Just In
- 5 min ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 2 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 2 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 6 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- News
பொதுப்பணித்துறை பொறியாளர் மீது சரமாரி தாக்குதல்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
- Movies
லவ் யூ ஸோ மச் ... மாலத்தீவில் ஆர்யா - சாயிஷா ரொமான்ஸ்!
- Sports
அண்ணே! ஆடினது போதும்.. வீட்டுக்கு கிளம்புங்க.. சீனியர் வீரருக்கு கல்தா.. சோலியை முடித்த ராகுல்!
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. இனி பழைய ஏடிஎம்களை பயன்படுத்த முடியாது..!
- Automobiles
2019ல் கூகுளில் அதிகம் பேர் தேடிய மோட்டார்சைக்கிள்கள் இவை தான்...
- Technology
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- Education
விண்ணப்பித்துவிட்டீர்களா? ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீரிழிவு நோயாளிகளுக்கு டிபி வரும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்
நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு காசநோய் தாக்கினால் அவர்களுக்கு மரணம் ஏற்படும் வாய்ப்பு 5 மடங்கு அதிகம் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆசியா, ஆப்பிரிக்க கண்டங்களில் வசிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்குதல் அதிகம் இருக்கிறது. அவர்களில் பெரும்பாலோனோருக்கு வருங்காலத்தில் காசநோய் பாதிப்பு ஏற்ழுடும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் ஆய்வை மேற்கொண்டவர்கள்.
கோபென்கேகன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் தான்சானியாவில் இது தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். அப்போது, மனிதர்களை தாக்கும் நீரிழிவு நோய் கண், காது, நரம்பு மண்டலங்களை பாதிப்பதோடு அவர்களுக்கு காசநோய் தாக்குதலையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் இந்த பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது நிபுணர்களின் கருத்து.
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் காசநோயினால் பாதிக்கப்படுகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். எனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் ஆய்வை மேற்கொண்ட டேனியல். எனவே நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுப்பதன் மூலம் காசநோய் ஏற்படுவதையும் தடுக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
மேலும் காசநோய் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு நீரிழிவு பரிசோதனை மேற்கொண்டு சரியான சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.