Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
நடிகை அதிதி ராவ் அசத்திய எஃப்.டி.சி.ஐ இந்தியா கோட்சர் வீக் 2019
நாம் காற்று வெளியிடை ஹீரோயின் அதிதி ராவ் தன்னுடைய பிரமாண்ட ஆடை மற்றும் அழகினால் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார். மேலும் அதிதி ராவ் அணிந்து இருந்த ஆடையானது வழக்கமாக அனைவரும் அணிந்து இருப்பது போல்
நம் காற்று வெளியிடை ஹீரோயின் அதிதி ராவ் தன்னுடைய பிரமாண்ட உடை மற்றும் அழகினால் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய எஃப்.டி.சி.ஐ இந்தியா கோட்சர் வீக் 2019 நிகழ்ச்சியில் ஷோ டாப்பர்களில் ஒருவராக மற்றும் நடிகையுமான அதிதி ராவ் தனது ராம்ப் வாக் மூலம் வடிவமைப்பாளர்களான பங்கஜ் மற்றும் நிதி முன்பு நடந்து பார்வையாளர்களையும் கவர்ந்தார்.

மேலும் அதிதி ராவ் அணிந்து இருந்த ஆடையானது வழக்கமாக அனைவரும் அணிந்து இருப்பது போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்ததால் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தது. அதிதி ராவ் ஆடையானது கனமானதாகவும் பெண்கள் தங்கள் திருமணத்திற்கு அணியும் லெஹங்கா போல சற்று அதிகமான ஒர்க்குகளுடன் இருந்தது. மிகவும் நவீனமான மற்றும் புதுப்பாணியான ஒரு உடையுடன் அதிதி முன்னோக்கி நடந்து வந்தார்.

ஆடை வடிவமைப்பு
அதிதி ராவ் ஆடை வடிவமைப்பு "மொசைக்" என்னும் தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இந்த ஆடையானது பங்கஜ் மற்றும் நிதி அவர்களின் முன்னால் தொகுப்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இந்த ஆடையானது அதிதியின் உடலமைப்பிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டது.

வியக்கத்தகு ஆடை
அதிதி அணிந்திருந்த உடையானது ஒரு கை முழுவதும் பிங்க் கலர் அங்கியை வித்தியாசமான முறையில் அணிந்தும் மற்றொரு கை முழுவதும் ஸ்லீவ் மூலம் வியக்கத்தகு ஆடையை அணிந்து இருந்தார். மேலும் அணிந்து இருந்த பாவாடையானது சிக்கலான மற்றும் மாறுபட்ட வடிவிலான வேலைப்பாடுகளைக் கொண்டு இருந்தது, இது மொசைக் ஒர்க் என்பதை தெளிவுபடுத்தி இருந்தனர். மேலும் அதிதியின் இந்த வருட ஆடையானது போன வருடத்துடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 2018 இல் எஃப்.டி.சி.ஐ ஷோவ்வில் பிரைடல் லெஹங்கா அணிந்து மேலே மலர்களை போன்ற ஒரு துப்பட்டா அணிந்து பார்ப்பவர் கண்களை குளிரவைத்தார்.

இளம் பெண்களுக்கு
இந்த அடையாளமானது இளம் பெண்களுக்கு ஒரு புது வரவாக இருக்கும். தற்போது கிடைக்கும் லெஹங்காக்களில் இருந்து பெண்களுக்கு சற்று வித்தியாசமான ஒன்றை அதிதி அறிமுகப்படுத்தியுள்ளார். திருமணத்திற்கு தயாராக உள்ள பெண்கள் இனி அதிதி போல் சற்று வித்தியாசமான ஒன்றை தேர்வு செய்யலாம்.



Click it and Unblock the Notifications