Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
40 வயதை எட்டிய த்ரிஷா... ஆளை மயக்கும் இவரது சில லேட்டஸ்ட் லுக்ஸ்!
Trisha Birthday Special: பொன்னியின் செல்வன் என்னும் பிரம்மாண்டமான திரைப்படத்தில் குந்தவையாக நடித்த நடிகை த்ரிஷா, இன்று தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். முக்கியமாக இன்னும் இவருக்கு திருமணமாகவில்லை.
என்ன தான் த்ரிஷாவிற்கு 40 வயது ஆனாலும், அவரது அழகும் இளமையான தோற்றமும் இன்னும் சற்றும் குறையவில்லை. நாளுக்கு நாள் அவரது அழகு கூடிக் கொண்டிருக்கிறது.

அதுவும் சமீப காலமாக இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விளம்பரப்படுத்த இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அப்படி கலந்து கொள்ளும் போது அவர் அணிந்து வரும் உடைகள் ஒவ்வொன்றும் அவரை தேவதை போன்று வெளிக்காட்டுகின்றன.
த்ரிஷாவிற்கு அனைத்து விதமான ஆடைகளுமே பொருத்தமாக இருக்கும். அதுவும் புடவையில் இன்னும் அழகாக இருப்பார். இன்று த்ரிஷா தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதால், கீழே புடவையில் எடுக்கப்பட்ட அவரது சில லேட்டஸ்ட் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு எந்த லுக் பிடித்துள்ளது என்பதைக் கூறுங்கள்.
வெள்ளை மற்றும் கோல்டன் புடவை
இது சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளும் போது எடுக்கப்பட்டது. இந்த வெள்ளை மற்றும் கோல்டன் எம்பிராய்டரி செய்யப்பட்ட புடவையில் த்ரிஷா தேவதை போன்று ஜொலிக்கிறார். இந்த புடவைக்கு இவர் மேற்கொண்டு வந்த ஸ்டைல் மற்றும் ஹால்டர் நெக் ஜாக்கெட், இவரை வேற லெவலில் வெளிக்காட்டியது என்றே கூற வேண்டும்.
பிங்க் புடவை
இது சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் நிகழ்ச்சிக்கு த்ரிஷா அணிந்து வந்த புடவை. இந்த பிங்க் நிற பட்டுப்புடவையில் த்ரிஷா க்யூட்டாக உள்ளார். இந்த புடவைக்கு இவர் கழுத்தில் ஆபரணங்கள் எதுவும் அணியாமல், கை மற்றும் காதுகளில் மட்டும் கிஷன்தாஸ் நகைகளை அணிந்து வந்திருந்தார். அதுவும் இந்த புடவைக்கு இவர் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்தது, இவரை இன்னும் அழகாக காட்டியது என்றே கூற வேண்டும்.
மஞ்சள் நிற புடவை
இது சமீபத்தில் இன்ஸ்டாவில் ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்து த்ரிஷா வெளியிட்ட போட்டோ. இந்த பூ பிரிண்ட் செய்யப்பட்ட மற்றும் கோல்டன் பார்டர் கொண்ட மஞ்சள் நிற புடவையில் த்ரிஷா அழகாக ஜொலிக்கிறார். இதுவும் இந்த புடவைக்கு இவர் அணிந்திருந்த காதணி மற்றும் ப்ரேஸ்லெட் இன்னும் சூப்பராக இருந்தது.
நீல நிற புடவை
இது பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவின் போது த்ரிஷா அணிந்து வந்த புடவை. இந்த புடவையானது ஒரு லட்சம் மதிப்பு கொண்டது. இந்த புடவைக்கு இவர் அணிந்து வந்த ஜாக்கெட், வைர சோக்கர், காதணி, மேக்கப் என்று அனைத்துமே இவரை ஒரு தேவதை போன்று வெளிக்காட்டியது.
ப்ரௌன் நிற புடவை
இது பொன்னியின் செல்வன் திரைப்பட புரோமோசனின் போது த்ரிஷா அணிந்து வந்த புடவை. இந்த ப்ரௌன் நிற டிசைனர் புடவைக்கு மெரூன் நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து, கழுத்தில் சோக்கரும், கையில் அழகான ஒற்றை வளையலும் அணிந்து, உதட்டிற்கு மெரூன் நிற லிப்ஸ்டிக் போட்டு, ப்ரீ ஹேரில் வந்தது, த்ரிஷாவின் அழகை இன்னும் மெருகேற்றி காட்டியது.



Click it and Unblock the Notifications