For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகள் உண்ண மற்றும் தவிர்க்க வேண்டிய பழங்கள்!!

சர்க்கரை நோய் வந்தவர்கள் எந்த மாதிரியான பழங்களை சாப்பிட வேண்டும் மற்றும் தவிர்க்க வேண்டும் என இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Hemalatha
|

சர்க்கரை நோய் வந்தாலே எல்லாருக்கும் எதைத் தொட்டாலும் பயமாகவே இருக்கும். அதனை சாப்பிடலாமா? சர்க்கரையை அதிகரிக்கச் செய்துவிடுமா என சாப்பிடும் ஒவ்வொரு உணவையும் பார்த்து பார்த்து சாப்பிட வேண்டிய கொடுமை உண்டாகும்.

சர்க்கரை நோயாளி என்பது உடலில் ஏற்பட்டுள்ள ஒரு மரபணு மாற்றம்தான். அதனை உங்கள் பழக்க வழக்கங்களால் ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்ளலாம். உண்ணும் உணவுகளில் மிகவும் கவனம் தேவை. மது, புகைப்பிடித்தல் கூடவே கூடாது. இவை பக்கவாதத்திற்கும், டயாபடிக் ரெட்டினோபதிக்கும் வழிவகுத்துவிடும்.

Fruits to add and avoid for Diabetes - All you need to know

காய்கறிகளைப் பற்றி சொல்லட்ய் தேவையில்லை. எல்லா காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பழங்கள் என்று வரும்போது அவை எல்லாமே இனிப்பு வகைகளாக இருப்பதால் எதனை சாப்பிடுவது என பலரும் குழம்புவதுண்டு.

பொதுவாகவே எல்லா வகை பழங்களையும் எடுத்துக் கொள்ளலாம். ஓரிரு பழங்களை மட்டுமே தவிர்க்க வேண்டும் என்பது சற்று ஆறுதல். குறிப்பாக சில வகை பழங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் என்பது ஆச்சரியமான தகவல். அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சில் வைட்டமின் சி, அதிக நார்ச்சத்து, தையமின் என பல அத்யாவசிய ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்

நார்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள், ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்தது. தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும். தினமும் ஆப்பிளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயாளி வரும் சதவீதம் மிகக் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேரிக்காய்

பேரிக்காய்

வைட்டமின் ஏ, பி 1 ,பி 2, சி, ஈ மற்றும் மாவுச்சத்து நிறைந்த பழம். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை வியாதிக்கு முந்தைய நிலையில் இருப்பவர்கள் தொடர்ந்து பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சீராகச் சுரக்கும். சர்க்கரை வியாதி வராமல் தடுக்கலாம்.

செர்ரி

செர்ரி

பீட்டா கரோட்டின், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்த பழம் செர்ரி. தினமும் செர்ரி பழம் ஒரு கப் சாப்பிடலாம்.

கருப்பு ப்ளம்ஸ்

கருப்பு ப்ளம்ஸ்

ஆந்தோ சயனின் நிறைந்தது. கார்போஹைட்ரேட செரிப்பதற்கும், தினமும் ஒரு கப் கருப்பு ப்ளம்ஸ் சாப்பிடலாம். கருப்பு ப்ளம்ஸ் விதைகளை அரைத்து பொடியாக்கி பாலில் போட்டுக் குடிக்கலாம்.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

ஆன்டி ஆக்சிடன்ட், வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இன்சுலின் சிறப்பாகச் செயல்பட உதவும். கொழுப்பை குறைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம்

நார்ச்சத்து, வைட்டமின்-சி, பொட்டாசியம் நிறைந்தது. தினம் ஒன்று சாப்பிடலாம். மருத்துவக் குணம் கொண்ட, கொய்யாப்பழ இலைகளைச் சுத்தம் செய்து பொடியாக்கி கிரீன் டீ போல அருந்தலாம்.

கிவி

கிவி

வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்தது. ப்ளேவனாய்டு எனப்படும் பாலிபீனால் இதில் உள்ளது. அதிக நார்ச்சத்து கொண்டது. சர்க்கரை நோயாளிகள் வாரம் ஒரு பழம் சாப்பிடலாம்.

 தவிர்க்க வேண்டிய உணவுகள்

தவிர்க்க வேண்டிய உணவுகள்

சப்போட்டா

இந்தப் பழத்தின் ஜி.ஐ. குறியீட்டு எண் 55க்கு மேலே உள்ளதால், இதைத் தவிர்க்க வேண்டும். இப்பழத்தில் சர்க்கரையும் கார்போஹைட்ரேட்டும் அதிகம்.

 சீத்தாப்பழம்

சீத்தாப்பழம்

வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, நார்ச்சத்து நிரம்பிய இப்பழத்தில் சர்க்கரை அதிகம். சீத்தாப்பழத்தில் அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது. ஆகவே தவிர்க்க வேண்டும்.

மாம்பழம்

மாம்பழம்

மிகுந்த சர்க்கரை இருப்பதால் பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழத்தைத் தவிர்க்க வேண்டும். உட்கொண்டால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

அன்னாசி

அன்னாசி

அதிகக் கிளைசிமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால், இப்பழத்தைத் தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கோப்பை அன்னாசிப் பழத்தில் 20 கிராமுக்கு மேற்பட்ட அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

திராட்சை

திராட்சை

நார்ச்சத்து, வைட்டமின் எனப் பல ஊட்டச்சத்துகள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. 100 கிராம் திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fruits to add and avoid for Diabetes - All you need to know

Fruits to add and avoid for Diabetes - All you need to know
Story first published: Saturday, January 6, 2018, 15:27 [IST]
Desktop Bottom Promotion