Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
பெண்களின் உடல் பற்றி அவர்களுக்கே தெரியாத ரகசியங்கள்... இவ்வளவு ரகசியங்கள் இருக்கா?
இயற்கையின் மிகவும் அற்புதமான படைப்பு என்றால் மனிதஉடல்தான். மனித உடல் என்பது பலவித ஆச்சரியங்கள் நிறைந்ததாகும். அதேசமயம் ஆண்களின் உடலும், பெண்களின் உடலும் முற்றிலும் வித்தியாசமானது. பெண்களின் உடல் காலப்போக்கில் பல மாற்றங்களுக்கு ஆளாகிறது.
எனவே பல அதிசயங்கள் நிறைந்த இந்த உடலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இயற்கையானதுதான். இந்த ஆர்வம் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கே இருக்கும். பெண்களுக்கு அவர்களின் உடலைப் பற்றி இருக்கும் சில சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் இருக்கும். அவற்றுக்கான பதில்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உதடுகளிலும், கன்னங்களிலும் முடி இருப்பது அசாதாரணமானதா?
இது நிச்சயமாக அசாதாரணமானது இல்லை. இது பெரும்பாலான பெண்களுக்கு இருப்பதுதான். ஒவொருவருக்கும் கோர்சென்ஸ் அளவு மாறுபடும். சில பெண்களுக்கு முன் தலையிலும், வயிற்றிலும், பின்புறத்திலும் கூட முடி இருக்கும். இது சாதாரணமானதுதான். ஹார்மோன்களின் வேறுபாடு காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது. முடி அதிகமாகவும், அடர்த்தியாகவும் வளரும் வரை கவலைப்பட தேவையில்லை.
முதல் முறை உடலுறவின் போது ஏன் இரத்தம் வரவில்லை?
பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை இழக்கும்போது, அதாவது, முதல் முறையாக உடலுறவு வைத்துக் கொள்ளும்போது, ஹைமென் உடைவதால் இரத்தப்போக்கு ஏற்படும். ஹைமென் என்பது பெண் உறுப்புக்குள் இருக்கும் ஒரு சவ்வாகும், முதல்முறை உடலுறவு கொள்ளும்போது இந்த சவ்வு கிழிந்துவிடுவதால் இரத்தம் வரும். இந்த சவ்வு உடலுறவு இல்லாமல் மற்ற காரணங்களால் கூட கிழியலாம். எனவே முதல்முறை உறவுகொள்ளும் போது இரத்தப்போக்கு ஏற்படவேண்டுமென்ற கட்டாயமில்லை.
பிறப்புறுப்பை சுற்றியுள்ள முடிகள் இருப்பது ஆபத்தானதா?
பிறப்புறுப்பை சுற்றி முடி வளர்வது ஆண், பெண் இருவருக்குமே இயற்கையானதுதான். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவற்றை அடிக்கடி சுத்தம் செய்து உங்களின் அந்தரங்க உறுப்புக்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான். நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப அவற்றை வெட்டலாம் அல்லது ஷேவ் செய்யலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால் நீங்கள் செய்யும் அனைத்தையும் சுகாதாரமாக செய்ய வேண்டும்.
பிறப்புறுப்பை சுத்தப்படுத்தும் தயாரிப்புகளை பயன்படுத்தலாமா?
பெண்களின் பிறப்புறுப்பில் pH அளவை சீராக பராமரிக்க சந்தைகளில் யோனியை சுத்தம் செய்யும் பல தயாரிப்புகள் கிடைக்கின்றது. உண்மையில் சொல்லப்போனால் இவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை, உங்களின் பிறப்புறுப்பு அதன் pH நிலையை அதுவே சீராக வைத்துக்கொள்ளும், மருத்துவ காரணங்களுக்காக உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே அவற்றை பயன்படுத்த வேண்டும். பிறப்புறுப்பை சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி சுத்தப்படுத்தி உலர்த்தினால் போதுமானது.
உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?
ஆண்களை போல் பெண்கள் எளிதாக உச்சகட்டத்தை அடையமாட்டார்கள். உச்சக்கட்டம் எவ்வாறு இருக்கும் என்ற ஆர்வம் அனைத்து பெண்களுக்கும் இருக்கும். ஆனால் அதனை வரையறை படுத்த முடியாது என்பதே உண்மை. இந்த உணர்வு வரும்போது உங்கள் உடல் இறுகி, வளைந்து மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும்.
ஒரு மார்பகத்தை விட மற்றொன்று சிறியதாக இருப்பது சாதாரணமானதா?
இது பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரு சந்தேகமாகும். இரண்டு மார்பத்தின் அளவும் வேறுபடுவது இயற்கையானதுதான். எனவே நிச்சயமாக இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications