For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முட்டை சாப்பிடும் சர்க்கரை நோயாளியா நீங்கள்..? உங்களுக்கு என்னவாகும் தெரியுமா..?

குறிப்பாக ஒரு நோயை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முதலில் உணவு தேர்வு மிக இன்றியமையாததாகும். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு இதே போன்ற எண்ணற்ற கேள்விகள் அவர்கள் மனதுக்குள் இருக்

|

நம்ம எல்லோருக்கும் பலவித கேள்விகள் அன்றாடம் இருக்கதான் செய்யும். அதிலும் ஒருசில கேள்விகள் நாம் தினம்தினம் பயன்படுத்தும் விஷயங்களில் இருந்தே நமக்கு தோன்றும். கேள்விகள் ஆயிரம் நமக்கு இருக்கலாம். ஆனால் அவற்றிற்கான விடைகள் எங்கே என்பதை நாம் முதலில் அறிய முயற்சிக்க வேண்டும். ஏனெனில், நாம் யோசிக்கும் முக்கால் வாசி கேள்விகள் நமது அறியாமையை போக்குவதாக இருக்க கூடும். எனவே உங்களுக்குள் கேள்விகள் இருந்தால் அதற்கான விடைகளை முடிந்த அளவுக்கு கண்டறிய முற்படுங்கள்.

can diabetics eat eggs

இத்தகைய வகையான கேள்விதான் ஒருவர் ஏதேனும் நோய்களால் பாதிக்கப்பட்டால் அவர்கள் என்ன வகையான உணவுகளை உண்ண வேண்டும், எத்தகைய வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக்க வேண்டும், எவ்வாறு அந்த நோயினை குணப்படுத்த வேண்டும் போன்றவையே. குறிப்பாக ஒரு நோயை கட்டுக்குள் வைத்து கொள்ள வேண்டும் என்றால், அதற்கு முதலில் உணவு தேர்வு மிக இன்றியமையாததாகும். அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு இதே போன்ற எண்ணற்ற கேள்விகள் அவர்கள் மனதுக்குள் இருக்கத்தான் செய்யும். அதிலும் அவர்கள் முட்டையை சாப்பிடலாமா வேண்டுமா..? போன்ற கேள்விகள் தோன்றுவது இயல்பே. இந்த பதிவில் இவற்றை போன்ற கேள்விகளுக்கான விடையை அறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மக்களை பெரிதும் பாதிக்கும் சர்க்கரை..!

மக்களை பெரிதும் பாதிக்கும் சர்க்கரை..!

இன்று உலகையே அச்சுறுத்தும் ஒரு வகையான நோய் இந்த நீரிழிவு நோய்தான். பத்தில் 6 பேருக்கு சர்க்கரை நோய்கான அறிகுறிகள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. நோய்கள் இன்றி வாழ்ந்த நம் முன்னோர்கள் காலம் முற்றிலுமாக மலையேறி போய், நோய்கள் மட்டுமே வாழ்வு என்ற காலத்தை மட்டுமே நாம் உருவாக்கி கொண்டிருக்கிறோம். நம் தலைமுறை எத்தகைய வாழ்வை அடுத்த தலைமுறையினருக்கு தர போகிறோம் என்பதே மிக பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

கிளைசெமிக் இன்டெக்ஸ்...

கிளைசெமிக் இன்டெக்ஸ்...

இதுதான் (glycaemic index) உடலில் உள்ள கார்போஹைட்ரட்டின் அளவை பொருத்து க்ளுகோஸ் எவ்வளவு நம் உடலில் உள்ளது என்பதை நிர்ணயிக்கும் ஒரு அளவீடு. இன்சுலின் அளவு உடலில் குறைவு ஏற்படும்போது நமக்கு சர்க்கரை நோய் இருப்பதாக குறிப்பிடுகின்றோம். ஆனால் இதன் அளவை எவ்வாறு உயர்த்தலாம் என்று பார்த்தால் அதில் முதன்மையான பங்கு உணவிற்கு இருக்கிறது.

உணவே மருந்து..!

உணவே மருந்து..!

நாம் சாப்பிடும் பல உணவுகளில் சரியான தேர்வு இல்லாமலே உட்கொள்கின்றோம். இதன் விளைவுதான் சர்க்கரையின் அளவு கூடுதல். சில முக்கிய உணவுகள் சர்க்கரையின் அளவை கூட்டாமல் சீரான ஆரோக்கியத்தை தரும். அவற்றில் ஒன்றுதான் முட்டையும். சர்க்கரை நோயாளிகள் முட்டையை சாப்பிடலாமா என்பது சரியான கேள்வியே. ஏனெனில் முட்டையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. சாப்பிடும் உணவு நிச்சயம் மருந்தாக நம் உடலுக்கு அமைய வேண்டும்.

முட்டை எப்படி..?

முட்டை எப்படி..?

முட்டையில் பல ஊட்டசத்துக்கள் உள்ளன. அதிக புரத சத்து, நிறைய கலோரிகள், 13 முக்கிய வைட்டமின்கள் போன்றவை இதில் காணப்படுகிறது. ஒரு முட்டையில் சராசரியாக கீழ்கண்ட ஊட்டசத்துக்கள் இருக்கிறதாம்..!

கலோரிகள் - 70

புரதம் - 6 g

சொலின் - 250 mg

ஒமேகா 3

வைட்டமின் எ, பி, டி, இ

இதில் மிக முக்கிய குறிப்பு என்னவென்றால், இன்சுலின் அளவை முட்டை நன்கு உயர்த்துகிறது.

முட்டை சாப்பிடலாமா..? கூடாதா..?

முட்டை சாப்பிடலாமா..? கூடாதா..?

உண்மையில் பல புரளிகளை நம் மக்கள் நம்பத்தான் செய்வார்கள். இது அவர்களின் இயல்பாக மாறி கொண்டே வருகிறது. ஆனால், இந்த முட்டை பற்றிய கேள்விக்கும் இப்படிப்பட்ட சூழல் இல்லை. நான் இதுவரை சொன்ன தகவல்களில் இருந்தே உங்களுக்கு இந்த கேள்விக்கான பதில் நன்றாக விளங்கி இருக்கும். சர்க்கரை நோயாளிகள் முட்டையை அவர்களது உணவில் எடுத்து கொள்ளலாம். ஆனால் அவற்றின் அளவு மிக முக்கியம். அதோடு மஞ்சள் கருவை உண்ணலாமா..? இல்லை வெள்ளை கருவை உண்ணலாமா..? என்பது அடுத்த கேள்வியாக உங்கள் மனதில் இருப்பதை நான் உணர்வேன் .

மஞ்சளா..? வெள்ளையா..?

மஞ்சளா..? வெள்ளையா..?

வாழ்க்கையில் நமக்கு பல குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். அதனை போன்றுதான் இந்த கேள்வியும். சர்க்கரை நோயாளிகள் மஞ்சள் கருவை சாப்பிடலாமா..? வெள்ளை கருவை சாப்பிடலாமா..? உண்மை என்னவென்றால், சர்க்கரை நோயாளிகள் மஞ்சளை காட்டிலும் வெள்ளை கருவை சாப்பிடுவதே உகந்தது. வேண்டுமென்றால் மருத்துவரை ஆலோசித்து விட்டு இந்த இரண்டையும் சாப்பிடலாம். ஏனெனில் இவை இரண்டிலும் முக்கிய சத்துக்கள் உள்ளது.

சர்க்கரைக்கு மட்டுமா முட்டை..?

சர்க்கரைக்கு மட்டுமா முட்டை..?

முட்டையானது பல்வேறு உடல் சார்ந்த நன்மைகளை தர கூடியது. இதில் பொட்டாசியம் உள்ளதால், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். எனவே சர்க்கரையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய நோய்களையும் வராமல் காக்கும். இதிலுள்ள லுடீன் (lutein) என்ற மூல பொருள் நோய்கள் உடலில் ஏற்படுவதை தடுக்கும். அத்துடன் சொலின் (choline) மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்கு உதவும்.

நீரிழுவும் கொலெஸ்ட்ரோலும்..!

நீரிழுவும் கொலெஸ்ட்ரோலும்..!

சர்க்கரை நோயாளிகளுக்கென்று ஒரு மிக பெரிய வரையறைகளை வைத்து கொள்வார்கள். அதில் முக்கிய ஒன்று இதை சாப்பிட்டால் சர்க்கரை கூடும், அதை சாப்பிட்டால் கொலெஸ்ட்ரோல் கூடும் என்பதே. உணவில் ஜாக்கிரதை முக்கியம்தான். ஆனால் அதற்காக பயம் கொள்ள தேவை இல்லை. முட்டையில் 186 mg கொலெஸ்ட்ரோல் உள்ளது. ஒரு சர்க்கரை நோயாளிக்கு தினமும் 200 mg இது இருக்க வேண்டும். எனினும் வெள்ளை கருவை மட்டும் சாப்பிட்டால் எந்தவித கொலெஸ்ட்ரோல் பிரச்சினையும் ஏற்படாது.

எதிர்ப்பு சக்திக்கும் முட்டையே..!

எதிர்ப்பு சக்திக்கும் முட்டையே..!

சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி பல வித நோய்கள் தாக்க கூடும். இதற்கு முதல் காரணம் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். ஆனால், முட்டை சாப்பிடும் நோயாளிகளுக்கு இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், லுடீன், அதிக எதிர்ப்பு சக்தியை தரும். அத்துடன் உடல் சோர்வை போக்கி வலிமை தரும்.

சர்க்கரை அரிக்கும் எலும்புகள்..!

சர்க்கரை அரிக்கும் எலும்புகள்..!

பொதுவாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக எலும்பு சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க கூடும். பலருக்கு எலும்புகள் விரைவிலேயே தேய்மானம் அடைந்து விடும். முட்டை சாப்பிடும் சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு தேய்மானம் அடையாமல் காக்கும். மேலும் எலும்புகளுக்கு உறுதியை ஏற்படுத்தும்.

வளமோடு வாழுங்கள்...

வளமோடு வாழுங்கள்...

எந்த ஒரு உணவாக இருந்தாலும் அவற்றின் அளவுதான் மிக முக்கியம். அதிலும் சர்க்கரை நோயாளிகள் எந்த உணவு வகையை புதிதாக தங்கள் உணவு பட்டியலில் சேர்க்க வேண்டுமானாலும் தங்கள் மருத்துவரை ஆலோசிப்பது மிக நன்று. நலமோடு வாழ்ந்து வளமாக இருங்கள் நண்பர்களே..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can You Eat Eggs If You Are A Diabetic

Eggs don't have a bad effect in people with diabetes, a new study suggests. Researchers also found that eating an egg-rich diet is good one.
Desktop Bottom Promotion