தலை வலிக்கிற மாதிரி சில சமயங்களில் காதுக்கு பின்னாடியும் வலிக்கும் - அது ஏன்னு தெரியுமா?

Headache Behind The Ear Causes In Tamil: சில சமயங்களில் நமக்கு சளிப் பிடித்தாலோ அல்லது தலைவலி ஏற்பட்டாலோ காதுக்கு பின்னாடி வலிக்க ஆரம்பிக்கும். இது ஏன் என்று நாம் யோசித்தது உண்டா? காதுக்கு பின்னாடி வலி ஏற்படுவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. நரம்பு காயங்கள், தொற்றுகள் மற்றும் தாடை பிரச்சினைகள் போன்றவை காரணமாக அமைகிறது.

காதுக்கு பின்னால் ஏற்படும் வலியானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தலைக்கு பின்னால் ஏற்படுவதை குறிக்கிறது. எனவே இந்த வலியை போக்க முதலில் காதுக்கு பின்னாடி ஏற்படும் வலிக்கு என்ன காரணங்கள் காரணமாக அமைகிறது என்பதை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

Causes Of Headache Behind The Ear In Tamil

காதுக்கு பின்னாடி வலி ஏற்படக் காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:

ஆக்ஸிபிடல் நியூரால்ஜியா:

காதுக்குப் பின்னால் தலைவலி ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணமாக ஆக்ஸிபிடல் நியூரால்ஜியா என்பது உள்ளது. ஆக்ஸிபிடல் நரம்புகளில் காயம் அல்லது வீக்கம் ஏற்படும் போது, ​​அழுத்தம் அல்லது எரிச்சல் ஏற்படும் போது போது இந்த ஆக்ஸிபிடல் நியூரால்ஜியா ஏற்படுகிறது. இந்த நரம்புகள் முதுகுத் தண்டுவடத்தின் மேற்புறத்தில் இருந்து உச்சந்தலையில் வரை செல்கின்றன.

இந்த பாதிப்பு ஏற்பட்டால் வலி பொதுவாக தலையின் ஒரு பக்கத்தில் தொடங்குகிறது. பிறகு படிப்படியாக வலி இருபுறமும் பரவுகிறது. வீக்கம், அதிகப்படியான இறுக்கமான தசைகள் அல்லது அதிர்ச்சிகரமான காயம் போன்றவற்றால் இந்த அழுத்தம் அல்லது எரிச்சல் ஏற்படலாம். இந்த வகையான பாதிப்பால் ஒற்றைத் தலைவலி, க்ளஸ்டர் தலைவலி அல்லது டென்ஷன் தலைவலி போன்றவற்றை நீங்கள் உணரலாம்.

ஆக்ஸிபிடல் நியூரால்ஜியா உள்ளவர்களுக்கு வலியானது துளைப்பது போன்றோ மற்றும் குத்துதல் போன்றோ இருக்கும். இந்த தலைவலியானது பொதுவாக சில வினாடிகள் முதல் சில நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும். மேல் கழுத்து, தலையின் அடிப்பகுதி, காதுகளுக்கு பின்னால் போன்ற இடங்களில் அதிகமான வலியை நீங்கள் உணர நேரிடலாம்

மாஸ்டாய்டிடிஸ்

மாஸ்டாய்டிடிஸ் என்பது ஒரு வகை காது தொற்று ஆகும். இது மாஸ்டாய்டு என்ற எலும்பு தொற்றை குறிக்கிறது. காதுக்கு நேரடியாகப் பின்னால் உள்ள எலும்பு தொற்றில் இது ஏற்படுகிறது. பெரியவர்களை விட குழந்தைகளில் இந்த தொற்று மிகவும் பொதுவானது.

மேலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த தொற்று அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. காய்ச்சல், காதில் இருந்து திரவ வெளியேற்றம், சோர்வு, பாதிக்கப்பட்ட காதில் தற்காலிக காது கேளாமை போன்ற அறிகுறிகள் தென்படலாம். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

TMJ பிரச்சினைகள்

டெம்போரோமாண்டிபுலர் மூட்டுகள் (TMJ) என்பது தாடையில் பந்து மற்றும் சாக்கெட் வடிவமைப்பு கொண்ட மூட்டுகளாகும்.. இந்த மூட்டுகளில் ஏற்படும் சிக்கல்கள் தலைவலி பிரச்சினையை உண்டு பண்ணுகிறது. TMJ வீக்கம் உள்ள பெரும்பாலான மக்கள் தாடை மற்றும் காதுக்கு பின்னால் வலி போன்ற வலியை உணர்கிறார்கள்.

தாடையில் கிளிக் அல்லது எதாவது நொறுங்கிய சத்தம் கேட்டல், காது வலி, டின்னிடஸ், கேட்கும் திறனில் மாற்றங்கள், தலைச்சுற்றல், காதுகள் நிறைந்தது போன்ற ஒரு உணர்வு, தாடையில் இறுக்கம் ஏற்படுதல் போன்றவை அறிகுறிகளாகும்

மன அழுத்தம், பற்களை அரைத்தல் (ப்ரூக்ஸிசம்), கீல்வாதம், காயங்கள், அசாதாரண தாடை சீரமைப்பு, மனச்சோர்வு, கவலை, தன்னுடல் தாக்க நோய்கள், ஃபைப்ரோமியால்ஜியா போன்ற நாள்பட்ட வலி நிலைமைகள் போன்றவற்றால் TMJ பிரச்சினைகள் ஏற்படலாம்.

காதுக்கு பின்னாடி ஏற்படும் வலியை போக்க சிகிச்சை முறைகள்

உங்களுக்கு ஆக்ஸிபிடல் நியூரால்ஜியா இருந்தால் மருத்துவர் கீழ்க்கண்ட மருந்துகளை பரிந்துரைப்பார். தசையை தளர்த்தும் மருந்துகள், நரம்புகளை அமைதிப்படுத்துதல், அழற்சியை குறைக்க ஸ்டீராய்டு மருந்துகள், உடல் சார்ந்த சிகிச்சை முறைகள், மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள், கார்பமாசெபைன் (டெக்ரெட்டோல்) மற்றும் கபாபென்டின் போன்ற வலிப்பு எதிர்ப்பு மருந்துகள் போன்றவற்றை பரிந்துரைக்கிறார்.

இதுவே மாஸ்டாய்டிடிஸ் இருப்பவர்களுக்கு அவசர மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது. இதற்கு ஆன்டி பயாடிக் பரிந்துரைக்கப்படுகிறது. காதுகளில் உள்ள திரவத்தை வெளியேற்ற காதுகளினுள் ஒரு குழாயைச் செருகி அதை வெளியேற்றுகின்றனர். மாஸ்டாய்டு எலும்புகளில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் அது அறுவை சிகிச்சை மூலம் தீர்க்கப்படுகிறது.

உங்களுக்கு TMJ பிரச்சினைகள் இருந்தால் செயலிழப்பிற்கு பொட்யூலினம் டாக்ஸின் (போடோக்ஸ்) போன்ற மூல ஊசிகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். மருந்துகள் எதுவும் உதவவில்லை என்றால் TMJ அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

காதுக்கு பின்னாடி ஏற்படும் வலி உங்களுக்கு தொடர்ந்து இருந்தாலோ, கடுமையான வலி இருந்தாலோ, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Monday, September 25, 2023, 19:20 [IST]
Desktop Bottom Promotion