Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
எதுக்கெடுத்தாலும் பதட்டப்படுவீங்களா? அப்போ உங்களுக்கு எந்த மாதிரியான வேலை சரியாக இருக்கும் தெரியுமா?
Anxiety In Tamil: பதட்டம் மற்றும் கவலை என்பது ஒரு வகை மனநலக் கோளாறு ஆகும். பதட்டமாக இருக்கும் நபர் அதீத சுவாசம், வியர்த்தல் மற்றும் தூங்குவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளை சந்திக்கின்றனர். சிலர் எதுக்கெடுத்தாலும் பதட்டப்படுவது உண்டு. பதறாத காரியம் சிதறாது என்பார்கள்.
உங்களுக்கு பதட்டம் இருந்தால் அந்த வேலையை ஒழுங்காக செய்ய இயலாது. எனவே பதட்டமாக இருப்பவர்கள் தங்கள் வேலையை சரிவர தேர்ந்தெடுக்க வேண்டும். எதுக்கெடுத்தாலும் பதட்டப்படுபவர்களுக்கு எல்லா வேலையும் சிறப்பான ஒன்றாக இருக்காது.

எனவே தினசரி வாழ்வில் பதட்டத்தை சந்திப்பவர்கள் சரியான வேலையை தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் பதட்டமான நபராக இருந்தால் கீழ்க்கண்ட வேலைகள் உங்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்.
பதட்டமாக இருக்கும் நபர்கள் ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும் முன்பு எதை கருத்தில் கொள்ள வேண்டும்?
அமெரிக்காவின் கவலை மற்றும் மனச்சோர்வு சங்கம், கவலைக் கோளாறுகளை ஒரு வகை மனநிலை பிரச்சினையாக கருதுகிறது. இந்த பதட்டம் மற்றும் கவலைக் கோளாறுகள் 40 மில்லியன் பெரியவர்களை பாதிக்கிறது. எனவே அவர்கள் சரியான வேலையை தேர்ந்தெடுப்பது தினசரி சவால்களை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதே நேரத்தில் கீழ்க்கண்ட விஷயங்கள் மூலம் உங்கள் பதட்டத்தை கையாள்வதும் அவசியம்.
* நேர மேலாண்மை, நிறுவன திறன்களை பயிற்சி செய்ய வேண்டும்.
* வேலையின் சாத்தியமான சிக்கல்களை திட்டமிட்டு அவற்றை சரியாக சமாளிக்க வேண்டும்.
* உங்களுக்கு கவலைகள் இருந்தால் மற்றவரை தொடர்பு கொண்டு உதவி கேளுங்கள்
* எல்லைகளை அமைத்து, வழக்கமான இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்.
* மேசை மற்றும் பணியிடத்தை உங்களுக்கு ஏற்ற வகையில் ஒழுங்காக அமைத்துக் கொள்ளுங்கள்.
* விடுமுறையை திட்டமிட்டு கொண்டாடுங்கள்.
பதட்டத்துடன் வாழ்பவர்களுக்கு கீழ்க்கண்ட வேலைகள் ஏற்றதாக இருக்கும்.
லேப் டெக்னீசியன்
இந்த மாதிரியான வேலையில் நீங்கள் உயிரியல் மற்றும் வேதியியல் மாதிரிகளை சோதித்து பகுப்பாய்வு செய்தால் போதும். மருத்துவமனை, பல்கலைக்கழகம், ஆராய்ச்சி கூடம் ஆகியவற்றில் பணி புரியலாம். இந்த வேலை உங்கள் பதட்டத்தை நிர்வகிக்க உதவுகிறது. எனவே பதட்டத்துடன் இருப்பவர்கள் இந்த வேலையை தேர்ந்தெடுத்து சிறப்பாக செயலாற்றலாம்.
கால்நடை உதவியாளர்
கால்நடை மருத்துவர்களின் அன்றாட பணிகளுக்கு உதவுவது போன்ற வேலைகளை நீங்கள் செய்து வரலாம். விலங்குகளை கையாளுதல், உணவளித்தல் மற்றும் உடற்பயிற்சி செய்தல் ஆகியவை இதில் அடங்கும். இதன் மூலம் உங்கள் பதட்டத்தை குறைத்து அமைதியாக வாழலாம். கால்நடைகளுடன் உங்களுடைய நேரத்தை செலவிடும் போது மகிழ்ச்சி கிடைக்கிறது.
கணக்காளர்
ஆவணங்களை சரிபார்த்து நிதித் தரவை கணக்கிட்டு வரலாம். இப்பொழுது எங்கு பார்த்தாலும் இந்த கணக்காளர் பணி கிடைக்கிறது. உங்களுக்கு கணக்கிடுவதில் விருப்பம் இருந்தால் இது உங்களுக்கு ஏற்ற வேலையாக இருக்கும். உங்கள் பதட்டத்தை குறைத்து நிதானத்துடன் வேலை பார்க்க உதவுகிறது. கணக்காளர் வேலை எங்கு பார்த்தாலும் கிடைக்கக் கூடிய வேலையாகும். உங்களுக்கு நல்ல சம்பளமும் கிடைக்கும்.
நூலக பணியாளர்
அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது நூலகங்களில் நூலக பணியாளராக பணியாற்றி வரலாம். அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். பொது மக்களுக்கும் உங்களால் உதவ முடியும். நூலக பணியாளர்களுக்கு இப்பொழுது நல்ல சம்பளமும் கிடைக்கிறது.
உடற்பயிற்சியாளர்
பதட்டத்தை நிர்வகிக்க நினைப்பவர்கள் உடற்பயிற்சியாளராக பணிபுரியலாம். இதன் மூலம் சுறுசுறுப்பாக இருக்க முடியும், உங்கள் மன ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பேணிக் காக்க முடியும். மற்றவர்கள் அவர்கள் உடற்பயிற்சி இலக்குகளை அடைய அவர்களுக்கு நீங்கள் உதவி செய்யலாம். இதுவும் உங்களுக்கு நல்ல வருமானத்தை தரக் கூடிய பணியாகும்.
எழுத்தாளர்
ஒரு நபர் எப்பொழுதும் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறார். எழுதுவதன் மூலம் உங்கள் மனது ரிலாக்ஸ் ஆகிறது. எழுத்து வடிவத்தின் மூலம் உங்கள் கோபங்களையும், கவலைகளையும் வெளிப்படுத்த முடியும். இப்பொழுது எல்லாம் பகுதி நேர எழுத்தாளர் பணி கூட கிடைக்கிறது. எனவே உங்களுக்கு எழுதுவதில் ஆர்வம் இருந்தால் நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக மாறலாம். இந்த சேவை உங்கள் பதட்டத்தை நிர்வகிக்க உதவுகிறது.
மென்பொருள் வடிவமைப்பாளர்
இதற்கு உங்களுக்கு கம்பியூட்டர் பற்றி தெரிந்திருந்தால் போதும். உங்களுக்கு புரோகிராமிங் திறன் இருந்தால் இந்த பணியை தேர்ந்தெடுத்து செய்து வரலாம். கம்பியூட்டர் வேலை இப்பொழுது எங்கு பார்த்தாலும் கிடைக்கக் கூடிய வேலையாக உள்ளது. இதற்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.
கிராஃபிக்ஸ் டிசைனர்
இது பொதுவாக காட்சி உள்ளடக்கத்தை கொண்டு செய்யப்படும் பணியாகும். விளக்கப்படங்கள், புகைப்பட எடிட்டிங் மற்றும் தளவமைப்பு வடிவமைப்பு திறன்களை ஒருங்கிணைக்கும் ஒரு படைப்பு பாத்திரமாகும். ஆக்கப்பூர்வமாக இந்த வேலையை செய்யும் போது எளிதாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். உங்களுக்கு கிராஃபிக்ஸ் டிசைன் செய்யும் திறன் இருந்தால் இது உங்களுக்கு ஏற்ற பணியாகும். இப்பொழுது நிறைய கிராஃபிக்ஸ் படிப்புகளும் உள்ளன. அதை தேர்ந்தெடுத்து படித்து இந்த வேலையில் நீங்கள் அமரலாம்.
வ்வேர் ஹவுஸ் வொர்க்கர் (warehouse worker)
சரக்குகளை இறக்குதல், பங்குகளை ஒழுங்கமைத்தல் மற்றும் விற்பனை தளத்தில் பொருட்களை வைப்பது போன்ற வேலைகளை செய்து வரலாம். இரவில் வேலை தேடுபவர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும். இது உங்களுக்கு நல்ல வருமானத்தை அளிக்க கூடியது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











