Latest Updates
-
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
நைட் கால்களில் இந்த பிரச்சனைகளை சந்திக்குறீங்களா? அப்ப உங்களுக்கு தீவிர எலும்பு நோய் இருக்குன்னு அர்த்தம்..
Arthritis Symptoms In Tamil: என்ன தான் குளிர்காலத்தில் காலநிலை குளிர்ச்சியாக இருந்தாலும், இந்த குளிர்காலத்தில் தான் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகம் தலைதூக்குகின்றன. குளிர்காலத்தில் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால், மிகுந்த உடல் சோர்வை சந்திப்பதோடு, இதயம் உள்ளிட்ட முக்கியமான உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
இதன் விளைவாகவே மற்ற காலங்களை விட குளிர்காலத்தில் மாரடைப்பால் நிறைய பேல மரணமடைந்து வருகின்றனர். இது தவிர மூட்டு தொடர்பான பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்கின்றனர். ஏனெனில் குளிர்காலத்தில் குளிர்ச்சியான காலநிலை மூட்டு விறைப்பு மற்றும் வீக்கத்தை அதிகரிக்கும். அதே சமயம் உடலில் இரத்த ஓட்டத்தைக் குறைத்து மூட்டு தொடர்பான பிரச்சனைகளை மோசமாக்கும்.

அதுவும் ஒருவருக்கு மூட்டு பிரச்சனைகளுடன் தொடர்புடைய ஆர்த்ரிடிஸ் என்னும் கீல்வாத பிரச்சனை இருந்தால், இரவு நேரத்தில் தூக்கம் கெடும் வகையில் ஏராளமான பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். எனவே கீல்வாத பிரச்சனையை ஒருவர் கொண்டிருந்தால், அந்நபர் சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சரியான சிகிச்சையை உடனே மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். கீழே ஒருவருக்கு ஆர்த்ரிடிஸ் இருந்தால் எந்த மாதிரியான அறிகுறிகளை இரவு நேரத்தில் சந்திக்க நேரிடும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
மூட்டு வலி
ஆர்த்ரிடிஸ் பிரச்சனையின் மிகவும் பொதுவான அறிகுறிகளுள் ஒன்று மூட்டு வலியாகும். அதுவும் குளிர்காலத்தில் மூட்டு வலி மிகவும் தீவிரமாக இருக்கும். இந்த வலியால் இரவு நேரத்தில் தூங்க கூட முடியாமல் போகலாம். இப்படி சரியான தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருந்தால், அதன் விளைவாக மிகுந்த உடல் சோர்வை பகல் நேரத்தில் அனுபவிக்க நேரிடும். எனவே தினமும் இரவு நேரத்தில் தூக்கத்தைக் கெடுக்கும் அளவில் மூட்டு வலியை சந்தித்தால், உங்களுக்கு ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
வீக்கம்
கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே காணப்படும் மற்றொரு பொதுவான அறிகுறி மூட்டு வீக்கம். குறிப்பாக இந்த வீக்கம் இரவு நேரங்களில் மட்டும் தீவிரமாக இருக்கும். குளிர்ச்சியான கால நிலை மூட்டுக்களில் திரவ தேக்கத்தை அதிகரித்து, அதன் விளைவாக மூட்டுக்களில் வீக்கத்தை உண்டாக்கலாம். எனவே அடிக்கடி இந்த அறிகுறியை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மூட்டு விறைப்பு
கீல்வாதத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அந்நபர் மூட்டு விறைப்பை அதிகம் எதிர்கொள்வார். அதுவும் இரவு நல்ல தூக்கத்தை மேற்கொண்ட பின் காலையில் எழும் போது கால் மூட்டுக்களில் பிடிப்புக்களை உணரக்கூடும். இந்த உணர்வால் தினசரி செயல்பாடுகளை கூட மேற்கொள்ள முடியாமல் போகலாம். இந்த அசௌகரியத்தில் இருந்து விடுபட சுடுநீர் குளியல் மற்றும் இரவு தூங்குவதற்கு முன் ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மிகுந்த உடல் சோர்வு மற்றும் தூக்க பிரச்சனைகள்
கீல்வாதம் ஒருவரது தினரி செயல்பாடுகளை பாதிப்பது மட்டுமின்றி, ஒருவரது தூக்கத்தையும் சீர்குலைத்து, உடல் சோர்வை அதிகரிக்கிறது. பொதுவாக ஒருவருக்கு நல்ல தூக்கம் கிடைத்தால் தான், நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் கீல்வாதம் இருந்தால் இரவு நேரத்தில் மிகுந்த வலியை சந்திக்க நேரிடுவதால், அந்த தூக்கம் கிடைக்காமல் உடல் சோர்வுக்கு வழிவகுக்கிறது. எனவே இப்பிரச்சனையை சந்தித்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
இயக்கங்களில் மாற்றம்
ஆர்த்ரிடிஸ் இருந்தால் ஒருவரது இயக்கங்கள் தான் முதலில் பாதிக்கப்படும். அதுவும் குளிர்காலத்தில் ஒருசில எளிய விஷயங்களை கூட செய்ய சிரமப்பட வேண்டியிருக்கும். எனவே உங்களின் இயக்கங்களில் வலியையோ அல்லது மாற்றங்களையோ சந்தித்தால், அதை புறக்கணிக்காமல் உடனே கவனித்து மருத்துவரிடம் இதுக்குறித்து தெரிவித்து, உடனடி சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
எனவே குளிர்காலத்தில் ஒருவர் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை அதிகம் சந்தித்து வந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால், உங்கள் நிலை மோசமாகிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications