Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
அடிக்கடி விக்கல் வருதா? அப்ப உயிருக்கே உலை வைக்கும் கொடிய பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்... உஷார்...
விக்கல் என்பது அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு அனிச்சை செயலாகும். இது ஒருவருக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக விக்கலானது உதரவிதானத்தின் திடீர் சுருக்கம் மார்பு மற்றும் வயிற்றின் தசைகளை அசைக்க செய்யும் போது ஏற்படும் ஒரு அனிச்சை செயலாகும்.
சிலருக்கு விக்கல் சிறிது நேரம் மட்டுமே நீடித்திருக்கும். இன்னும் சிலருக்கு தொடர்ச்சியாக நீண்ட நேரம் இருப்பதோடு, அடிக்கடி வரக்கூடும். இப்படியான விக்கல்கள் நாள்பட்ட விக்கல்கள் என்று அழைக்கப்படுதோடு, இது ஒரு மோசமான அறிகுறியாகவும் கூறப்படுகிறது.

ஏனெனில் இப்படி தொடர்ச்சியாக வரும் விக்கல்கள் பக்கவாதத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அத்துடன் முகம் வாடி தொங்கியிருந்தாலோ, ஒரு கை மட்டும் பலவீனமாக இருந்தாலோ, மந்தமான பேச்சாக இருந்தாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
ஏனெனில் இது உடலில் உள்ள மிகவும் அபாயகரமான பிரச்சனையின் அறிகுறிகளாகும். தேசிய சுகாதார சேவையின் கூற்றுப்படி, பக்கவாதத்தின் முக்கியமான மற்றும் சற்றும் புறக்கணிக்கக்கூடாத சில அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
முகம்
ஒருவரது முகம் ஒரு பக்கமாக சாய்ந்திருந்தாலோ அல்லது ஒருவரால் சிரிக்க முடியாமல் இருந்தாலோ அல்லது வாய், கண் போன்றவை தொங்கி காணப்பட்டாலோ, அது பக்கவாதத்தின் எச்சரிக்கை அறிகுறியாகும்.
கைகள்
உங்கள் கைகள் திடீரென்று பலவீனமானாலோ அல்லது உணர்வுகள் ஏதும் தெரியாமல் இருந்தாலோ, அதாவது கைகளை அசைக்க முடியாமல் இருந்தால், அதுவும் பக்கவாதத்தின் அபாய அறிகுறியாகும்.
பேச்சு
ஒருவரது பேச்சைக் கொண்டும், அவருக்கு வரவுள்ள பக்கவாதத்தை கண்டறியலாம். எப்படியெனில் ஒருவரது பேச்சு மந்தமாகவோ அல்லது பேசும் போது வார்த்தைகள் தெளிவாக இல்லாமல் இருந்தாலோ, அவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அபாயம் உள்ளது என்று அர்த்தம்.
ஆய்வுகளின் படி, பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் போது விக்கல் வரக்கூடும். ஏனெனில் இது சுவாசத்தைக் கட்டுப்படுத்தும் மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் அறிகுறியாகும். அதற்காக விக்கல் வந்தாலே பக்கவாதம் வரும் என்றில்லை. எப்போது வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி விக்கல் ஏற்பட்டு, மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை அதிகம் சந்திக்கிறோமோ, அப்போது சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.
ஆண் மற்றும் பெண்களுக்கான பக்கவாதத்தின் அறிகுறிகள்
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வெளிப்படும் பக்கவாதத்தின் அறிகுறிகள் ஏன் வேறுபடுகின்றன என்பதற்கு பல கோட்பாடுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதில் ஒன்று, ஹார்மோன்கள் தான் முக்கிய காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுவும் பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளதால், அது மூளையில் காயம் ஏதும் விரைவில் ஏற்படாதவாறு பாதுகாக்கும். ஆனால் பெண்களின் வயது அதிகரிக்கும் போது, அவர்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவதால், ஆண்களை விட பெண்களுக்கு பக்கவாதம் வருவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.
பக்கவாதத்தின் பிற அறிகுறிகள்
அடையாளம் காணக்கூடிய அறிகுறிகளைத் தவிர, ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதற்கான பிற அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன. அவை:
* உடலின் ஒரு பக்கம் முழுமையாக முடங்குவது
* திடீரென்று பார்வை மங்கலாவது அல்லது பார்வையை இழப்பது
* உடல்நலம் சரியில்லாமை
* தலைச்சுற்றல்
* குழப்பம்
* மற்றவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள சிரமப்படுவது
* விழுங்குவதில் சிரமம்
* திடீரென்று தாங்க முடியாத அளவில் தலைவலியை சந்திப்பது
* மயங்குவது
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் அனைத்தும் பக்கவாதத்தின் முக்கியமான மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளாகும். உங்களிடம் இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால்
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications