Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கொய்யா பழத்தை இந்த நேரத்தில்தான் சாப்பிட வேண்டுமாம்.. ஏன் தெரியுமா?
பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவது நம் உடலுக்கு அதிகமான ஆரோக்கியத்தை வழங்குகிறது.. அதுமட்டுமல்லாமல் நமது உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வை அளிக்கிறது.. அத்தகைய பழங்கள் பல வகைகள் உண்டு. பழத்தின் தன்மைகேற்ப அதை வெறும் வயிற்றில், உணவுக்கு முன்பு, உணவுக்கு பின்பு, உணவுடன், படுக்கைக்கு செல்லும் போது என்று சரியாக சாப்பிட வேண்டும்.
பழங்களின் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க சரியான முறையில் சப்பிட வேண்டும்.. அந்த வகையில் கொய்யா பழம் மிகுந்த ஊட்டச்சத்து உடைய பழம்.. அதை எப்போது சாப்பிட வேண்டும்? அப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.. மேலும் இது வரை பழங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் பழங்களை சாப்பிட்டு வந்தால் இந்த பதிவி உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும்..

கொய்யா பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.. அது உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பழமாக கருதப்படுகிறது.. அதிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் 2 கொய்யா பழம் சாப்பிடனும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.. இந்த பழங்களில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.. . அத்துடன் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் இதில் நிறைந்து உள்ளன.. அது மட்டுமல்லாது நூறு கிராம் கொய்யாவில் சுமார் முந்நூறு மில்லிகிராம் அஸ்கார்பிக் அமிலம் அதாவது வைட்டமின்-சி உள்ளது. கொய்யா பழங்கள் அடிக்கடி சாப்பிடுவதால் வயிறு பிரச்சினை சரியாகும் என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
1. ஆச்சரியமளிக்கும் ஊட்டசத்துக்கள் நிறைந்தது
எல்லா சீசனிலும் அதிகமாக கிடைக்கக்கூடிய, விலை மலிவான இந்த கொய்யா பழத்தை குறைவாக மதிப்பிட வேண்டாம். விலை உயர்ந்த பல பழங்களில் இருக்கக்கூடிய சத்துக்களை விட இந்த சிறிய ஒரு கொய்யா பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. நம்ம ஊரில் விளையக்கூடிய இது போன்ற பழங்களில் பலவிதமான ஆச்சரியமளிக்கும் ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன..
2. உடல் எடை குறைய சாப்பிடலாம்
கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதிலிருந்து உங்களின் உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்த உதவி செய்கிறது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புவோர் கொய்யா பழத்தினை தினமும் சாப்பிடலாம்.
3. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம்
கொய்யாவில் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் ஆரோக்கியமாக இருப்பார்காள்..
4. மலச்சிக்கலுக்கு எளிய தீர்வு
இந்த கொய்யா பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வாக இருக்கும்.. ஒரே நாளில் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டது இந்த கொய்யா பழம் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் இந்த பழம் தொப்பையை குறைக்கும். அமிலத்தன்மை, நெஞ்சு எரிச்சல் ஆகிவற்றிற்கு தீர்வளிக்கும். அதனால் இந்த பழத்தினை மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் சாப்பிட வேண்டும்..
5. சருமம் பொழிவு பெற
கொய்யா பழத்தில் வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் சருமம் பொலிவு பெரும். மினுமினுப்புக் கூடி, தோல் சுருக்கம் குறையும். கண் கோளாறுகள் விலகும். இது உடம்பிற்கு குளிர்ச்சியைக் கொடுக்ககூடியது. அதனால் சரும பராமரிப்பை மேற்கொள்பவர்கள் மற்ற அழகு சாதன பொருட்களைக் காட்டிலும் இந்த கொய்யா பழத்தினை வாங்கி சாப்பிட்டு வர உங்களின் தோல் நல்ல பொழிவாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்..
6. கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்..?
பொதுவாகவே இந்த கொய்யா பழத்தை மாலை அல்லது இரவில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். கொய்யாவை இரவில் சாப்பிடுவதால், அதன் செரிமானமும் சரியாக நடைபெறாது. கொய்யாவை பகல் மற்றும் மதியம் மட்டுமே உட்கொள்ள வேண்டும். மதிய உணவுக்கு பின்பு சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து இந்த கொய்யாப் பழத்தை உட்கொள்வதால் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
