Latest Updates
-
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கோலாப்பூரி முட்டை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
22 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் அதிசய முலாம்பழம் - இந்த பழத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
கர்நாடகா ஸ்டைல் சிக்கன் தொன்னை பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
பணக்காரர்களை விட இந்த குணம் உள்ளவர்கள்தான் சமூகத்திற்கு முக்கியமானவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மட்டன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 19 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
இளைஞர்களிடம் வேகமாக பரவி வரும் 5 ஆபத்தான புற்றுநோய்கள் இதுதான்... இதன் அறிகுறிகள் என்ன தெரியுமா?
சமீப காலமாக சில ஆபத்தான புற்றுநோய்கள் இளைஞர்களிடையே வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாழ்க்கை முறை மாற்றங்கள் முதல் சுற்றுச்சூழல் பாதிப்புகள் வரை, இந்த ஆபத்தான போக்கிற்கு பல காரணிகள் உள்ளன. National Cancer Institute அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டில், 15 முதல் 39 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பெருமளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்பக புற்றுநோய், டெஸ்டிகுலர் புற்றுநோய், மெலனோமா, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், லுகேமியா மற்றும் லிம்போமா போன்றவை இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களைத் தாக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய்களாகும். இது ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ஆபத்துகளைத் தணிப்பதிலும், சரியான சிகிச்சையைக் கண்டுபிடிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இளைஞர்களை அதிகம் தாக்கும் பொதுவான புற்றுநோய்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மார்பக புற்றுநோய்
ஒரு காலத்தில் பெரும்பாலும் வயதான பெண்களிடம் மட்டுமே காணப்பட்ட மார்பகப் புற்றுநோய், இப்போது 40 வயதுக்குட்பட்ட பெண்களிடையேயும் அதிகம் காணப்படுகிறது. மாறிவிட்ட வாழ்க்கை முறை, மரபணு மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வெளிப்பாடுகள் ஆகியவை இந்த பிரச்சினைக்கு காரணிகளாக இருக்கலாம். ஒருவரது குடும்ப வரலாற்றை அறிந்திருப்பதும், வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்வதும் இந்த புற்றுநோயை அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.
குடல் புற்றுநோய்
இளைஞர்களிடையே குடல் புற்றுநோய் வேகமாக அதிகரித்து வருவதாக புதிய ஆய்வு கூறுகிறது. குடல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகைகளில் ஒன்று பெருங்குடல் புற்றுநோயாகும். இதன் அறிகுறிகள் மற்ற நோய்களின் அறிகுறிகள் போலவே இருப்பதால் இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய தவறி விடுகின்றனர். இளைஞர்களிடையே ஏற்படும் இந்த உயர்வு மிகவும் ஆபத்தானது. ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமன், உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் ஆகியவை இந்த வகை புற்றுநோய்க்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளாகும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், முதன்மையாக ஹியூமன் பாப்பிலோமா வைரஸால் (HPV) ஏற்படுகிறது, இதை தடுக்க தடுப்பூசிகள் இருந்தாலும், சமீப காலங்களில் இளம் பெண்களிடையே இந்த நோயின் விகிதம் வேகமாக அதிகரித்துள்ளன. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை சீரான இடைவெளியில் பரிசோதிப்பது மிகவும் முக்கியமானது.
லிம்போமா
லிம்போமாக்கள் லிம்போசைட்டுகள் எனப்படும் சில நோயெதிர்ப்பு உயிரணுக்களில் தொடங்கும் புற்றுநோய்கள் ஆகும். இந்த புற்றுநோய்கள் நிணநீர் முனைகள் அல்லது டான்சில்ஸ் அல்லது தைமஸ் போன்ற பிற நிணநீர் திசுக்களை பாதிக்கின்றன. இந்த புற்றுநோயின் தாக்கம் இளம் வயதினரிடையே அதிகமாக உள்ளது. காரணமில்லாத சோர்வு, வீங்கிய நிணநீர் கணுக்கள் அல்லது விவரிக்க முடியாத எடை இழப்பு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.
மெலனோமா
மெலனோமா என்பது தோல் புற்றுநோயின் ஒரு வடிவமாகும். சமீப காலங்களில், இளம் வயதினரிடையே, குறிப்பாக பலவீனமான சருமத்தைக் கொண்டவர்களிடையே இந்த வகையான புற்றுநோய் அதிகரித்து வருகிறது. மரபணு காரணங்களால், மெலனோமா இளம் வயதிலேயே ஏற்படலாம். மெலனோமாவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது இதன் ஒரே ஆறுதல்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
