Latest Updates
-
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க..
நீங்க பாத்ரூமில் பாட்டு பாடிக்கிட்டே குளிக்கும் நபரா? உங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்குதுன்னு பாருங்க..
Bathroom Singing Benefits: நாம் எல்லோரும் இந்த விஷயத்தை கண்டிப்பாக செய்து இருப்போம். குளியலறையில் இருக்கும் போது பாட்டு பாடிக் கொண்டே குளிப்பது உண்டு. அப்படி பாட்டு பாடிக் கொண்டே குளிப்பது உங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தும்.
குளியலறையில் பாட்டு பாடிக் கொண்டே குளிப்பது உங்களுக்கு எந்த மாதிரியான அனுபவத்தை கொடுக்கும் என்பது தெரியுமா? உண்மையில் குளியலறையில் இருக்கும் போது மக்கள் ஏன் பாடுகிறார்கள்? இதற்கு பின்னால் ஒரு பெரிய உளவியல் காரணம் உள்ளது. சரி வாங்க குளியலறையில் ஏன் பாட்டு பாடிக் கொண்டே குளிக்க வேண்டும், இதற்கு பின்னால் இருக்கும் நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்.

குளியலறையில் ஒரு பாட்டு
குளியலறையில் பாட்டு பாடும் போது உங்கள் குரலே அங்கு எதிரொலிக்கும். உங்கள் குளியலறையில் இருக்கும் கண்ணாடிகள், மேற்பரப்புகள் போன்றவை ஒரு தனித்துவமான ஒலிக்காட்சிகளை உருவாக்குகிறது. இந்த ஒலி அலைகள் சுவர்களில் பட்டு பல பிரதிபலிப்புக்கு உட்படுகின்றன. இது உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கிறது.
குளியலறையில் பாட்டு பாடுவதற்கு பின்னால் இருக்கும் உளவியல் கருத்துக்கள்
எல்லோருக்கும் மழையில் பாட்டு பாடிக் கொண்டே ஆட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஏனெனில் மழையில் பாட்டு பாடிக் கொண்டே ஆடுவது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அதே போல் குளியலறையில் குளிக்கும் போதும் பாட்டு பாடிக் கொண்டே ஆடுவது உங்களுக்கு ஒரு வித சந்தோஷத்தை கொடுக்கும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
குளியலறை என்பது ஒரு தனிப்பட்ட இடமாகும். இங்கு தங்கு தடையின்றி உங்கள் உணர்வுகளை நீங்கள் வெளிப்படுத்த முடியும். உங்கள் குரலில் இருந்து வரும் மெல்லிசை உங்களுக்கு உற்சாகத்தை சேர்க்கும்.
குளியலறையில் மக்கள் ஏன் பாடுகிறார்கள்?
* குளியலறையில் பாடும் போது ஒலி அலைகள் சுவரில் பட்டு எதிரொலிக்கிறது. இது ஒரு வித அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இது நம் குரலுக்கு அதிக ஆழத்தை கொடுக்கிறது. அதனால் மக்கள் குளியலறையில் பாட மிகவும் விரும்புகின்றனர்.
* மேலும் குளியலறையில் பாடும் போது அதிக நம்பிக்கை ஏற்படுகிறது. இது தடையற்ற வெளிப்பாட்டை ஊக்குவிக்கிறது. உளவியல் ரீதியாக ஆறுதல் அளிக்கிறது.
* குளியலறையில் பாடுவது உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. மன அழுத்தத்தை குறைத்து நேர்மறையான மனநிலையை தருகிறது. இது ஒட்டுமொத்த வாழ்க்கையை மேம்படுத்த உதவுகிறது.
* குளியலறையில் பாடும் போது உங்கள் கிரியேட்டிவ் திறன் அதிகரிக்கிறது. உங்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு அதன் திறன் அதிகரிக்கிறது.
* குளியலறையில் பாடுவது உங்களுக்கு ஒரு குழந்தை பருவ அனுபவத்தை கொடுக்கும். எனவே ஆண் மற்றும் பெண் என வேறுபாடின்றி பாடவே மக்கள் விரும்புகின்றனர்.
* குளியலறையில் பாடுவது உங்கள் சமூக உறவுகளை வலுப்படுத்த உதவுகிறது. இது உங்களுக்கு இனிமையான நினைவுகளை உண்டாக்குகிறது.
குளியலறையில் பாடுவது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
2004 ஆம் ஆண்டு ஆய்வின்படி குளியலறையில் பாடுவது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது குறித்து மக்களிடையே ஆராய்ந்த போது குளியலறையில் பாடுபவர்களிடம் இம்யூனோகுளோபுலின் ஏ அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது ஆன்டி பாடி நோய்த் தொற்றுக்களை தடுக்க உதவுகிறது.
நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
குளியலறையில் பாடும் போது உங்கள் நுரையீரல் செயல்பாடு மேம்படுகிறது. பாடும் போது நீங்கள் ஆழ்ந்த சுவாசம் மற்றும் மூச்சுக் கட்டுப்பாட்டை மேற்கொள்கிறீர்கள். இதனால் நுரையீரல் செயல்பாடு மேம்படுகிறது. ஆஸ்துமா, நாட்பட்ட நுரையீரல் அடைப்புக் கோளாறு, சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், புற்றுநோய் மற்றும் பல நோய்களால் ஏற்படும் சுவாச பிரச்சினைகளை குறைக்க இயலுகிறது. நுரையீரல் தசைகளை வலுப்படுத்துகிறது. இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. இது மனநிலையை மேம்படுத்துகிறது.
பேசும் திறனை மேம்படுத்த உதவுகிறது
குளியலறையில் பாடுவது உங்கள் பேசும் திறனை மேம்படுத்த உதவுகிறது. பாடுவது ஒரே நேரத்தில் மூளையின் பல பகுதிகளைத் தூண்டுகிறது. எனவே ஆட்டிசம், பார்கின்சன் நோய், பக்கவாதத்தைத் தொடர்ந்து அஃபாசியா மற்றும் பேச்சு திணறல் உள்ளவர்களுக்கு பாடுவதன் மூலம் அவர்களின் பேச்சு திறனை மேம்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்
பாடுவது வார்த்தை உச்சரிப்பை எளிதாக்குகிறது. பாடுவதன் மூலம் மக்கள் தாளத்தை கற்றுக் கொள்கின்றனர். இதன் மூலம் எளிதாக அவர்கள் மற்றவர்களிடம் கருத்துக்களை பரிமாற முடியும். எனவே குளியலறையில் பாடுவதன் மூலம் நீங்கள் இவ்வளவு நன்மைகளை பெறலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications