Actor Ajith: நடிகர் அஜித்துக்கு இப்படியொரு பிரச்சனையா? இதுக்கு தான் அறுவை சிகிச்சை செய்தார்களா...

Actor Ajith Health Problem: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அஜித் குமார். இவர் சிறந்த நடிகர் மட்டுமின்றி, விளையாட்டு வீரரும் கூட. ஒருபுறம் திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமையைக் காட்டி வரும் அஜித் குமார், அவ்வப்போது தனது பிடித்த பைக் ரேஸிலும் கலந்து வருகிறார்.

இவர் மிகச்சிறந்த நடிகர் மட்டுமின்றி நல்ல மனிதரும் கூட. இவர் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படப்பிடிப்பிற்காக அவ்வபோது வெளிமாநிலம் வெளிநாடுகளுக்கு பயணித்து வருகிறார்.

Actor Ajith Kumar Undergoes Surgery For Swollen Nerve Know About Cerebral Infarction In Tamil

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் அஜித் குமார் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதுவும் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்தது. அவரது உடல் பரிசோதனையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது. இச்செய்தியைக் கேட்டதும் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில் சமீப காலமாக சினிமா பிரபலங்கள் தொடர்ந்து உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதோடு, அவர்களுள் பலர் திடீரென்று உயிரிழந்து பேரதிர்ச்சியை அளித்தனர். இந்நிலையில் அஜித் குமார் மருத்துவமனையில் அனுமதி என்றதும், பலருக்கும் மனதில் பயமும், பதட்டமும் ஏற்பட்டிருக்கும்.

உண்மையிலேயே நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி இருந்ததா என்றால், நிச்சயம் இல்லை. சொல்லப்போனால் அவரது மூளை, காதுகளை இணைக்கும் நரம்புகளில் தான் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதை சர்ஜரி செய்து சரிசெய்து விட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் நடிகர் அஜித் குமாரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

TOI-ன் கூற்றுப்படி, நடிகர் அஜித் குமார் பெருமூளைச் சிதைவு நோயால் (Cerebral Infarction) பாதிக்கப்பட்டிருந்தார். சரி, பெருமூளைச் சிதைவு என்றால் என்ன என்பது குறித்து இப்போது விரிவாக காண்போம்.

பெருமுளைச் சிதைவு என்றால் என்ன?

பெருமூளைச் சிதைவு என்பது ஒரு மருத்துவ நிலை. இது மூளைக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் சிக்கல் ஏற்படும் போது உண்டாகும். மூளையில் உள்ள செல்கள் போதுமான இரத்தத்தை மற்றும் ஊட்டச்சத்தைப் பெறாமல் இருந்தால், அதன் விளைவாக மூளை நரம்புகளை வீக்கமடைந்து மூளைச் செல்கள் உயிரிழக்கத் தொடங்கும். இந்த நிலையை இஸ்கிமிக் ஸ்ட்ரோக் என்றும் அழைப்பர். இப்பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிப்பதோடு, மரணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பெருமூளைச் சிதைவு நோய்க்கான காரணங்கள்

இரத்தக்குழாயில் கொழுப்புக்கள் படிந்து ப்ளேக்குகளை உருவாக்கும் போது பெருந்தமனி தடிப்பு ஏற்படுகிறது. பெருந்தமனி தடிப்பு நோய் ஏற்பட்டால், அதன் விளைவாக மூளைக்கு இரத்த ஓட்டம் குறையும். மேலும் இந்த கொழுப்பு படிவுகள் இரத்த உறைதலைத் தூண்டி, மூளை அல்லது உடலின் பிற பகுதிகளுக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் பெருமூளைச் சிதைவு ஏற்படலாம்.

பெருமூளைச் சிதைவின் அறிகுறிகள்

* குமட்டல் அல்லது வாந்தி
* பார்வை மங்கலாக தெரியத் தொடங்குவது
* கடுமையான தலைவலி
* பேசுவதில் சிரமம்
* கை, கால்கள் மற்றும் முகத்தில் உணர்வின்மை
* சில நேரங்களில் சுவாசிப்பதில் சிரமம்
* மயக்கம்
* தீவிர நிலையில் வலிப்பு மற்றும் கோமாவுக்கும் செல்லலாம்.

யாருக்கெல்லாம் இது ஏற்பட வாய்ப்புள்ளது?

பெருமூளைச் சிதைவு பிரச்சனையானது உயர் இரத்த கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. மேலும் சர்க்கரை நோய், புகைப்பிடிப்பது, அதிகமாக மது அருந்துவது, உடல் பருமன் மற்றும் பரம்பரையில் இதய நோய் பிரச்சனையைக் கொண்டவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion