Latest Updates
-
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா?
உடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்?
ஆண்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படுமாம். அதற்கான காரணங்கள் என்ன என்று இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம்.
டயாபெட்டீஸ் என்ற நீரிழிவு நோய் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் நோயாகும். இந்த டயாபெட்டீஸ் நோய் தனியாக வருவதோடு இது சில பாதிப்புகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது. இதய நோய்கள், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, கண்பார்வை குறைபாடு, விரல்கள், கால்கள் அல்லது பாதங்களை நீக்குதல்.

நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பு மையங்கள் படி, டைப் 2 டயாபெட்டீஸ் 90-95 % பெரியவங்களை தாக்குகிறது. உலக சுகாதார நிறுவனம் கூற்றுப்படி உலகளவில் 90% மக்கள் டைப் 2 டயாபெட்டீஸ் நோயை கொண்டுள்ளனர். 2013 ன் படி கிட்டத்தட்ட 14 மில்லியன் ஆண்கள் டயாபெட்டீஸ் நோயால் பாதிப்படைந்து உள்ளனர். இது பெண்களின் விகிதத்தை விட அதிகம்.

டயாபெட்டீஸ் ஆண்களின் ஆண்மையை பாதிக்குமா?
மனித இனப்பெருக்க பிரிவில் வெளியிடப்பட்ட கருத்துப் படி டயாபெட்டீஸ் ஆண்களை அதிகளவில் பாதிக்கிறது. இதனால் ஆண்களின் ஆண்மையும் பாதிப்படைகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ப்ரீ டயாபெட்டீஸ் பிரச்சனை இருக்கும் ஆண்களுக்கு விந்தணுக்களில் டி. என். ஏ குறைபாடு, விந்து திரவம் வெளியேறுவதில் விந்தணுக்கள் இல்லாமல் இருத்தல், ஆண்களின் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் குறைந்து காணப்படுதல்.

செக்ஸ் ரீதியான பாதிப்பு
டயாபெட்டீஸ் ஆண்களின் இரத்த குழாய்கள், நரம்புகள், தொற்றுக்கள் அபாயத்தை உண்டாக்குகிறது. இதனால் ஆண்களின் செக்ஸ் ஈடுபாடு குறைகிறது. விறைப்புத் தன்மை பிரச்சனைகள், விந்து வெளியேற்றுவதில் பிரச்சனை, அழற்சி மற்றும் பாலினிடிஸ் போன்ற பாலியல் பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

விறைப்புத் தன்மை குறைபாடு
இந்த குறைபாடு நடுத்தர மற்றும் வயதான ஆண்களிடையே ஏற்படுகிறது. நீரிழிவு நோய் கட்டுப்பாடு தடுப்பு மையம் கருத்துப் படி டயாபெட்டீஸ் இருக்கும் ஆண்களுக்கு மூன்று மடங்கு விறைப்புத் தன்மை பிரச்சனை ஏற்படுகிறது. இரத்த அழுத்தம், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு, கொலஸ்ட்ரால் அளவு போன்றவை மாறுபடுவதால் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.

விந்தணுக்களின் தரம் குறைதல்
இண்டர்நேஷனல் நாளிதழில் வெளியிடப்பட்ட கருத்துப் படி டயாபெட்டீஸால் விந்தணுக்களின் திறன் குறைதல், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் மற்றும் விந்தணுக்களின் வேகம் குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

சரியில்லாத விந்தணு வெளியேற்றம்
டயாபெட்டீஸ் நோயால் ஆணுறுப்பின் சில நரம்புகள் பாதிப்படைகின்றனர். இதனால் விந்தணு வெளியேற்றப்படுவதில் ஒழுங்கற்ற தன்மை ஏற்படுகிறது.

விந்தணுக்கள் சிறுநீருடன் கலத்தல்
டயாபெட்டீஸ் நோயால் பிறப்புறுப்பில் உள்ள நரம்புகள் பாதிப்படைகிறது. இந்த நரம்பால் சிறுநீர்ப் பை தசைகள் கட்டுப்படுத்த முடியாமல் போய் விடுகிறது. இதனால் விந்தணுக்கள் வெளியேற்றப்படும் போது சிறுநீர்ப் பை தசைகள் கட்டுப்பாட்டை இழக்கின்றன. இதனால் செக்ஸின் போது விந்தணு திரவம் சிறுநீர்ப் பைக்கு சென்று விடுகிறது. இந்த பாதிப்பு டயாபெட்டிக் ஆட்டோனோமிக் நியூரோபதி என்ற பாதிப்பால் ஏற்படுகிறது.



Click it and Unblock the Notifications