Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
எச்சரிக்கை! இந்த 5 மருந்துகளை தொடர்ந்து எடுத்தா.. ஞாபக மறதி வந்துடுமாம்... ஜாக்கிரதையா இருங்க...
Dementia: சமீப காலமாக மக்களிடையே டிமென்ஷியா பிரச்சனை அதிகரித்து வருகிறது. டிமென்ஷியாவால் சுமார் 55 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் புதிய டிமென்ஷியா வழக்குகள் பதிவாகி வருகின்றன. குறிப்பாக வயதான காலத்தில் இந்த டிமென்ஷியா பிரச்சனையை சந்திக்கக்கூடும்.
டிமென்ஷியா என்பது ஒரு நரம்பியல் நோயாகும். இந்த நோயால் ஒருவர் ஞாபக மறதி, மிகுந்த கவலை, முடிவுகளை எடுப்பதில் சிரமம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இந்த டிமென்ஷியா மிதமானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். டிமென்ஷியா பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி நடவடிக்கைகளுக்கு கூட ஒருவரின் உதவி தேவைப்படலாம்.

எனவே திடீரென்று உங்களால் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல், அடிக்கடி மறதியை சந்தித்தால், அதை சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இப்படிப்பட்ட டிமென்ஷியா ஒருசில மருந்துகளை தொடர்ந்து எடுப்பதால் தூண்டப்படுவதாக டாக்டர் ஜைன் ஹசன் கூறியுள்ளார். இப்போது டிமென்ஷியாவைத் தூண்டும் அந்த மருந்துகள் எவையென்பதைக் காண்போம்.
1. பெனாட்ரில்
பெனாட்ரில் டிமென்ஷியாவுடன் தொடர்புடையது. அதுவும் இந்த பெனாட்ரிலை நீண்ட காலமாக உட்கொண்டு வந்தால், அது நரம்பு மண்டலத்தில் செய்திகளை அனுப்பும் மற்றும் கற்கும் மற்றும் நினைவாற்றலுக்கு காரணமான அசிடைல்கொலின் என்ற வேதிப்பொருளைத் தடுக்கிறது. எனவே பெனாட்ரிலை எவ்வளவு தொடர்ந்து எடுக்கிறோமோ, அதற்கேற்ப டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். உதாரணமாக, 8 ஆண்டுகளில் பெனாட்ரில்லை 1 வருடத்திற்கு 50 டோஸ்களுக்கு மேல் எடுத்துக் கொண்டவர்கள் டிமென்ஷியா அபாயத்தில் இருப்பதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
2. ஓபியேட்ஸ்
நாள்பட்ட வலிக்கு பயன்படுத்தும் ஓபியாய்டு என்னும் மருந்து டிமென்ஷியா மற்றும் மூளையை மோசமாக பாதிக்கும் அபாயத்துடன் தொடர்புடையது. ஆய்வு ஒன்றிலும் ஓபியாய்டு பயன்பாடு டிமென்ஷியா அபாயத்துடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. ஓபியாய்டுகளைப் பயன்படுத்தாதவர்களை விட, நாள்பட்ட வலியைக் கொண்டு ஓபியாய்டு பயன்படுத்துபவர்கள் அல்சைமர் நோயை உருவாக்கும் அபாயத்தில் இருப்பதாக மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
3. ஒமேப்ரஸோல்
நீண்ட காலமாக ஒமேப்ரஸோல் என்னும் புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர் (PPI) பயன்படுத்தி வந்தால், அது டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கலாம். நரம்பியல் துறையில் 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குறைந்தது நான்கரை ஆண்டுகளுக்கு ஒமேப்ரஸோலை எடுத்துக் கொண்டவர்களுக்கு டிமென்ஷியா ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
4. பென்சோடியாசெபைன்கள்
பென்சோடியாசெபைன்கள் ஒருவரது நினைவாற்றலை பாதிக்கும். அதுவும் இந்த பென்சோடியாசெபைன்களை உட்கொண்ட பிறகு, அது குறுகிய கால நினைவாற்றல் பாதிக்காமல், நீண்ட கால நினைவாற்றலை பலவீனப்படுத்தி, இறுதியில் டிமென்ஷியாவைத் தூண்டுகிறது.
5. ட்ரைசைக்ளிக் ஆண்டிடிரஸன்ட்கள்
சில ஆய்வுகளில் ட்ரைசைக்ளிக் ஆண்டிடிரஸன்ட்கள் டிமென்ஷியாவின் அபாயத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் இவற்றை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தால், அது டிமென்ஷியா மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
எதுவாயினும், மேலே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளை நீங்கள் எடுத்து வந்தால், அவற்றில் மாற்றங்களை செய்யும் முன், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications