Latest Updates
-
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வைத்தால் போதும்… வாஸ்து தோஷம் நீங்கி பணவரவு கொட்டும்! -
உங்களை விட 3 மடங்கு அதிக சம்பளம் வாங்குபவரை திருமணம் செய்யாதீர்கள்! உறவில் விரிசல் ஏற்படுத்தும் அந்த ஒரு விஷயம் இதுதான்! -
வார ராசிபலன் (07 ஜூன் 2026 - 13 ஜூன் 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
ரொம்ப நாளா முகுது வலி இருக்கா? அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு முதுகெலும்பு புற்றுநோய் இருக்கலாம்.. உஷார்
Spinal Cancer: முதுகு வலி என்பது தற்போது பெரும்பாலானோர் தினமும் சந்தித்து வரும் ஒரு பிரச்சனையாகும். இதற்கு நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதோ, தவறான நிலையில் உட்கார்ந்திருப்பதோ அல்லது கால்சியம் குறைபாடோ காரணமாக இருக்கலாம்.
ஆனால் ஒருவருக்கு தொடர்ந்து பல நாட்களாக அல்லது மாதங்களாக முதுகு வலி இருந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு முதுகெலும்பு வரிசையில் உள்ள செல்களின் அசாதாரண வளர்ச்சியால் ஏற்பட்ட கட்டி ஒரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இப்படியான கட்டிகள் வீரியமிக்கவையாகவோ அல்லது புற்றுநோய் அல்லாதவையாகவோ இருக்கலாம். ஆனால் இதை எக்ஸ்-ரே, எம்ஆர்ஐ மற்றும் பிற ஆய்வக பரிசோதனையின் மூலமே உறுதிப்படுத்த முடியும். முதுகுத்தண்டு கட்டிகளை, அது இருக்கும் இடத்தைப் பொறுத்து வகைப்படுத்தப்படுகிறது.
அதாவது கட்டியானது முதுகுத்தண்டுக்கு வெளியே உள்ளதா, பாதுகாப்பு உறைக்குள் உள்ளதா அல்லது முதுகுத்தண்டுக்கு உள்ளே உள்ளதா எனபதன் அடிப்படையில் இது வகைப்படுத்தலாம். இப்போது முதுகுத்தண்டு அல்லது முதுகெலும்பு புற்றுநோய் இருந்தால், அது எப்படிப்பட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும் மற்றும் அதை எவ்வாறு கண்டறிவது என்பதைக் காண்போம்.
முதுகெலும்பு புற்றுநோயின் அறிகுறிகள்
முதுகெலும்பில் புற்றுநோய் கட்டிகள் இருந்தால், முதலில் தெரியும் ஒரு அறிகுறி என்றால், அது முதுகு வலி தான். அதுவும் இந்த முதுகு வலியானது கூர்மையாக இருப்பதோடு, முதுகுத்தண்டுவடம் பலவீனமாக இருப்பதை உணரக்கூடும். மேலும் முதுகுதண்டுவடத்தில் கட்டிகள் இருந்தால், பின்வருமாறு முதுகு வலியை சந்திக்க நேரிடும். அவை:
* முதுகுவலி படிப்படியாக தீவிரமாகும்.
* எவ்வளவு ஓய்வு எடுத்தாலும், வலி நீடித்திருக்கும்.
* முக்கியமாக இரவு நேரத்தில் வலி தீவிரமாக இருக்கும்.
* மேலும் முதுகில் ஊசியால் குத்துவது போன்று மிகவும் கூர்மையான வலியை சந்திக்க நேரிடும்.
முதுகெலும்பு புற்றுநோய் இருப்பின், முதுகு வலியுடன் பின்வரும் அறிகுறிகளையும் சந்திக்க நேரிடும். அவையாவன:
* பலவீனமான தசை
* உணர்வின்மை
* கால்களில் வெப்பநிலை உணர்வு குறைவது
* சிறுநீர்ப்பை மற்றும் குடல் கட்டுப்பாட்டை இழப்பது
* பாலியல் செயலிழப்பு
* நடக்க முடியாமை
முதுகெலும்பு புற்றுநோய் கட்டிகளானது 97 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளுறுப்புக்களில் இருந்து தான் முதுகுகெலும்பு வரிசைக்கு பரவவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதுகெலும்பில் உள்ள கட்டிகளை எப்படி கண்டறிவது?
முதுகெலும்பில் உள்ள கட்டிகளை கண்டறிவது என்பது ஒரு சிக்கலான செயல்முறை. இதற்கு நரம்பியல் சோதனையின் மூலம், இயக்கம் மற்றும் உணர்வுகள் அனைத்தையும் சோதனை செய்ய வேண்டும். மருத்துவர் உங்களுக்கு முதுகெலும்பில் கட்டிகள் இருப்பதாக சந்தேகித்தால், அதை உறுதிப்படுத்த பின்வரும் சோதனைகளை செய்ய பரிந்துரைப்பார். அந்த சோதனைகள் பின்வருமாறு:
* இரத்த பரிசோதனைகள்
* முதுகுத் தட்டு பரிசோதனைகள்
* சிறுநீர் பரிசோதனைகள்
* MRI அல்லது எம்ஆர்ஐ
* MRS அல்லது எம்ஆர்எஸ்
* SPECT
* ஆஞ்சியோகிராபி
* மேக்கெட்என்செபலோகிராபி
* திசு பயோப்சிஸ் போன்றவை.
எனவே நண்பர்களே! உங்களுக்கு நீண்ட காலமாக கடுமையான முதுகு வலி இருந்தால், அதை பொறுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனைகளை செய்து, தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications