For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரமலான் நோன்பிருக்கும் சர்க்கரை நோயாளிகள் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருக்கலாமா, கூடாதா என்பது இன்றும் விடைதெரியாத ஒரு கேள்வியாகும்.

|

ரமலான் மாதம் என்பது இஸ்லாமியர்களுக்கு மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாகும். ரமலான் நோன்பு காலம் தொடங்கி உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு கொண்டு வருகிறது. இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைப்படி குறிப்பட்ட வயதிற்கு மேல் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களும் நோன்பை கடைபிடிக்க வேண்டும்.

What to eat in Ramadan if you are diabetic

இந்த காலக்கட்டம் சுய சுத்திகரிப்பு, அன்பு மற்றும் இரக்கத்தை வளர்த்துக்கொள்ளும் காலமாக கருதப்படுகிறது. சில விதிவிலக்குகளுடன் அனைத்து இஸ்லாம் சகோதரர்களும் இந்த ஆன்மீக பயிற்சியை கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சர்க்கரை நோய் இருப்பவர்கள் ரமலான் மாதத்தில் எப்படி நோன்பு இருக்க வேண்டும் என்பதை இந்த பதவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை சகஜமான வாழ்க்கை வாழ விடாமல் செய்து கொண்டிருக்கும் ஒரு மோசமான நோய் என்றால் அது சர்க்கரை நோய்தான். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரதம் இருக்கலாமா, கூடாதா என்பது இன்றும் விடைதெரியாத ஒரு கேள்வியாகும். ஆரோக்கியத்திற்கும், நம்பிக்கைக்கும் இடையில் மிகப்பெரிய குழப்பம் நிலவிக்கொண்டிருக்கிறது. குறைவான அளவில் சர்க்கரை பாதிப்பு இருப்பவர்கள் விரதம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

நோன்பு இருக்க தொடங்கும் முன் சர்க்கரை நோய் இருப்பவர்கள் மருத்துவர்களை அணுகுவது நல்லது. உங்களால் நோன்பு இருக்க முடியுமா, உங்கள் உடல்நிலை அதைப்பற்றி என்ன சொல்கிறது என்பதை மருத்துவரிடம் கேட்டு உறுதி செய்துகொள்ளளவும். ஏனெனில் புனித குரானின் படி கடுமையான ஆரோக்கிய பிரச்சினை இருப்பவர்களுக்கு நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விரதம் எப்படி சர்க்கரை நோயை பாதிக்கிறது?

விரதம் எப்படி சர்க்கரை நோயை பாதிக்கிறது?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கும் ஏதாவது சாப்பிட வேண்டும். அதற்கேற்றவாறு அவர்களின் உணவுமுறையை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். ஆனால் ரமலான் நோன்பிறகு 11 முதல் 16 மணி நேரம் வரை விரதம் இருப்பது தேவைப்படுகிறது, குறிப்பாக கோடை காலத்தில் சூரியன் தாமதமாகத்தான் மறையும். இது உங்கள் ஆரோக்கியத்தில் பல பாதிப்புகளை உண்டாக்கும். நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தும் நோன்பிருக்க விரும்பினால் இந்த பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஹைப்போக்ளசமியா

ஹைப்போக்ளசமியா

ஹைப்போக்ளசமியா என்பது சர்க்கரை அளவு சாதாரண அளவை விட உங்கள் உடலில் சர்க்கரை அளவு அடிமட்ட நிலைக்கு போவதாகும். நீண்ட நேர விரதம் உங்கள் இரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவின் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.

MOST READ: உங்கள் பிறந்த தேதியின் படி எந்த வயதில் உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது தெரியுமா?

கீட்டோ ஆசிடியோடிஸ்

கீட்டோ ஆசிடியோடிஸ்

உங்கள் உடலில் போதுமான குளுக்கோஸ் இல்லாத போது உங்கள் உடல் ஆற்றலுக்காக கொழுப்பை எரிக்க தொடங்கினால் உங்களுக்கு நீரிழிவு கீட்டோ ஆசிடியோடிஸ் பிரச்சினை ஏற்படலாம். இது நச்சு பொருளான கீட்டோன்களை உருவாகும்,இது இரத்தத்தில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாகும்.

நீர்சத்து குறைவு

நீர்சத்து குறைவு

நோன்பு மடிந்த பிறகு அதிகமாக சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை உடனடியாக அதிகரிக்கும். மேலும் நோன்பு இருக்கும் போது தண்ணீர் குடிக்க அனுமதியில்லை, இதனால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டியவை

ரமலான் நோன்பு இருக்க முடிவெடுத்து விட்டால் அதற்கு ஏற்றார் போல உங்களுடைய உணவு முறையை திட்டமிட்டு கொள்ள வேண்டும். இப்தார் விருந்தின் போது இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் சர்க்கரை மற்றும் குளுகோஸின் அளவை சீராக வைக்க உதவும். இப்தார் விருந்தை எளிய கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும் உணவாக எளிதில் உறிஞ்சப்படக்கூடிய உணவுடன் தொடங்குங்கள் உதாரணத்திற்க்கு இரண்டு பேரிச்சை பழங்கள் அல்லது பாலுடன் தொடங்குங்கள். அதன் பிறகு பழுப்பு அரிசி உணவு அல்லது சப்பாத்தி போன்றவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

சுஹுர் உணவு

சுஹுர் உணவு

சுஹுர் உணவிற்கு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் இருக்கும். முழுதானிய உணவு, முழுத்தனைய பிரெட், காய்கறிகள் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள், இது நாள் முழுவதும் உங்களுக்கு தேவையான ஆற்றலை வழங்கும். இந்த வகை கார்போஹைட்ரேட்டுகள் குறைந்த க்ளெசமிக் குறியீட்டை கொண்டுள்ளது, இதனால் அவை செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் நாள்முழுவதும் உங்களுக்கு பசி ஏற்படாத உணர்வு இருக்கும்.

MOST READ: வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெற விவேகானந்தர் கூறும் எளிய ரகசியங்கள் இதுதான்...!

மற்ற உணவுகள்

மற்ற உணவுகள்

புரோட்டின் இருக்கும் மீன், கொழுப்பு குறைவான பால், சீஸ், தூங்குவதற்கு முன் பால் அல்லது பழங்கள் சாப்பிடுவது உங்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். மாலை நேரத்தில் அதிகளவு தண்ணீர், இயற்கை பழச்சாறு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். செயற்கை குளிர்பானங்களை தவிர்க்கவும். நார்ச்சத்துக்களை எடுத்துக்கொள்ள சாலட்களை சேர்த்து கொள்ளவும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்து கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What to eat in Ramadan if you are diabetic

Check out the what you should you eat in Ramadan if you are diabetic patient.
Story first published: Wednesday, May 15, 2019, 13:21 [IST]
Desktop Bottom Promotion