Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
சர்க்கரை நோயாளிகளே! உங்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தா உங்களுக்கு ஆபத்தான புற்றுநோய் இருக்குனு அர்த்தமாம்...!
Diabates: உலகளவில் அதிக சர்க்கரை நோயாளிகளின் வசிப்பிடமாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சினையாக சர்க்கரை நோய் மாறியுள்ளது. உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியமான ஒன்றாகும்.
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் அவர்கள் மற்ற நோய்களுக்கு எளிதில் ஆளாகலாம். ஆனால் சர்க்கரை நோயால் கணையப் புற்றுநோயும் வரலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீரிழிவு நோய், குறிப்பாக நீண்ட காலமாக இருக்கும் போது, அதனால் கணைய புற்றுநோயின் அபாயம் அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய், குறிப்பாக உயர் இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு சிக்கலானது. சர்க்கரை நோய் எப்படி கணையப் புற்றுநோயை உருவாக்குகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோய் எப்படி கணையப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது?
சர்க்கரை நோய் இல்லாத நபர்களுடன் ஒப்பிடும்போது, நீண்ட காலமாக டைப் 2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கணைய புற்றுநோயை உருவாக்கும் அபாயம் இருமடங்கு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் விளக்குகிறார்கள். இந்த ஆபத்து அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன அவை என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
நீண்டகால ஹைப்பர் கிளைசீமியா
ஹைப்பர் கிளைசீமியா அல்லது நீண்ட காலம் சர்க்கரை நோய் இருப்பது கணையம் உட்பட உடல் முழுவதும் செல்கள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும். காலப்போக்கில், இந்த சேதம் செல்லுலார் பிறழ்வுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குகிறது.
இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ஹைப்பர் இன்சுலினீமியா
டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் போது, உடல் இன்சுலினுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது, இதனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் கணையம் அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இரத்த ஓட்டத்தில் அதிக அளவு இன்சுலின் இருப்பது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும், ஏனெனில் இன்சுலின் ஒரு வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன் ஆகும்.
அழற்சி
நீரிழிவு நோயாளிகளிடையே காணப்படும் நாள்பட்ட அழற்சி, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம். உயர் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு அழற்சி எதிர்வினைகளுக்கு வழிவகுக்கும், இது செல்களை சேதப்படுத்தும் மற்றும் கணையத்தில் புற்றுநோய் கட்டிகளை உருவாக வழிவகுக்கும்.
பீட்டா செல் சேதம்
கணைய புற்றுநோய் கணையத்தின் பீட்டா செல்களை அழிக்கக்கூடும், அவை இன்சுலின் உற்பத்திக்கு காரணமாகின்றன. பீட்டா செல்கள் சேதமடைவதால், நீரிழிவு அறிகுறிகள் மோசமடைகின்றன. இந்த உறவு சில நேரங்களில் ஒரு தீய சுழற்சிக்கு வழிவகுக்கும். இதனால் கணையத்தில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளிகளிடம் காணப்படும் கணைய புற்றுநோயின் அறிகுறிகள்
காரணமில்லாத எடை இழப்பு
எதிர்பாராத எடை இழப்பு புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும். ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதனை உடனடியாக மருத்துவரிடம் சோதிக்க வேண்டும்.
வயதானவர்களுக்கு புதிதாக சர்க்கரை நோய் பாதிப்பு
வயதானவர்களிடையே நீரிழிவு நோயின் திடீர் வளர்ச்சி, குறிப்பாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும் போது மற்றும் எடை வேகமாக குறைவது. கணையப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மேல்வயிற்றில் வலி
மேல் வயிற்றில் தொடர்ந்து வலி அல்லது அசௌகரியம் இருப்பது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம், சில சமயங்களில் இந்த வலி முதுகிற்கும் பரவலாம். இது கணையப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
