For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கதவுல கை நசுக்கி எப்பவாவது இப்படி ஆயிருக்கா?... இந்த ரத்தக்கட்டை எப்படி சரி பண்ணலாம்?

நம்மை அழுத்தமாக கிள்ளுவதால், விபத்து போன்ற காரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரத்தம் உறைந்து வலி அதிகரிக்கும். அடுத்த சில தினங்களில் அந்த இடம் கருப்பாக அல்லது நீல நிறமாக மாறிவிடும். அதன் அருகில் தொட்டா

|

இரத்தக் கட்டு ஏற்பட்ட அனுபவம் நம்மில் பலருக்கும் உண்டு. யாரவது நம்மை அழுத்தமாக கிள்ளுவதால், விபத்து போன்ற காரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் இரத்தம் உறைந்து வலி அதிகரிக்கும். அடுத்த சில தினங்களில் அந்த இடம் கருப்பாக அல்லது நீல நிறமாக மாறிவிடும். அதன் அருகில் தொட்டால் கூட ஒரு வித வலி இருக்கும். நகக் கண்களில் இரத்தக் கட்டு ஏற்பட்டால், அடுத்த சில தினங்களில் அந்த நகம் விழுந்து பின் முளைக்கும். சில நேரம் அந்த இரத்தக் கட்டு மறையாமல் அதன் சுவடு அந்த காயத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். கவலை வேண்டாம். இந்த இரத்தக் கட்டை போக்குவதற்காக வழிமுறைகளைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம்.

கால் அல்லது கை விரல்கள் கதவிடுக்கில் அல்லது வேறு எங்காவது சிக்கி காயம் ஏற்பட்டால் இரத்தக் கட்டு ஏற்படலாம் இரத்தக் கட்டு என்பது மிகவும் வலியை உண்டாக்கும். இந்த கட்டியில் இரத்தம், இறந்த அணுக்கள் மற்றும் இதர உடல் திரவங்கள் சேர்ந்திருக்கும். வேனிர்கட்டி, கிருமி அல்லது பூஞ்சை தொற்று காரணமாகவும் இரத்தக் கட்டு ஏற்படலாம். தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தின் தாக்கம், அழுத்திக் கிள்ளுவது போன்றவற்றாலும் இரத்தக் கட்டு உண்டாகலாம். இத்தகைய இரத்தக் கட்டை நிர்வகிப்பது மிகவும் கடினம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரத்தக்கட்டு

ரத்தக்கட்டு

இரத்தக் கட்டு ஏற்பட்டு வலி அதிகமாகும்போது, என்ன செய்வது என்று தெரியாமல், ஊசி எடுத்து அதனை குத்தி இரத்தத்தை வெளியே எடுக்க முயற்சிப்போம். ஒரு கட்டி தானாக குணமாகும் வரை நாம் பொறுமையாக இருக்க மாட்டோம். ஆனால் இது ஒரு தவறான செயல். இந்த கட்டியை குத்துவதால் இன்னும் பல சரும தொற்று ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கொப்பளம் வெடிக்காமல் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இரத்தக் கட்டின் மேல் ஐஸ் ஒத்தடம் தரலாம். சில வகை இரத்தக் கட்டு சில நாட்களில் கரைந்து காய்ந்து விடும். இரத்தக் கட்டின் மேல் பாண்டேஜ் போடுவதால் அந்த காயம் விரைவில் குணமடையும்.

இரத்தக் கட்டை போக்குவது எப்படி?

இரத்தக் கட்டை போக்குவது எப்படி?

இரத்தக் கட்டை பற்றி பேசும்போது , பலரும் தெரிந்து கொள்ள நினைக்கும் ஒரு விஷயம், இரத்தக் கட்டு அதிக வலியை தருமா என்பது பற்றி தான். சில நேரங்களில் இத்தகைய இரத்தக் கட்டு ஓரளவிற்கு வலியை தரலாம். ஆனால் அதை பற்றி கவலைப் பட வேண்டாம். பல நேரங்களில் இரத்தக் கட்டு தானாக வெடித்து விடும். அந்த நேரம், பாதிக்கப்பட்ட இடத்தை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை குளிர்ந்த நீரால் கழுவலாம். இதனால் அந்த இடத்தில் நுண் கிருமி பாதிப்பு மற்றும் பக்டீரியா பாதிப்புகள் நீக்கப்படும். சருமத்தின் மேல் புறம் ஒரு அன்டி பயோடிக் க்ரீம் தடவலாம். வலி நீடித்து இருந்தால் தொடர்ந்து குளிர் ஒத்தடம் தரலாம்.

இரத்தக் கட்டு எவ்வளவு நாட்கள் இருக்கும் ?

இரத்தக் கட்டு எவ்வளவு நாட்கள் இருக்கும் ?

இரத்தக் கட்டு பொதுவாக 30 முதல் 48 நாட்கள் நீடித்து இருக்கும். இறந்த சரும செல்கள் விழுந்து பின் புதிய தோல் பெறுவதற்கு இத்தனை நாட்கள் ஆகும்.

வீட்டு தீர்வை பயன்படுத்தி இரத்தக் கட்டை எப்படி போக்கலாம்?

இரத்தக் கட்டை போக்குவதற்கு வீட்டு தீர்வுகள் மிகவும் சிறந்தது. வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு சிகிச்சை அளிப்பது மிகவும் பாதுகாப்பானது மற்றும் உங்கள் வசதிக்கு ஏற்ப இதனை செய்து கொள்ளலாம். இரத்தக் கட்டைப் போக்க சில எளிய வீட்டு குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. வாருங்கள் அதனை இப்போது பார்க்கலாம்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் சிலிக்கா என்ற நுண்ணிய கனிமம் உள்ளது. இந்த கனிமம், இணைப்பு திசுக்களை வலிமையாக்க உதவுகிறது. மேலும் வெள்ளரிக்காய் குளிர்ச்சி தன்மை உடையது என்பது அனைவருக்கும் தெரிந்தது. இரத்தக் கட்டின் மீது வெள்ளரிக்கையை பயன்படுத்துவதால், வீக்கம், வலி மற்றும் அழற்சி உடனடியாக நிவாரணம் அடைகிறது. வெள்ளரிக்காயை நறுக்கி , ஒரு துண்டை இரத்தக் கட்டின் மீது வைக்கலாம்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளின் மருத்துவ மற்றும் அன்டி செப்டிக் தன்மையால் பல காலங்களாக காயங்களை குணப்படுத்த இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு ஸ்பூன் மஞ்சள், தேன் மற்றும் பன்னீர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து, இரத்தக் கட்டு பாதித்த இடத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறை தடவவும்.

கற்றாழை

கற்றாழை

அழற்சி எதிர்ப்பு தன்மை கொண்ட கற்றாழை குளிர்ச்சி தன்மை கொண்டது. கற்றாழை ஜெல்லை இரத்தக் கட்டின் மீது தடவுவதால் வலி குறைகிறது.

சந்தனம்

சந்தனம்

குளிர்ச்சி மற்றும் குணப்படுத்தும் தன்மை கொண்டது சந்தனம். கொப்பளத்தில் உள்ள சூட்டை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டது இது. ஒரு ஸ்பூன் சந்தனத் தூளுடன், சிறிதளவு பன்னீர் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவலாம். காய்ந்தவுடன் குளிர் நீரால் கழுவவும். ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறை இதனை செய்யலாம்.

வாயில் இரத்தக் கட்டு

வாயில் இரத்தக் கட்டு

வாயில் இரத்தக் கட்டு இருப்பது மிகுந்த அசௌகரியத்தை உண்டாக்கும் ஒரு வலி ஆகும். வாயில் ஏற்பட்ட இரத்தக் கட்டால், உணவை கடிப்பது, விழுங்குவது , சூடாக பருகுவது என்று எல்லாமே கடினமாக இருக்கும். இதனால் வலி மேலும் அதிகரிக்கும். கன்னம் அல்லது நாக்கை கடித்துக் கொள்வதால் இந்த இடங்களில் இரத்தக் கட்டு அடிக்கடி ஏற்படும். சில நேரம் மிகக் கடினமாக பிரஷ் செய்வதால் கூட இந்த இரத்தக் கட்டு உண்டாகலாம். ஹார்மோன் மாற்றம், குடல் இயக்கத்தில் கோளாறு, மனஅழுத்தம் , இரும்பு அல்லது வைட்டமின் பி 12 குறைபாடு, அமில அல்லது கார உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, போன்றவையும் வாயில் இரத்தக் கட்டு ஏற்படக் காரணமாக இருக்கலாம். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சில மருந்து, அல்லது உணவு ஒவ்வாமை கூட இதற்கு சில நேரங்களில் காரணமாக இருக்கலாம்.

வாயில் உண்டாகும் இரத்தக்கட்டை போக்குவது எப்படி?

வாயில் உண்டாகும் இரத்தக்கட்டை போக்குவது எப்படி?

ஊட்டச்சத்து குறைபாடால் ஏற்படும் கொப்பளங்கள் அல்லது இரத்தக் கட்டை போக்க, தேவையான ஊட்டச்சத்துகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் கட்டுப்படுத்தலாம். உணவு ஒவ்வாமை ஏற்படுகிறவர்கள் , சில ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக அமிலம் மற்றும் கார உணவுகளை தவிர்க்கலாம். மருத்துவர்கள் குறிப்பிடும் மருந்தால் ஏற்படும் இரத்தக் கட்டிற்கு மாற்றாக வேறு மருந்தை பரிந்துரைக்க கேட்கலாம். சோடியம் லாரில் சல்பேட் உள்ள மவுத்வாஷ் அல்லது பற்பசை பயன்படுத்துவதால் வாயில் உண்டாகும் இரத்தக் கட்டு தடுக்கப்படும்.

போக்குவது எப்படி?

போக்குவது எப்படி?

இந்த இரத்தக் கட்டை போக்க நீங்கள் கடைக்கு சென்று மருந்துகள் எல்லாம் வாங்க வேண்டாம். இதற்கான தீர்வு உங்கள் வீட்டு சமயலறையிலேயே உள்ளது. வாயில் உண்டான இரத்த கட்டை போக்க சில எளிய வீட்டு குறிப்புகள் இதோ உங்களுக்காக,

தக்காளி சாறு தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் வாயில் உண்டாகும் கொப்பளங்கள் மற்றும் இரத்தக் கட்டு தடுக்கபப்டும்.

தினமும் சிறிதளவு தயிர் மற்றும் வாழைப்பழம் சாப்பிடுவதால் கொப்பளங்கள் தடுக்கப்படும்.

துளசி இலையை ஒரு நாளில் இரண்டு முறை மென்று சாப்பிடுவதால் இரத்தக் கட்டு மற்றும் கொப்பளம் தடுக்கப்படும்.

புதினா எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதால் எரிச்சல் குறையும். வலியும் மறையும்.

வாயில் இரத்தக் கட்டு இருக்கும் நேரத்தில் பிரஷ் மூலம் பற்களை சுத்தம் செய்ய வேண்டாம். பற்பசையை கையில் தடவி பல் துலக்கலாம். விரலால் பற்களை மென்மையாக மசாஜ் செய்யலாம்.

ஒரு ஸ்பூன் மஞ்சளுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். மஞ்சளில் உள்ள அன்டி செப்டிக் தன்மை மற்றும் கிளிசரின் இணைந்து காயத்தை போக்கும்.

பூண்டு ஒரு நோயெதிர்ப்பு சக்தி கொண்ட உணவுப் பொருள். பூண்டு ஒரு பல்லை மென்று சாப்பிடுவதால் நாக்கில் உள்ள இரத்தக் கட்டு கரையும்.

வாயில் குளிர் ஒத்தடம் தருவதால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சிறிது நீரில் தனியா சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். இந்த நீரை கொண்டு வாயை கொப்பளித்தால் வாயில் உள்ள இரத்தக் கட்டு கரையும். ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறை இதனை செய்யலாம்.

தேங்காய் நீருடன் தேன் சேர்த்து, அதனை வாயில் ஊற்றி கொப்பளிக்கலாம். தேங்காய் நீருக்கு குளிர்ச்சி தன்மை உண்டு. தேன் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

ஆகவே, இந்த பதிவின் மூலம் இரத்தக் கட்டை கரைப்பது எப்படி என்று தெரிந்து கொண்டீர்கள். இனிமேல், இரத்தக் கட்டை ஊசி வைத்து குத்தி இன்னும் மோசமடையச் செய்யாமல் இந்த குறிப்புகள் பயன்படுத்தி எளிதான முறையில் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Get Rid Of Blood Blisters

The presence of a blister is definitely annoying, and in the case of blood blisters, they can be painful too. Such blisters usually heal on their own, but this can take a couple of days.
Story first published: Thursday, June 21, 2018, 19:30 [IST]
Desktop Bottom Promotion