Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
எச்சரிக்கை! நீங்க யூஸ் பண்ற டூத் பேஸ்ட்டால் கூட புற்றுநோய் வரலாமாம்.. இனி பேஸ்ட் வாங்கும் போது இத கவனிங்க...
காலையில் எழுந்ததும் அனைவரும் தவறாமல் பற்களைத் துலக்குவோம். அப்படி பற்களைத் துலக்க பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள் தான் டூத் பேஸ்ட். ஒரு மாதத்தில் நாம் எதை வாங்குகிறோமோ இல்லையோ, தவறாமல் டூத் பேஸ்ட்டை வாங்குவோம். இந்த டூத் பேஸ்ட் நமது வாய் மற்றும் பற்களில் உள்ள கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கி வாயை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
சமீப காலமாக உலகில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. நாம் உண்ணும் உணவுகள் முதல் நாம் பயன்படுத்தும் ஒருசில பொருட்கள் வரை எது வேண்டுமானாலும் புற்றுநோய்க்கு காரணியாக இருக்கலாம். அதில் ஒன்று தான் டூத் பேஸ்ட். என்ன ஆச்சரியமாக உள்ளதா?

ஆம், நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட் மூலமாகவும் புற்றுநோய் வர நிறைய வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் டூத் பேஸ்ட்களில் உள்ள குறிப்பிட்ட கெமிக்கல்கள் தான். இந்த கெமிக்கல்களை நீண்ட காலமாக பயன்படுத்தும் போது, அவை புற்றுநோயை உண்டாக்குகின்றன. இப்போது டூத் பேஸ்ட்டில் எந்த மாதிரியான கெமிக்கல்கள் இருந்தால் வாங்கக்கூடாது என்பதைக் காண்போம்.
ட்ரைக்ளோசன்
ப்ரைக்ளோசன் ஒரு ஆன்டி-மைக்ரோபியல் பொருள். இது பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் இது டூத் பேஸ்ட், சோப்புகள் மற்றும் காஸ்மெடிக் பொருட்களில் பயன்படுத்த FDA-வால் அங்கீகரிக்கப்பட்ட இரசாயன கலவை ஆகும்.
ஆனால் ஆய்வுகளில் இந்த ட்ரைக்ளோசனை நீண்டகாலமாக பயன்படுத்தி வந்தால், அது உடலில் உள்ள பல ஹார்மோன்களின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுவும் இந்த கெமிக்கல் பெண் செக்ஸ் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் முதல் தைராய்டு ஹார்மோன்கள் வரை அனைத்தின் செயல்பாடுகளையும் பாதித்து, மெதுவாக பல உறுப்புக்களின் செயல்பாடுகளையும் செயலிழக்கச் செய்து பலவிதமான புற்றுநோய்களைத் தூண்டக்கூடும். முக்கியமாக இந்த கெமிக்கலானது தோல் புற்றுநோயின் அபாயத்தைத் தான் அதிகரிக்கிறது. எனவே இந்த கெமிக்கல் உள்ள டூத் பேஸ்ட்டை பயன்படுத்தாதீர்கள்.
செயற்கை இனிப்புகள் மற்றும் ப்ளேவர்கள்
பொதுவாக சாக்கரின் போன்ற சில சேர்க்கைகள் பாதுகாப்பானதாக கருதப்பட்டாலும், புற்றுநோய்க்கான சாத்தியத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. பழைய ஆராய்ச்சி ஒன்றில், சாக்கரின் புற்றுநோயை உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் அதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. அஸ்பார்டேம் குடல் பாக்டீரியா மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீர்குலைத்து, இன்சுலின் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
டீத்தனோலமைன் (DEA)
டீத்தனோலமைன் என்னும் பொருள் தான் டூத்பேஸ்ட்டில் நுரையை உருவாக்குகின்றன. 1998 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் டீத்தனோலமைனை விலங்குகளின் மேல் தடவி வந்ததில், அவற்றிற்கு புற்றுநோய் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதே ஆய்வில் டீத்தனோலமைன் உடலில் உள்ள ஹார்மோன்களிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவது கண்டறிப்பட்டது. எனவே இந்த டீத்தனோலமைனை உணவுப் பொருட்களை சேர்ப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது.
பாராபென்கள்
பாராபென்கள் டூத் பேஸ்ட் போன்ற பல்வேறு காஸ்மெடிக் பொருட்களில் ஆயுளை நீடிக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆயினும், இவை ஈஸ்ட்ரோஜெனின் செயல்பாட்டை சீர்குலைப்பதோடு, மார்பக புற்றுநோயின் அபாயத்தையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே இந்த பாராபென்கள் நிறைந்த டுத் பேஸ்ட்டை பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே நல்லது.
எனவே நீங்கள் உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாது என்று விரும்பினால், அடுத்தமுறை டூத் பேஸ்ட் வாங்க செல்லும் போது, மேலே கெடுக்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் உள்ளதா என்பதை பார்த்து, ஒருவேளை இருந்தால், அந்த மாதிரியான டூத் பேஸ்ட்டை வாங்காதீங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications