For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் கொலஸ்ட்ரால் குறைய நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இவைதான்!!

கொலஸ்ட்ரால் உடலுக்கு நல்லதில்லை என்று நாம் எப்பொழுதும் கேள்விப்பட்டிருக்கிறோம். உடலில் கொழுப்பின் அளவு அதிகமாக இருக்கும் போது இதயம் சம்பந்தப்பட்ட நோய் வரும் ஆபத்து அதிகம் உள்ளது.

By Peveena Murugesan
|

நம் உடல் கொலஸ்ட்ராலை பயன்படுத்தி வைட்டமின்-டி ஐயும் உற்பத்தி செய்கிறது.இது ஆரோக்கியமான எலும்புகளுக்கு முக்கியமாகும்.80% கொலஸ்ட்ரால் நம்முடைய கல்லிரல் உற்பத்தி செய்கிறது.நாம் சாப்பிடும் உணவிலிருந்தும் கொலஸ்ட்ரால் கிடைக்கிறது.கொலஸ்ட்ரால் ரத்தத்துடன் கலப்பதில்லை.இது புரதத்தின் கலவையாகும்.2 வகையான கொழுப்பு உள்ளது. அவை நல்ல கொழுப்பு (HDL)மற்றும் கெட்ட கொழுப்பு (LDL) ஆகும்.

கெட்ட கொழுப்பில் அதிக கொழுப்பு மற்றும் குறைந்த புரதச்சத்து இருக்கிறது. நல்ல கொழுப்பு கொலஸ்ட்ராலை கல்லிரலுக்கு எடுத்துச் செல்கிறது அங்கு அது பிளக்கப்படுகிறது.

அதிக அளவு LDL ரத்தக் குழாய்களில் படிவதால் கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம்.உதாரணமாக இதயப்பிரச்னைகள்,பக்கவாதம்,உயர் ரத்த அழுத்தம்,வாஸ்குலர் நோய் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடலுக்கு தேவையான கொழுப்பின் அளவுகள் :

உடலுக்கு தேவையான கொழுப்பின் அளவுகள் :

கொலஸ்ட்ரால் (Total) -<200 mg/dl

கெட்ட கொழுப்பு -65-180 mg/dl

ட்ரை கிளிசரைடு -45-155 mg/dl

நல்ல கொழுப்பு -60 mg/dl

 1.அதிக நார்சத்து எடுக்கவும்:

1.அதிக நார்சத்து எடுக்கவும்:

அதிக நார்சத்து எடுப்பதால் கொலஸ்ட்ரால் குறைவாகவே உடலில் சேர்கிறது. நார்சத்து அதிகம் உள்ள உணவுகள்(ஓட்ஸ்,பழுப்பு அரிசி, கோதுமை,பார்லி, பழங்கள் மற்றும் காய்கறிகள் கீரை, சுரைக்காய், கேரட், தக்காளி, ஆரஞ்சு,ஆப்பிள்,கொடிமுந்திரி ,பப்பாளி,பேரிக்காய் ,பீச் ஆகியவை.மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் பசியை தூண்டாமல் நீண்ட நேரம் இருக்க உதவுகிறது.இவை அனைத்திலும் எண்ணெய் மற்றும் கொலஸ்ட்ரால் இல்லை.

2.நிறைவுற்ற கொழுப்புகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்

2.நிறைவுற்ற கொழுப்புகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்

பிட்ஸா,பர்கர் மற்றும் சீன வகை உணவுகள் ஆகியவற்றில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது.அதுமட்டுமின்றி பாமாயில்,ரெட்மீட்(ஆடு,மாடு,பன்றி),கேக்,டோனட்ஸ்,பொறித்த உணவுகள்,சிப்ஸ் வகைகள் மற்றும் ரொட்டித் துண்டுகள்

இவை அனைத்திலும் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது.இந்த வகை உணவுகள் LDL-ஐ அதிகரிக்கச் செய்து HDL-ஐ குறைத்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் பக்கவாதத்தை உருவாக்குகிறது.

ஒமேகா உணவுகள் :

ஒமேகா உணவுகள் :

எண்ணெய்,அவகேடோ,முட்டை,கோழி,சூரியகாந்தி விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

3.எடையை குறைக்க வேண்டும்:

3.எடையை குறைக்க வேண்டும்:

உடலின் எடையை குறைத்தாலே கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம். பல்வேறு ஆய்வுகளில் உயரத்திற்கேற்ற எடை உள்ளவர்களுக்கு கொலஸ்ட்ரால் சரியான அளவில் இருக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

எடையைக் குறைப்பதால் கெட்ட கொழுப்பின் அளவை 7-8% குறைக்கலாம்.எடையைக் குறைக்க சத்தான மற்றும் ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் பழங்கள், நிறைந்த உணவுகள்,புரதச்சத்து நிறைந்த பீன்ஸ்,தயிர்,குறைந்த கொழுப்பு உள்ள பால்,சீஸ் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

"ஆரோக்யமானதை உண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்"

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

3 dietary tips to reduce your cholesterol level

3 dietary tips to reduce your cholesterol level
Story first published: Friday, January 20, 2017, 14:14 [IST]
Desktop Bottom Promotion