Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
கத்ரீனா கைஃப் கலந்து கொண்ட லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ
கத்ரீனா கைஃப் இவர் பிரபல ஹிந்தி நடிகை என்பது நம் அறிந்ததாகும். ஆனால் இவரின் ஷிலாக்கி ஜவானி பாடல் பின்பு தமிழ் ரசிகர்களும் அதிகரித்து விட்டார்கள். இன்று நடந்த லெக்மீ பேஷன் வீக் ஷோவில் கலந்து கொண்டு தன
கத்ரீனா கைஃப் இவர் பிரபல ஹிந்தி நடிகை என்பது நம் அறிந்ததாகும். ஆனால் இவரின் ஷிலாக்கி ஜவானி பாடல் பின்பு தமிழ் ரசிகர்களும் அதிகரித்து விட்டார்கள். கத்ரீனா கைஃப்க்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அவர் இன்று நடந்த லெக்மீ பேஷன் வீக் ஷோவில் கலந்து கொண்டு தனது பிரகாசமான அழகினால் அனைவரையும் மிரள வைத்தார்.

அதாவது 2019 ஆம் ஆண்டு லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கத்ரீனா கைஃப் தனது ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ராவுடன் ராம்ப் வாக் செய்தார். மனிஷ் மல்ஹோத்ரா என்பவர் ஹிந்தி நடிகைகளின் ஆடை வடிவமைப்பாளராக செயல்பட்டு வருபவர். கத்ரீனா கைஃப் ஒரு வருடத்திற்கு பிறகு ராம்ப் வாக்கில் பார்த்தில் ரசிகர்கள் மிக மகிழிச்சியில் உள்ளனர்.

பேஷன் வீக் ஷோ
2018 ஆம் ஆண்டில் நடந்த லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோவிலும் கத்ரீனா கைஃப் கலந்து கொண்டு தனது அழகால் ரசிகர்களை ஈர்த்தார். அப்போதும் அவர் ஆடையை வடிவமைத்தவர் மனிஷ் மல்ஹோத்ரா ஆவர். சென்ற ஆண்டு சல்மான் கான் உடன் சேர்ந்து புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். எனவே இந்த ஆண்டும் எதிர்பார்ப்பு இருந்தபோது கத்ரீனா 2019 லெக்மீ வின்டர் பெஸ்டிவ் பேஷன் வீக் ஷோ இன்று நடைபெற்று புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஆடை
கத்ரீனா அணிந்து இருந்த ஆடையானது வடிவமைப்பாளரான மனிஷ் மல்ஹோத்ராவின் தொகுப்பான 'மஹ்ரூமிஷா' விலிருந்து வந்தது, மனிஷ் மல்ஹோத்ராவின் இந்த ஆடையானது ஒரு புதிய வழியை விடுத்தது. அதாவது எப்போதும் போல் பாரம்பரிய சிவப்பு நிறத்தை தவிர்த்து ஒரு புது விதத்தை அறிமுகப்படுத்தி கருப்பு நிற லெஹங்கா அணிந்து இருந்தார்.

லெஹங்கா
ஹிந்தி நடிகையான கத்ரீனா கைஃப் அணிந்து இருந்த லெஹங்கா முழுவதும் கருப்பு நிறமுடையது. கத்ரீனா ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து இருந்தார். அந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்களில் எந்தவித வேலைப்பாடுகளும் செய்யவில்லை. கத்ரீனா அணிந்து இருந்த பாவாடைகளில் முழுவதுமாக மனிஷ் மல்ஹோத்ரா தனது கைவண்ணத்தை தீட்டி இருந்தார். அந்த பாவாடை முழுவதும் மலர் வேலைப்பாடுகள் தீட்டப்பட்டு இருந்தன. பாவாடைகளில் மலர் எம்பிராய்டரிகள் தங்க நிற தொனியில் சிக்கலான மலர் வடிவங்களால் மிக அழகாக இடம் பெற்று இருந்தன. இவை பார்ப்பவர் கண்களை கவரும் வண்ணம் இருந்தது.

அணிகலன்கள்
கத்ரீனா கைஃப் அணிந்து இருந்த அணிகலன்கள் அவரின் அழகை இன்னும் மேன்படுத்துவதாக இருந்தது. தனது லெஹங்காவிற்கு ஈடாக விலை மதிப்பற்ற கற்கள் கொண்ட நெக்லெஸ் அணிந்து அத்துடன் ஒரு கல் கொண்ட காதணி மற்றும் இடது கையில் அணிந்து இருந்த மோதிரமும் கத்ரீனா ஆடைக்கு மிக பொருந்தி இருந்தது.

மேக்கப்
கத்ரீனா மேக்கப் என்று பார்க்கும் போது அவர் கிளாசிக் ஸ்மோக்கி கண் மேக்கப், பளபளக்கும் நியூடு லிப்ஸ்டிக், கன்னங்கள் வண்ண மயத்துடனும் சிறப்பிக்கப்பட்டு இருந்தன. மேலும் கத்ரீனா தோள்பட்டைக்கு மேல் விழுந்த அலை அலையான கூந்தல் அவரின் ஸ்மோக்கி கண்களுடன் இணைந்து கத்ரீனாவின் தோற்றத்தை நிறைவு செய்தன.



Click it and Unblock the Notifications