Latest Updates
-
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் இந்த எண்ணெய் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டதாம் - காரணம் என்ன தெரியுமா? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி கும்மாயம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
ராகு-கேதுவின் அரிய கிரக சேர்க்கை இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டத்தை கொடுக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
ஆடி மாத ராசி பலன் 2026: 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? - ஜோதிடர் ஜெயலட்சுமி கணிப்புகள்! -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தண்ணி குழம்பு வையுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பச்சை மிளகாய் இருந்தா இந்த செட்டிநாடு மிளகாய் மண்டியை செய்யுங்க - காரமே இல்லாம சாப்பிட அருமையா இருக்கும் -
Sarcoma Awareness Month: சார்கோமா என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்த 4 நபர்கள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் உங்க உயிருக்கு எப்ப வேணாலும் ஆபத்து வரலாம் - சாணக்கிய தந்திரம் -
ஜூலை இறுதியில் அடுத்தடுத்து நடக்கும் சனி, புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சுரைக்காய் தோசையும்.. முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
உங்க நகத்தில் இப்படி கருப்பு கோடு தெரியுதா? அப்ப உங்களுக்கு இந்த புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்காம்.. உஷார்..
Black Line On Nails: உலகில் எண்ணற்ற மக்களின் இறப்புக்கு காரணமாக இருப்பது இதய நோய் மற்றும் புற்றுநோய் தான். என்ன தான் மருத்துவ உலகில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இவ்விரு நோயால் ஏராளமானோர் இறந்து வருகிறார்கள். இதற்கு காரணம் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து போதுமான சிகிச்சையை மேற்கொள்ளாமல் இருப்பது தான்.
தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தால் உடலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதில் பல ஆரோக்கிய பிரச்சனைகள் சில கொடிய நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும் இந்த அறிகுறிகள் பொதுவாக சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் போன்று இருப்பதால், நிறைய பேர் அதைப் புறக்கணிக்கிறார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவைச் சேர்ந்த தோல் மருத்துவரான Dr Lindsey Zubritsky மிகவும் அரிதான ஆனால் கொடிய தோல் புற்றுநோய் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த இன்ஸ்டா வீடியோவில் தோல் புற்றுநோயின் மிகவும் அரிதான மற்றும் நிறைய பேர் புறக்கணிக்கும் அறிகுறி ஒன்றைக் குறித்து தெரிவித்துள்ளார்.
அதாவது விரல் நகங்களில் கருமையான கோடு தெரிந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். அது ஒரு வகையான சரும புற்றுநோயான சப்யூங்குவல் மெலனோமாவின் அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிகுறியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே அதை கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதுவும் நகங்களில் காணப்படும் இந்த கோடு ஒரு நகம் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நகங்களிலும் காணப்படலாம். அதற்காக நகங்களில் இப்படியான கோடு இருந்தால், நிச்சயம் புற்றுநோயாக தான் இருக்கும் என்பதில்லை. சிலருக்கு நகங்களில் மெல்லிய கோடு தென்படலாம். இப்படியான கோடு சப்யூங்குவல் ஹீமாடோமா ஆகும்.
இந்த ஹீமாடோமா தீங்கு விளைவிக்காதது. பெரும்பாலும் இப்படியான கோடு நகங்களில் ஏதேனும் அடிப்பட்டால் ஏற்படும். இந்த கோடு காலப்போக்கில் நகங்கள் வளரும் போது தானாக மறைந்துவிடும். அதுவே புற்றுநோயாக இருந்தால், அந்த கருமை கோடு மறையாமல் இருக்கும்.
சப்யூங்குவல் மெலனோமா நக படுக்கையில் கருப்பு-ப்ரெளன் நிறமாற்றத்தை ஏற்படுத்தும். இது நகங்களில் கருப்பு நிற கோடாகவோ அல்லது நகங்களின் ஒரு பகுதி முற்றிலும் நிறம் மாறியோ காணப்படலாம். சில சமயங்களில் இந்த நிறமாற்றமடைந்த பகுதி தடித்து, பிளவு அல்லது சேதத்தை ஏற்படுத்தி, வலி மற்றும் வீக்கத்தை உண்டாக்கலாம்.
சப்யூங்குவல் மெலனோமாவின் பிற முக்கிய அறிகுறிகள்:
* எங்கும் அடிப்படாமல் நகங்களில் அடர் கருப்பு அல்லது ப்ரௌன் நிறத்தில் கோடுகள் காணப்படும்.
* இந்த கோடுகள் காலப்போக்கில் பெரிதாகும்.
* நகங்கள் வளர்ந்தாலும், அந்த கருமை நிற கோடு மறையாமல் அப்படியே இருக்கும்.
* நகத்தைச் சுற்றியுள்ள தோல் கருமையாகும்.
* நகங்களில் இரத்தக்கசிவு அல்லது கட்டிகள் உருவாகத் தொடங்கும்.
* கைவிரல் மற்றும் கால் விரல் நகங்கள் நகப்படுக்கையில் இருந்து பிரியும்.
* நகத்தட்டுகள் மிகவும் மெல்லியதாக, விரிசல் அல்லது சேதமடையத் தொடங்கலாம்.
எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், அதை சாதாரணமாக எண்ணாமல், உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.
Image Courtesy: Verywell Health
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications