Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்குறீங்களா? அப்ப உடம்புல கொடிய நோய் இருக்கு-ன்னு அர்த்தம்..
Foot Problems And Diseases: நமது ஒட்டுமொத்த உடலையும் தாங்கிக் கொண்டிருக்கும் கால்கள் வெறும் நடப்பதற்கு மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். சில சமயங்களில் நமது உடலில் உள்ள பிரச்சனைகளையும் கால்கள் சுட்டிக்காட்டும். சொல்லப்போனால் நமது உடலில் ஏற்படும் பல மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் முதலில் கால்களில் தான் தெரியும்.
எனவே ஒவ்வொருவரும் தங்களின் கால்களில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். அப்படி கவனம் செலுத்தும் போது, பாதங்களில் சிறு மாற்றங்களைக் கண்டாலும், உடனே கவனித்து, ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி, விரைவில் சிகிச்சையை மேற்கொள்ள முடியும். இப்போது கால்களில் சந்திக்கும் எந்த பிரச்சனைகள் எல்லாம் கொடிய நோய்களின் அறிகுறியாக இருக்க முடியும் என்பதைக் காண்போம்.

பாதங்களில் வீக்கம்
பொதுவாக கால்களில் வீக்கம் ஏற்பட்டால், அது ஒரு சிறிய பிரச்சனையாக தோன்றலாம். ஆனால் அந்த வீக்கம் குறையாமல் நீடித்திருக்கும் போது, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அது ஒரு தீவிர பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் கால்களின் கீழ் மூட்டுக்களில் திரவங்கள் குவிந்து வீக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், அது இதய செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
குறிப்பாக பெண்கள் கால் வீக்கத்தை அதிகம் சந்திப்பார்கள். ஏனெனில் அவர்களின் உடலில் தான் ஹார்மோன் மாற்றங்கள் அதிகம் ஏற்படும். அதுவும் மாதவிடாய் சுழற்சி, கர்ப்ப காலம், இறுதி மாதவிடாய் போன்ற காலங்களில் ஹார்மோன்களில் நிறைய மாற்றம் ஏற்பட்டு, அதன் விளைவாக கால்களில் திரவங்கள் தேங்கி வீக்கத்திற்கு வழிவகுக்கும். குறிப்பாக இந்த வீக்கம் கணுக்கால் சுற்றி இருக்கும்.
கணுக்காலில் வலி
கணுக்காலில் தொடர்ச்சியாக வலியை சந்தித்தால், அது ஆர்த்ரிடிஸ்/கீல்வாதமாக இருக்கலாம். இந்த ஆர்த்ரிடிஸ் பிரச்சனையானது யூரிக் அமில படிகங்கள் பாதங்கள் மற்றும் கணுக்கால்களில் உள்ள மூட்டுக்களில் தேங்குவதால் ஏற்படுகிறது. ஆர்த்ரிடிஸ் காரணமாக கணுக்காலில் உள்ள மூட்டுக்களில் ஏற்படும் வீக்கமானது கடுமையான வலியையும், விறைப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே கணுக்காலில் கடுமையான வலியை சந்தித்தால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை என்று அர்த்தம்.
பாதங்களில் கூச்சம் மற்றும் மரத்துப் போவது
கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா? அதோடு அதிக கூச்ச உணர்வை சந்திக்கிறீர்களா? அப்படியானால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அது நரம்பு சேதத்தின் அறிகுறியாக இருக்லாம். பொதுவாக இப்படியான பிரச்சனை சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் வரும். ஏனெனில் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது, ஒருகட்டத்தில் அது நரம்புகளை கடுமையாக சேதப்படுத்தி, அதன் விளைவாக மரத்துப் போவது, கால் கூச்சம் போன்ற பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வைக்கும்.
சிலந்தி நரம்புகள்
சிலந்தி நரம்புகள் தோலின் மேற்பரப்பிற்கு அருகில் உள்ள சிறிய விரிந்த இரத்த நாளங்கள் ஆகும். இவை பெரும்பாலும் ஊதா, சிவப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கும். பொதுவாக இந்த சிலந்தி நரம்புகள் பாதிப்பு இல்லாதவை. ஆனால் இந்த நரம்புகள் நாள்பட்ட இரத்த ஓட்ட பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். நாள்பட்ட சிரை பற்றாக்குறை போன்ற நோய்களின் காரணமாக கால்கள் மற்றும் பாதங்களில் இந்த சிலந்தி நரம்புகள் உருவாகலாம். இது தவிர கல்லீரல் செயலிழப்பு அல்லது ஈஸ்ட்ரோஜென் ஆதிக்கம் போன்றவையும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
குதிகால் வெடிப்பு
நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாலோ, அதிக உடல் பருமன் காரணமாக பாதங்களின் அழகை கெடுக்கும் வகையில் குதிகால் வெடிப்புகள் வரலாம். ஆனால் அதையும் தாண்டி, ஹைப்போ தைராய்டு இருந்தாலும் இது ஏற்படலாம்.
குளிர்ச்சியான பாதம்
சூடான காலநிலையிலும் பாதங்கள் குளிர்ச்சியாக இருந்தால், இரத்த ஓட்டம் அல்லது நரம்பு தொடர்பான பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் ஒருவருக்கு இரும்புச்சத்து குறைவாகவோ அல்லது இரத்த சோகை இருந்தாலோ, அந்நபரின் பாதங்கள் குளிர்ச்சியாக இருக்கும். இது தவிர சர்க்கரை நோய், ஹைப்போ தைராய்டிசம் போன்றவையும் இதற்கு காரணங்களாக இருக்கலாம்.
குதிகால் வலி
குதிகால்களில் கடுமையான வலியை சந்திக்கிறீர்களா? அப்படியானால் குதிகால் மற்றும் கால்விரல்களை இணைக்கும் திசுக்களின் வீக்கத்தால் ஏற்படும் ஒரு நிலையான ப்ளான்ட்டர் ஃபாஸ்சிடிஸ் காரணமாக இருக்கலாம். இது தவிர உடலில் பொட்டாசியம், சோடியம் போன்றவற்றின் குறைபாடுகளும், குதிகால்களில் வலியை உண்டாக்கக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications