Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
சளி பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப இந்த டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க... சீக்கிரம் சரியாகும்..
Cold Cough Remedies In Tamil: குளிர்காலம் வந்தாலே சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் தலைத்தூக்க ஆரம்பித்துவிடும். எந்நேரமும் கையில் ஒரு டிஷ்யூ பேப்பர் அல்லது கர்சீப் வைத்துக் கொண்டு இருக்க வேண்டிய சூழலில் இருக்க வேண்டியிருக்கும். அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில் ஒருவரது நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் தான், அந்நபர் அடிக்கடி சளி, இருமலால் அவதிப்படக்கூடும்.
எனவே குளிர்காலத்தில் சளி, இருமல் பிரச்சனைகள் வராமல் இருக்க, நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்களைக் கொண்டே ஒருசில டீக்களை தயாரித்து குடித்து வாருங்கள். சொல்லப்போனால் அக்காலத்தில் நம் முன்னோர்களின் வலுவான நோயெதிர்ப்பு சக்திக்கு இப்படிப்பட்ட டீக்கள் தான் ஒரு முக்கிய காரணம். இப்போது சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட குடிக்க வேண்டிய டீக்கள் எவையென்பதைக் காண்போம்.

இஞ்சி டீ
இஞ்சி மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் என்பதை அனைவருமே அறிவோம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் கிருமிகளின் வளர்ச்சியை திறம்பட தடுக்கும். அதுவும் இதில் உள்ள ஜின்ஜெரால் என்னும் பொருள் உடலின் நோயெதிரப்பு சக்தியை வலுப்படுத்த உதவி புரிந்து, சளி, இருமலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. இந்த இஞ்சி டீயைத் தயாரிக்க, சிறிது இஞ்சியை எடுத்து அதைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து அவ்வப்போது குடிக்க வேண்டும்.
பட்டை, கிராம்பு, எலுமிச்சை டீ
சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் பட்டை, கிராம்பு, எலுமிச்சை கொண்டு டீ தயாரித்துக் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இந்த டீயில் உள்ள ஒவ்வொரு பொருளுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. மேலும் இவற்றில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் இருப்பதால், இவை இருமல், சளிக்கு காரணமான கிருமிகளை அழிக்க உதவி புரியும். அதுவும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தி வலுப்படுத்த உதவி புரிகின்றன. எனவே சளி பிடித்திருக்கும் வேளையில் இந்த டீயை அடிக்கடி செய்து குடியுங்கள்.
யூகலிப்டஸ் டீ
பொதுவாக யூகலிப்டஸ் தைலத்தை தான் சளி, இருமலின் போது ஆவி பிடிக்கும் போதோ அல்லது நெற்றியில் தடவிக் கொள்ளவோ செய்வோம். ஆனால் சளி இருமல் பிரச்சனைகளின் போது 1 கப் யூகலிப்டஸ் டீயைக் குடித்து வந்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த டீயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சளி, இருமலுக்கு காரணமான கிருமிகளின் வளர்ச்சியை எதிர்த்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
துளசி டீ
துளசி புனிதமான செடியாக கருதப்பட்டாலும், அதிக மருத்துவ பண்புகளைக் கொண்ட செடியும் கூட. ஆயுர்வேதத்தில் கூட துளசி பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் துளசியில் ஆன்டி-மைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் இருமல் நிவாரண பண்புகள் போன்றவை இருப்பதால், சளி, இருமலின் போது இந்த துளசி டீயை அடிக்கடி தயாரித்து தேன் கலந்து குடிக்கும் போது, உடனடி நிவாரணம் கிடைக்கும்.
புதினா டீ
சளி இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கும் மற்றொரு டீ தான் புதினா டீ. புதினாவில் உள்ள மெந்தோல் சளி, இருமல், தொண்டை புண் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. இந்த புதினா டீயை தயாரிக்க, கொதிக்கும் நீரில் புதினா இலைகளை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications