Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
நடிகர் மோகன்லால் சுவாசத் தொற்றால் மருத்துவமனையில் அனுமதி.. இத்தொற்று எதனால் ஏற்பட்டது?
Actor Mohanlal Hospitalised Due To Viral Respiratory Infection: மிகவும் பிரபலமான முன்னணி மலையாள நடிகரான மோகன்லால் தற்போது கடுமையான காய்ச்சல், சுவாசப் பிரச்சனை மற்றும் தசை வலி காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் சுவாரத் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
64 வயதான மூத்த மலையாள நடிகரான மோகன்லால் வைரஸ் சுவாசத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்கள் மருந்து மாத்திரைகளை எடுத்து மோகன்லால் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும் மற்றும் கூட்டமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

நடிகர் மோகன்லால் குஜராத்தில் இருந்து L2:எம்புரான் படப்பிடிப்பை முடித்துவிட்டு கொச்சி திரும்பிய நிலையில், அவரது உடல்நிலையில் இப்படியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தற்போது மோகன்லால் உடல்நலம் தேதி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோகன்லால் நடித்துள்ள இந்த L2:எம்புரான் திரைப்படமானது மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல மொழிகளில் வெளியிடப்படவுள்ளது. மோகன்லாலுக்கு இப்படி சுவாச பாதைத் தொற்று ஏற்பட எது காரணமாக இருக்கலாம், வைரஸ் சுவாசத் தொற்றின் அறிகுறிகள் என்னென்ன, எவற்றை செய்ய வேண்டும் மற்றும் செய்யக்கூடாது என்பன போன்றவற்றை இப்போது காண்போம்.
சுவாச பாதைத் தொற்று
சுவாசப் பாதை தொற்று என்பது சைனஸ்கள், தொண்டை, காற்றுப் பாதைகள் அல்லது நுரையீரல் போன்ற சுவாசிப்பதில் ஈடுபடும் உடலுறுப்புகளில் ஏற்படும் தொற்று ஆகும். இந்த சுவாசப் பாதையில் பாக்டீரியா அல்லது வைரஸ் ஆகியவற்றினால் தொற்றுகள் ஏற்படலாம். இவற்றில் பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றிற்கு ஆன்டி-பாக்டீரியல் மருந்துகளை கொடுத்து சிகிச்சை அளித்து சரிசெய்யலாம்.
ஆனால் சில வைரஸ்கள் மூலம் ஏற்படும் தொற்றிற்கு, குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை என்பதால், அறிகுறிகளைக் கொண்டே சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. சுவாசப் பாதையில் ஏற்படும் பெரும்பாலான தொற்றிற்கு ரைனோ வைரஸ்கள் காரணமாக இருந்தாலும், சில சமயங்களில் கொரோனா வைரஸ்கள், இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் அல்லது பிற வைரஸ்களால் ஏற்படுகின்றன.
சுவாச பாதைத் தொற்று இருந்தால் தெரியும் அறிகுறிகள்
ஒருவருக்கு சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டால் பின்வரும் அறிகுறிகள் தெரியக்கூடும். அவை:
* சளியுடனான இருமல்
* தும்மல்
* மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு
* தொண்டைப்புண்
* தலைவலி
* தசை வலி
* மூச்சுத்திணறல் அல்லது சுவாசப் பிரச்சனை
* அதிகப்படியான காய்ச்சல்
* மிகுந்த உடல் சோர்வு
சிகிச்சைகள்
சுவாசப் பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றிற்கு காரணத்தைப் பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
* வைரஸ் - சாதாரண வைரஸ்களால் ஏற்படும் ஜலதோஷமானது சில வாரங்களில் தானாகவே சரியாகிவிடும் மற்றும் இந்த வகை தொற்றிற்கு ஆன்டி-பயாடிக்குகள் உதவாது.
* பாக்டீரியா - நிமோனியா போன்ற பாக்டிரியாக்களால் ஏற்படும் தொற்றிற்கு மருத்துவர்கள் ஆன்டி-பயாடிக்குகளை பரிந்துரைப்பார்கள். இந்த ஆன்டி-பயாடிக்குகளை முழுமையான குணமாகிவிட்டாலும், எத்தனை நாட்கள் கொடுத்துள்ளார்களோ, அத்தனை நாட்கள் தவறாமல் எடுக்க வேண்டும்.
சில நேரங்களில், தீவிரமாக சளி பிடித்திருந்தால், அந்த சளியை பரிசோதனை செய்து, அதற்கான உண்மையான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையளிப்பார்கள்.
சுவாசப் பாதை தொற்றை பரவாமல் தடுப்பது எப்படி?
* சுவாசப் பாதை தொற்று கொண்டவர்கள் முடிந்தவரை கூட்டமான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
* இருமல் அல்லது தும்மலின் போது வாயை மூடிக் கொள்ள வேண்டும்.
* கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
* பயன்படுத்திய டிஸ்யூ பேப்பரை தூக்கி எறிந்துவிட வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications