For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூன்று அட்டகாசமான கலர்களில் பல்வேறு புதிய அம்சங்களுடன் உங்களுக்காக வருகிறது OPPO F9 PRO

By Suganthi
|

கண்ணை பரிக்கும் மூன்று விதமான நிறங்களுடன் பேஷன் உலகின் புதிய வடிவமாக OPPO F9 Pro உங்களை சந்திக்க வருகிறது இந்த நவீன கால கட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது எல்லாருடைய அத்தியாவசிய தேவையாகி விட்டது. நிறைய பேர்களுக்கு ஸ்மார்ட் போன் இல்லாமல் நாளே கழிவதில்லை என்றே சொல்லலாம். இந்த ஸ்மார்ட் போன்கள் உங்கள் அன்பான தொடர்புகளுக்கு மட்டுமல்லாமல் வெளி உலகத்தை நின்ற இடத்திலேயே ரசிக்கவும் உதவுகிறது என்பது தான் உண்மையும் கூட.

நிறைய தொழிலதிபர்களுக்கு தங்கள் தொழில் சார்ந்த தொடர்புகளுக்கு இது தான் விரைவு போக்கு வரத்தும் கூட. இந்த ஸ்மார்ட் போன் உலகம் உங்கள் தொடர்புகளை மட்டும் இணைப்பதில்லை உங்கள் பர்சனாலிட்டியையும் மற்றவர்கள் முன்னிலையில் பறைசாற்றுகிறது.

 OPPO F9 Pro

இந்த மில்லியனியம் நூற்றாண்டில் ஸ்மார்ட் போன் என்பது ஒரு எலக்ட்ரானிக் சாதனமாக இல்லாமல் அவர்களின் வாழ்க்கை தேர்விலும், பேஷன் உலகத்திலும் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. கண்டிப்பாக இந்த பேஷன் குதிரை பந்தயத்தில் நீங்களும் ஓட நினைத்தால் புது புது அம்சங்களை வரவேற்க தயாராக இருக்க வேண்டும். அப்பொழுது தான் உங்கள் பேஷன் உலகில் வெற்றியுடன் நிறைய பயன்களையும் உங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியும்.

OPPO F9 PRO

இந்த OPPO F9 Pro உங்களுடைய வேலை, பொழுது போக்கு என்ற இரண்டுக்கும் தீனி போடக் கூடியது. இதுவரை நீங்கள் நினைத்து பார்க்காத வகையில் ரெம்ப துல்லியமான பேனல் விளம்புகளுடன் அதே நேரத்தில் பேஷனையும் அள்ளிக் கொண்டு வருகிறது. இது ஒரு சூப்பர் கிளாமர் தோற்றத்துடன் புதுமையான மாடர்ன் தொழில் நுட்பத்துடன் அடியெடுத்து வைக்க போகிறது. கண்ணை பரிக்கும் வடிவத்தில் நீர் சொட்டுகள் வழுக்குவது போன்ற டிசைனர் திரை , VOOC ப்ளாஷ் சார்ஜர், இதன் உடம்பு முழுவதும் நல்ல கிடைமட்டமான ஷேட்ஸ் நிறங்கள் என்று தனித்துவம் வாய்ந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த OPPO F9 Pro இப்பவே உங்கள் ஸ்மார்ட் போன் பட்டியலில் இடம் பெறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தனித்துவம் வாய்ந்த வளைவு நெளிவுகள்

நீங்கள் ஏற்கனவே OPPO F7 ன் அழகில் மயங்கி இருக்கும் இந்த சமயத்தில் இந்த OPPO F9 Pro கண்டிப்பாக உங்களுக்கு ஆச்சர்யத்தை வெளிப்படுத்தும். இது ஒரு "செல்ஃபி எக்ஸ்பட்" என்றே பட்டம் சூட்டலாம். உங்கள் செல்ஃபி மோகத்திற்கு தீனி போடும் விதமாகவே இந்த OPPO F9 Pro ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அப்புறம் என்ன டுவிட்டர் போன்ற வலைதளங்கள் முழுவதும் இதன் சிறப்பம்சங்கள் குறித்தே வைரலாகி வருகிறது. இந்த அழகான சாதனம் உங்களுக்காக காத்துக் கிடக்கிறது.

நிறங்கள்

இந்த OPPO F9 Pro 3 வித்தியாசமான நிறங்களில் வருகிறது. ஸ்டேரி பர்பிள், சன் ரைஸ் சிவப்பு, ட்வலைட் ப்ளூ என்று உங்களுக்கு தேர்ந்தெடுக்க எளிதாகவும் உள்ளது. வெளிச்சத்தை பொருத்து இதன் பேனல் நிறங்களும் மாறி மாறி வண்ணம் தீட்டுகிறது.

தனித்த வடிவமைப்பு

இதன் தனித்துவமான வடிவம் எல்லோருக்கும் பிடிக்கு விதமாக உள்ளது. ரெம்ப ஈர்க்கக்கூடிய பின்புற மற்றும் முன்புற ப்ரேம்கள் என்று காட்சியளிக்கிறது. இதன் மேல் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி மற்றும் உலோகம் ஒரு பிரிமியர் லுக்கை இட்டுச் செல்கிறது. இதன் கண்ணாடி பகுதி ஒரு காந்தம் போல் செயல்படுகிறது.

 OPPO F9 Pro

சார்ஜிங் திறமை

இதில் 3,500 மில்லி ஆம்பியர் அளவுள்ள ஒரு பேட்டரி, சிறந்த VOOC சார்ஜிங் தொழில் நுட்பத்துடன் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நீங்கள் வெறும் 5 நிமிடங்கள் சார்ஜ் போட்டாலே போதும் 2 மணி நேரம் தாராளமாக உங்கள் அன்பானவருடன் பேசலாம். இனி சார்ஜ் போட்டுக் கொண்டே பேச வேண்டிய தேவையில்லை

நுணுக்கமான பிக்ஸல் கேமரா

இந்த OPPO F9 Pro வின் மற்றொரு சிறப்பம்சம் நுணுக்கமான பிக்ஸல் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதில் AI பவர் டூயல் பின்புற கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் உங்களுக்கு மிகவும் க்ளாரிட்டியான புகைப்படங்களை எடுக்க முடியும்.

16 மெகா பிக்ஸல் மற்றும் 2 மெகா பிக்ஸல் என்று இரு கேமராக்கள் உள்ளன. இதுவே நீங்கள் செல்ஃபி எடுக்க முயன்றால் 25 மெகா பிக்ஸல் வரைக்கும் எடுக்க முடியும். பின்ன என்ன நீங்கள் செல்ஃபி எடுத்து தள்ளிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

 OPPO F9 Pro

இதில் சக்தி வாய்ந்த கிராபிக்ஸ் மாலி- G72 எம்பி 3 ஜிபி. யு உடன் இணைக்கப்பட்ட 2 ஷிகா கெட்ஸ் மீடியா டெக் ஹெலிகோ P60 ஆக்டோ கோர் ப்ராஷர் உள்ளது. இதில் 6 ஜி பி ரேம், 64 ஜிபி உள் சேமிப்பு மற்றும் 256ஜிபி வரைக்கும் நீங்கள் மெமரியை நீட்டிக்க இயலும்.

மேலும் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் உரிமையுடன் ColorOS 5.2 ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ OS தளத்தில் இது செயலாக்கம் பெறுகிறது. மேலும் இதிலுள்ள கூகுள் ஆப்ஜெக்ட் என்ற கருவி பொருட்களை கண்டறியவும் அதைப் பற்றிய முழு விவரங்களையும் புட்டு புட்டு வைக்கவும் உதவுகிறது.

அப்புறம் என்ன இனி இந்த OPPO F9 Pro உங்கள் கைகளிலும் பூந்து விளையாடட்டும். கிளம்புங்க சீக்கிரம்.

Read more about: oppo
English summary

New OPPO F9 Pro: Unique Design, Gradient Body, Charging Capabilities andPiece Of Engineering

The OPPO F9 Pro has hit the shelves in three distinct colour variations—Starry Purple, Sunrise Red and Twilight Blue. All three options represent a unique gradient design which emits a combination of colours that changes depending on the angle and light.OPPO F9 Pro's design is one of its major selling points.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more