்பான உணவுப் பொருட்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

MOST READ: இந்த 5 ராசிக்காரங்க மாதிரி வலிமையான ஆன்மா யாரும் கிடையாதாம்..இவங்ககூட இருந்தா எதுக்கும் பயப்படவேணாம்!

எளிய டயட் மாற்றங்கள்

எளிய டயட் மாற்றங்கள்

ஆயுர்வேதத்தின்படி, தோஷங்களின் சமநிலையின்மையால் உடலில் நோய்கள் ஏற்படுகின்றன. டைப் 1 நீரிழிவு நோய் வட்டா (காற்று) சமநிலையின்மையால் ஏற்படுகிறது மற்றும் டைப் 2 நீரிழிவு கபா (நீர் மற்றும் பூமி) தோஷத்தின் அதிகப்படியான காரணமாக ஏற்படுகிறது. இந்நிலையில் குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கியம். உங்கள் தேநீரில் இஞ்சியைச் சேர்ப்பதும் உடலில் உள்ள கபாவைக் குறைக்க உதவும்.

மசாலா பொருட்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துதல்

மசாலா பொருட்களை புத்திசாலித்தனமாக பயன்படுத்துதல்

சில மசாலாப் பொருட்களில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மஞ்சள், கடுகு, பெருங்காயம், இலவங்கப்பட்டை மற்றும் கொத்தமல்லியை சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.

பாகற்காய்

பாகற்காய்

நீரிழிவு நோயாளிகள் தங்கள் அன்றாட உணவில் பாகற்காய் சேர்க்க வேண்டும். இது இரத்தச் சர்க்கரைக் குறைவு உயிர் இரசாயனப் பொருட்களில் நிறைந்துள்ளது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த இந்த பொருள் சிறந்தது.

MOST READ: எந்த வயசுல இருக்குறவங்க முழுமையான உடலுறவ அனுபவிக்கிறாங்க தெரியுமா? ஆய்வு சொல்லும் நம்பமுடியாத செய்தி!

கருப்பு சுண்டல்

கருப்பு சுண்டல்

குளுக்கோஸ் சகிப்புத்தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு சுண்டல் சிறந்தது. இது நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களுக்கு நீரிழிவு அபாயத்தைக் குறைக்கிறது. நாள்பட்ட நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது நன்மை பயக்கும்.

நாவல் பழம்

நாவல் பழம்

நாவல் பழம் இன்சுலினை ஒழுங்குபடுத்தவும், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. 4-5 நாவல் பழ இலைகள் மற்றும் நாவல் பழத்தை மென்று சாப்பிடுவது சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

MOST READ: இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு லேசான மாரடைப்பு வரப்போகுதுனு அர்த்தமாம்...இதுவும் ஆபத்தானதுதான்!

நெல்லிக்காய்

நெல்லிக்காய்

நெல்லிக்காய் கார்போஹைட்ரேட் உறிஞ்சுதலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குரோமியத்தின் இருப்பு இன்சுலின் உணர்திறனுக்கு உதவுகிறது. நீங்கள் அதை பச்சையாகவோ அல்லது சாறு வடிவிலோ சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic Home Remedies To Control Your Blood Sugar Levels in Tamil

Check out the ayurvedic home remedies to control your blood sugar levels.
Story first published: Thursday, November 11, 2021, 11:35 [IST]
Desktop Bottom Promotion