Just In
- 10 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 12 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 12 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 17 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்கள் சர்க்கரை நோயாளியா? அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...
உங்கள் வீட்டில் இன்று சப்பாத்தியா? நீங்கள் சாப்பிடுவதற்கு செய்த சப்பாத்தி மீந்து போயுள்ளதா? அப்படி மீந்து போன சப்பாத்திய நீங்க என்ன செய்வீங்க? பெரும்பாலானோர் மீந்து போன சப்பாத்தியை தூக்கி எறிந்துவிடுவார்கள் அல்லது தங்கள் வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் மீந்து போன சப்பாத்தி மிகவும் ஆரோக்கியமானது என்பது தெரியுமா? ஆம், மீந்து போன பழைய சப்பாத்தி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மீந்து போன உணவுப் பொருட்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் சப்பாத்தி விஷயத்தில் அது பொய். சப்பாத்தியானது 15 மணிநேரம் வரை வைத்திருந்து சாப்பிட ஏற்ற உணவுப் பொருள். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில், இப்படி மீந்து போன சப்பாத்தியைக் கொண்டு பல புதிய உணவுகளைத் தயாரித்து சாப்பிடலாம். இப்போது ஏன் மீந்து போன சப்பாத்தி ஆரோக்கியமானது என்பது குறித்து காண்போம்.

மீந்து போன சப்பாத்தியின் நன்மைகள்
ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படுவது தான் மீந்து போன சப்பாத்தியும். இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளைசீமிக் இன்டெக்ஸ் மற்றும் சோடியம் குறைவாக இருப்பதால், ஸ்நாக்ஸாக சாப்பிட ஏற்றது. இந்த மீந்து போன சப்பாத்தியை சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகளைப் பார்ப்போம்.

சர்க்கரை நோய்க்கு நல்லது
இரவில் சுட்டு மீந்து போன சப்பாத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும். ஆகவே உயர் இரத்த சர்க்கரை அளவைக் கொண்டவர்கள், மீந்து போன சப்பாத்தியை சாப்பிட யோசிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
மீந்து போன சப்பாத்தியை குளிர்ந்த பால் சேர்த்து சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் இரத்த அழுத்த அளவு நிலைப்படுத்தப்படும். எனவே மீந்து போன பழைய சப்பத்தியை பாலில் போட்டு 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் சாப்பிடுங்கள். இது சுவையான ஸ்நாக்ஸாக இருப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இந்த வழியில் இரவில் சுட்டு மீந்து போன சப்பாத்தியை, மறுநாள் காலையில் காலை உணவாக பயன்படுத்தலாம்.

உடல் வெப்பநிலை சீராகும்
ஒரு மனிதனின் உடல் வெப்பநிலையானது 37 டிகிரி செல்சியல் இருக்கும். ஆனால் எப்போது ஒருவரது உடல் வெப்பநிலை 40 டிகிரிக்கும் அதிகமாகிறதோ, அப்போது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உடல் வெப்பநிலைக்கும் மீந்து போன சப்பாத்திக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம். மீந்து போன பழைய சப்பத்தியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடல் வெப்பநிலையை இயல்பாக்கும் மற்றும் உடல் வெப்பநிலை அதிகமாகாமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, பழைய சப்பாத்தி அசிடிட்டியை கட்டுப்படுத்தவும் செய்யும்.

செரிமானம் சிறப்பாக நடக்கும்
நீங்கள் அடிக்கடி செரிமான பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டால், பழைய சப்பாத்தி நல்ல நிவாரணம் அளிக்கும். அதுவும் இது ஆரோக்கியமற்ற மற்ற உணவுகள் உண்பதைத் தடுவ்வதோடு, அசிடிட்டி, அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வாய்வுத் தொல்லை போன்ற வயிற்று பிரச்சனைகளை சரிசெய்யும். அதற்கு மீந்து போன சப்பாத்தியை பாலில் ஊற வைத்து, இரவு உணவாக சாப்பிடவும்.

வேறு எப்படியெல்லாம் மீந்து போன சப்பாத்தியை உட்கொள்ளலாம்?
பால் சப்பாத்தி
பழைய சப்பாத்தியை சாப்பிடும் சிறப்பான ஓர் வழி பாலுடன் சேர்த்து உண்பது. மீந்து போன சப்பாத்தியை தூக்கி போடுவதற்கு பதிலாக, அதை சிறு துண்டுகளாக்கி, சிறிது பால் சேர்த்து, ஊற வைத்து சாப்பிடலாம். இது எந்த வேளையிலும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவாக இருக்கும்.

சப்பாத்தி நூடுல்ஸ்
உங்களுக்கு சைனீஸ் நூடுல்ஸ் பிடிக்குமா? அப்படியென்றால், நூடுல்ஸிற்கு பதிலாக சப்பாத்தியை நீளமான துண்டுகளாக வெட்டிப் பயன்படுத்துங்கள். இதனால் இது ஆரோக்கியமான உணவாக இருப்பதோடு மட்டுமின்றி, மிகவும் சுவையானதாக அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும்.

சப்பாத்தி சிப்ஸ்
மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடும் மற்றொரு ஆரோக்கியமான வழி என்றால், அது அவற்றை சிப்ஸாக தயாரிப்பது தான். அதற்கு பழைய சப்பத்தியை சிறு நீள துண்டுகளாக வெட்டி, எண்ணெய் சேர்க்காமல் வாணலியில் போட்டு சிறிது நேரம் மொறுமொறுவென்று வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான சப்பாத்தி சிப்ஸ் தயார்!

சப்பாத்தி பாயாசம்
உங்களுக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் சப்பாத்தி பாயாசம் சாப்பிட்டதுண்டா? இந்த பாயாசம் செய்வதற்கு பால், மீந்து போன நொறுக்கிய சப்பாத்தி மற்றும் சர்க்கரை. பாலில் நொறுக்கிய சப்பாத்தியைப் போட்டு, அத்துடன் சர்க்கரை சேர்த்து, சற்று கெட்டியாகும் வரை சிறிது நேரம் வேக வைத்து இறக்க வேண்டும்.

குறிப்பு
மீந்து போன பழைய சப்பாத்தி என்றதும் இரண்டு மூன்று நாட்களுக்கு முன் சமைத்த சப்பாத்தியைக் குறிப்பிடவில்லை. சப்பாத்தி சுட்டு 15 மணிநேரத்திற்குள், சுத்தமான இடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இந்நிலையில் உள்ள சப்பாத்தியை மட்டுமே சாப்பிடலாம். ஒருவேளை மிகவும் பழைய பூஞ்சைகள் வரக்கூடிய நிலையிலான சப்பாத்தியை சாப்பிட்டால், ஆரோக்கியம் தான் மோசமாகும். எனவே கவனமாக இருங்கள்.