For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!

By Super
|

நீரிழிவு நோயாளிகள், தாங்கள் உண்ணும் ஸ்நாக்ஸ்களில் 150 கலோரிகள் அல்லது அதற்கு குறைவாக இருக்குமாறு பார்த்து கொள்வது அவசியம். உண்மையாகவே, பசி ஏற்படும் போது மட்டுமே ஸ்நாக்ஸ் சாப்பிடுவது நல்லது. அதிலும் கீழே கொடுக்கப்பட்ட சில ஸ்நாக்ஸ்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக குறைந்த கொழுப்பு உள்ள ஸ்நாக்ஸ்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆய்வுகளின் படி குறைந்த கொழுப்புடைய ஸ்நாக்ஸ்களை மக்கள் 28 சதவீதம் அதிக அளவு உண்கின்றனர். ஏனெனில் இவைகள் கலோரிகளை குறைக்கும் என்பது அவர்களின் கணக்கு. ஆனால் உண்மையில் குறைந்த கொழுப்பு உள்ள சிற்றுண்டிகளில், மற்ற சிற்றுண்டிகளை ஒப்பிடும் போது 11 கலோரிகளே குறைவாக கொண்டுள்ளன. இந்த ஒரு எண்ணத்தினால் முழு கொழுப்பு கொண்டுள்ள உணவுக்கு சரிசமமாக குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை உண்கின்றனர். சரி, இப்போது எந்த ஸ்நாக்ஸ்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம் என்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட்ஸ்

நட்ஸ்

சிற்றுண்டியில் நட்ஸ் வகைகளில் ஒருசிலவற்றை சேர்க்கவும். பாதாம், அக்ரூட் பருப்புகள், பீக்கன்ஸ், வேர்கடலை, மற்றும் முந்திரி போன்ற குறைந்த கொழுப்பு உடைய ஆரோக்கியமான மோனோசாச்சுரேட்டேட் வகை கொழுப்புகள், இதய நோய் அபாயத்தை குறைக்கும். அவைகளில் புரதம் மற்றும் நல்ல கொழுப்பு நிரம்பி காணப்படுவதால், இரத்த சர்க்கரை அளவை உயர்த்தாது.

காய் மற்றும் பழ சாலட்

காய் மற்றும் பழ சாலட்

திராட்சை, தக்காளி, கேரட், சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய், வெள்ளரிகள், ப்ராக்கோலி, மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அதிக அளவில் சிற்றுண்டியில் பயன்படுத்தலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம் அல்லது தயிர் சேர்த்து சாப்பிடலாம். சாலட் போன்றும் செய்து சாப்பிடுவது நல்லது.

சூப்

சூப்

ஒரு சிறிய கோப்பை காய்கறி சூப்பை சாப்பிடுவது நல்லது. அதுவும் ஸ்டார்ச் இல்லாத காய்கறிகளான கீரை, வெங்காயம், பச்சை பீன்ஸ், செலரி மற்றும் சில காய்கறி கலவையை சேர்த்து சூப்பை தயார் செய்யலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் மற்றும் அதன் தோலை சாப்பிடவும். ஆப்பிள் மற்றும் அதன் தோலில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதன் தோலில் சுகாதாரமான கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது கொழுப்பின் அளவை குறைப்பது மட்டுமல்ல, இதய நோய் வராமல் தடுக்கும் தன்மையை பெற்றுள்ளது.

சீஸ்

சீஸ்

குறைந்த கொழுப்புடைய பாலாடைக்கட்டியை சாப்பிடவும். இவை ஒவ்வொன்றிலும் 80 கலோரிகள் நிரம்பி காணப்படுகின்றது. மேலும் இது சர்க்கரையை கட்டுபடுத்தக்கூடிய உணவுப் பொருட்களில் ஒன்று.

திராட்சை மற்றும் வாழைப்பழம்

திராட்சை மற்றும் வாழைப்பழம்

உறைய வைக்கப்பட்ட திராட்சை மற்றும் தோலுரித்த வாழைப்பழம். இவற்றை நன்றாக ஒரு சாண்ட்விச் பையில் வைத்து அடைத்து உறைவிப்பானில் வைக்கவும். நன்றாக உறைந்த பின் இவை சாப்பிடுவதற்கு உகந்த உற்சாகமூட்டும் ஒரு சிற்றுண்டி வகை. ஒரே நேரத்தில் 20 சிவப்பு உறைந்த திராட்சைகளை சாப்பிடலாம் ஏனென்றால் இவை 100 கலோரிகளை மட்டுமே கொடுக்கும்.

ரொட்டி மற்றும் தானியங்கள்

ரொட்டி மற்றும் தானியங்கள்

முழு தானிய மாவினால் செய்த ரொட்டி வகைகள், வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் தானிய ரொட்டி வகைகள், மக்கா சோள மாவினால் செய்த ரொட்டி வகைகள், சிவப்பு அரிசியினால் சமைக்கப்பட்ட உணவு போன்றவையும் மிகவும் சிறந்தது.

வேக வைத்த காய்கறிகள்

வேக வைத்த காய்கறிகள்

வேக வைத்த காய்கறிகள், உறைய வைக்கப்பட்ட காய்கறிகள், நீராவி மூலம் சமைத்த காய்கறிகள், புதிய வெள்ளரி மற்றும் சீவப்பட்ட முட்டை கோசு போன்றவற்றையும் சாப்பிடலாம்.

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்கள்

பெர்ரிப் பழங்களை சாப்பிடலாம். அதிலும் ஒரு கப் பெர்ரி பழத்தில் 70 கலோரிகள் உள்ளன. ஆகவே நீரிழிவு நோயாளிகள் பழங்களில் பெர்ரியை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of snacks that Diabetics can eat | நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ்கள்!!!

Snacks do play an important role in the daily life of a diabetic, particularly those with type 1 diabetes and insulin-requiring type 2 diabetes. For these people between-meal and bedtime snacks are essential to keep blood glucose levels as close to normal as possible and to help prevent low blood sugar. Following are some suggestions for a quick, healthy snack at home.
Desktop Bottom Promotion