For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிப்புக்கு தடா போடும் ஒரு கல்லீரல் ஹார்மோன் - புதிய கண்டுபிடிப்பு

By Hemalatha
|

இனிப்பினை பிடிக்காதவர்கள் குறைவே. அதுவும் சர்க்கரை வியாதி வந்தவர்கள் இனிப்பினை பார்த்து ஏங்கிப் போவார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவது இன்சுலின் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

A liver hormone that suppresses consumption of sugar

ஆனால் இனிப்பினை சாப்பிடவிடாமல் தூண்டும் ஹார்மோன் ஒன்றை வாஷிங்டன்னில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள லோவா பல்கலைக்கழகத்தில், இந்த ஆராய்ச்சியை செய்துள்ளனர். எலியினைக் கொண்டு பரிசோதித்ததில், கல்லீரலில் FGF21( fibroblast growth factor 21)என்ற ஹார்மோன் சுரக்கப்படுகிறது.

எப்போதெல்லாம் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கின்றதோ, அப்போது, கல்லீரலில் இந்த FGF21 சுரந்து, இரத்தத்தில் கலக்கிறது. பின்னர் மூளைக்கு சென்று, இனிப்பினை உண்ண விடாதவாறு தகவலை கொண்டு செல்கிறது.

இதனால் இனிப்பினை சாப்பிட நமக்கு தோன்றாது என ஆராய்ச்சியாளர்கள் மேத்யூ போதோஃப் மற்றும், ல்யூகாஸ் ஆகியோர் கூறுகின்றனர்.

இதுதான் சர்க்கரை சாப்பிடத் தோன்றுவதை கட்டுப்படுத்தும் முதல் கல்லீரல் ஹார்மோன் என்று கூறுகிறார்கள். இந்த ஹார்மோன் சுரப்பினால் உடல் பருமன் உள்ளவர்கள் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளவர்களின் உணவு கட்டுப்பாட்டில் நல்ல முன்னேற்றத்தை தரும் என்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த FGF21 ஹார்மோன், இன்சுலின் செயலை அதிகரிக்க தூண்டுகிறது. இனிப்பின் சுவையை மரத்துப் போகச் செய்கிறது.

அவர்களின் ஆராய்ச்சி முடிவில் கூறியது என்னெவென்றால், இந்த ஹார்மோன், அதிகப்படியான பசியை கட்டுப்படுத்தும், சர்க்கரை சாப்பிடும் அளவினை குறைக்கும்.

மிக இனிப்பான சுக்ரோஸ், குளுகோஸ் ஆகியவற்றைதான் அவை கட்டுப்படுத்தும் . பொதுவாய் நாம் சாப்பிடும் கார்போஹைட்ரேட் உணவுகளை அல்ல எங்கிறார்கள்.
இந்த ஆய்வு செல் மெட்டபாலிஸம் என்ற ஆன்லைன் இதழில் வெளியாகிறது.

English summary

A liver hormone that suppresses consumption of sugar

A liver hormone that suppresses consumption of sugar
Desktop Bottom Promotion